For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் முக்கிய சிக்கல்கள்!!

By Super
|

ஒரு பெண் முழுமை அடைவது தாய்மை அடைந்த பின்னர் தான். அப்படிப்பட்ட முக்கியமான பருவத்தில் பெண்கள் அடையும் சந்தோஷத்தை போல, சில இன்னல்களையும் சந்திக்க நேரிடும். கருவுற்ற அந்த பத்து மாதங்களில் நல்ல படியாக குழந்தையை பெற்றெடுக்க பெண்கள் மறுபிறவியையே எடுத்து வருகிறாள். ஆனால் பெண்கள் இந்த பத்து மாதத்தில் படும்பாடு, மழலை செல்வத்தின் முகத்தை பார்த்தவுடனேயே பறந்து ஓடி விடும் என்பது உண்மையே.

பல கர்ப்பிணி பெண்களுக்கு எந்த ஒரு சிக்கலுமின்றி கர்ப்பக் காலம் அமைந்தாலும், சிலருக்கு பல சிக்கல்களுடனே கர்ப்பக் காலம் நிலைக்கிறது. இதில் ஏற்படும் பல சிக்கல்கள் கர்ப்பிணி பெண்களின் கையை மீறிய பிரச்சனைகளாகும். அது ஏன் ஏற்படுகிறது என்பதை கூட கண்டறிய முடியாது. அப்படி அவர்கள் சந்திக்கும் சில முக்கியமான ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பக்கால பிரச்சனைகளை இப்போது பார்க்கலாம்.

Top 8 Complications During Pregnancy

கருச்சிதைவு

ஒரு பெண் கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் மிகவும் இக்கட்டான காலமாகும். இந்த நேரத்தில் தான் பலருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. கடுமையான அசைவினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த மூன்று மாதத்தில் கூட இது நிகழலாம். ஆனால் அது அரிதாகவே நடக்கும். இது கருவின் இயல்பு மாற்றத்தினால் அல்லது கருப்பையின் சூழலை பொறுத்தே நடக்கிறது. சில சமயங்களில் ஹார்மோன் சமசீரின்மையால் கூட ஏற்படலாம். எனவே படுக்கையிலேயே ஓய்வு மற்றும் சரியான மருந்தை எடுத்துக் கொண்டால், கருச்சிதைவை தடுக்கலாம்.

இடம் மாறிய கர்ப்பம்

இடம் மாறும் கர்ப்பம் என்பது ஒரு அசாதாரணமான கர்ப்பமாகும். இந்த கர்ப்பத்தில் கருமுட்டை கருப்பையின் சுவர்களில் உருவாவதற்கு பதிலாக, ஃபாலோபியன் குழாயில் உருவாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இடம் மாறும் கர்ப்பம் என்பது கர்ப்பப்பைக்கு வெளியே உருவாகும் கருவாகும். இதற்கு இரத்தக் கசிவு மற்றும் வயிற்று வலியே அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் கருமுட்டையானது அடி வயிற்றிலேயோ அல்லது கருப்பையிலேயோ தங்கிவிடும். அந்த சமயத்தில், அந்த கர்ப்பத்தை உடனே கலைப்பதே ஒரே வழி. இல்லையென்றால், அது தாயின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

கர்ப்பக்கால சர்க்கரை நோய்

கர்ப்பக்கால சர்க்கரை நோய் என்பது கருவுற்றதனால் ஏற்படக் கூடிய ஒரு சர்க்கரை நோயாகும். ஏனெனில் ஏற்ற இறக்கமான ஹார்மோன் அளவினால், இன்சுலினுக்கு உடலில் உள்ள உயிரணுக்களின் ஏற்புத்தன்மையானது குறைந்துவிடும். ஆகவே இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும். இதற்கு முன் கருக்கால சர்க்கரை நோய் இல்லாத பெண்மணிகளுக்கு கூட இந்த நோய் வரலாம். இன்சுலினின் தேவைப்பாடு அளவுக்கு அதிகமாவதை கணையத்தால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்தும்.

கட்டுப்படுத்த முடியாத கர்ப்பகால சர்க்கரை நோய் பிறக்க போகும் சிசுவையும் தாயையும் வெகுவாக பாதிக்கும். இது பிரசவத்தில் சிக்கல், இறந்தே பிறக்கும் சிசு, கருவில் குறைபாடு போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஆனால் இந்த நோயை கருவுற்ற மூன்று மாத காலத்திற்கு பின் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகம். எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அவ்வப்போது கண்காணித்து, கர்ப்பக்கால உணவை சரியாக உண்டால், இந்த சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

முன்சூல்வலிப்பு (Preeclampsia)

முன்சூல்வலிப்பு என்பது அதிக இரத்தக் கொதிப்பினால் பெண்களுக்கு ஏற்படுவது ஆகும். பொதுவாக கருவுற்று 20 வாரத்திற்கு பின்னர் சிறுநீர் வழியாக ஏகப்பட்ட புரதச்சத்து வெளியேறும். இந்த வெளியேற்றம் மிதமான அளவில் இருந்து, அதிகமான அளவும் கூட இருக்கும். இது கர்ப்பக்காலத்தின் இரண்டாம் பாதியில் அவர்களுக்கு எரிச்சல்களை ஏற்படுத்தும். மேலும் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டால் சிசுவுக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து விடும். மேலும் குறைபாடான கரு வளர்ச்சி, கருக்கொடியில் சிக்கல் மற்றும் குறைந்த அளவே காணப்படும் பனிக்குடநீர் ஆகியவை தான் இதன் விளைவுகள். இந்த சிக்கல்கள் எல்லாமே முன்சூல்வலிப்பு தீவிரமடைந்தால் கண்டிப்பாக ஏற்படும். எனவே இரத்தக் கொதிப்பை கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

தகுதியற்ற கருப்பை வாய் (Incompetent Cervix)

ஒரு பெண் கருவுற்ற பின்னர், அவளின் கருப்பை வாய் சினை சளித்திரவத்தினால் சூழ்ந்து கொள்ளும். இது கிருமி மற்றும் பாக்டீரியாக்களை கருப்பைகளுக்குள் நுழையாமல் தடுக்கும். இதனால் பிரசவம் ஆகும் வரை கருப்பை உறுதியாகவும், மூடியும் இருக்கும். பிரசவம் ஏற்படும் வேளையில், இந்த திரவம் விலகி ஓடி விடுவதால், குழந்தை வெளிவர சுலபமாக இருக்கும்.

ஆனால் தகுதியற்ற கருப்பையினால், பிரசவ தேதிக்கு முன்பாகவே கருப்பை லேசாக மாறி தளர்ந்து விடும். இந்த நிலை இறுதி மூன்று மாத காலத்தில் ஏற்படும். சில நேரங்களில் இரண்டாவது மூன்று மாத காலத்தில் கூட இந்த நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தான் குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே பிரசவம் ஆகுதல், சவ்வுகளின் கிழிவு மற்றும் கருச்சிதைவு போன்றவற்றை ஏற்படுத்தும். பொதுவாக இரட்டை குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு இந்த தகுதியற்ற கருப்பை வாய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே

தீவிர கர்ப்பகால குமட்டல் (Severe Pregnancy Nausea)

பொதுவாகவே கர்ப்பமான பெண்களுக்கு அதிக அளவில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். இது உடலில் வறட்சியை ஏற்படுத்தி மயக்க நிலைக்கு தள்ளக்கூடும். இந்த நிலை பெண் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் தான் ஏற்படும். குமட்டலும், வாந்தியும் ஏற்பட முக்கிய காரணமாக அமைவது ஹார்மோன்களின் ஏற்ற இறக்கமே. இந்த நிலையை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். குமட்டல் அதிகமாக இருக்கும் போது, சலைன் ட்ரிப்ஸ் (saline drips) ஏற்றி படுக்கையில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுவர். முதல் மூன்று மாத முடிவில் இந்த குமட்டல் மெதுவாக நீங்கும். இதற்கென்று தனிப்பட்ட சிகிச்சை என்று எதுவும் கிடையாது.

தொப்புள்கொடி ப்ரீவியா (Placenta Previa)

தொப்புள்கொடி ப்ரீவியா ஏற்படும் போது தொப்புள்கொடியானது கருப்பையின் வாய் பகுதியில் அடைப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்த நிலை இறுதி மூன்று மாத காலத்தில் தான் ஏற்படும். மேலும் சில நேரங்களில் தொப்புள்கொடியின் அசைவு சுத்தமாக நின்றுப்போனால், சிசேரியன் பிரசவம் தான் செய்ய வேண்டும்.

தொற்றுகள்:

சில கர்ப்பிணி பெண்களுக்கு பாக்டீரியா மற்றும் பெண்ணுறுப்பு தொற்றுகள் ஏற்படும். இது பொதுவாக பெண்களுக்கு ஏற்படுவது தான். இதனைத் சரியான மருந்துகள் மூலம் சரிசெய்து விடலாம். குழு பி ஸ்ட்ரெப், பாக்டீரியா வஜினோஸிஸ், லிஸ்டீரியோசிஸ் சுழல் நோய் மற்றும் உணவு நஞ்சு போன்றவைகள் சில பொதுவான தொற்றுகள். தொற்றுகள் வராமல் தடுக்க, கர்ப்பிணி பெண்களின் மேல் சிறந்த முறையில் கவனம் செலுத்த வேண்டும். இது தாயை மட்டுமல்லாது, குழந்தையையும் பாதுகாக்கும்.

English summary

Top 8 Complications During Pregnancy

While a majority of women go onto have normal pregnancies, an unfortunate few have complicated pregnancies that are riddled with problems. Most of the complications that occur are beyond the control of the mother and happen for reasons that cannot be explained.
Desktop Bottom Promotion