For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்களுக்கான சரும பராமரிப்பு குறிப்புகள்!!!

By Super
|

கர்ப்ப காலத்தின் போது ஒரு பெண்ணின் உடல் குறிப்பிடத்தக்க மாறுதல்களுக்கு உள்ளாகிறது. அதிலும் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களினால் பாதிக்கப்படுவதால், உடலிலேயே மிகவும் மென்மையான பகுதியான சருமம் அதிகம் பாதிக்கப்படும்.

பல பெண்கள் கர்ப்ப காலத்தில் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதற்காக சருமத்தை கூட சரியாக பரிமரிக்காமல் இருந்தால், பின் அதிக சரும பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும். அதே சமயம் அனைத்து அழகு பொருட்களும் கர்ப்ப காலத்தில் உபயோகிக்க ஏற்புடையதாக இருக்குமென்பது இல்லை. ஒரு தாயாக போகும் பெண்ணுக்கும் மற்றும் அவர்கள் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தைக்கும் பல பொருட்கள் தீங்கு விளைவிக்கலாம். அதனால், கர்ப்பிணிகள் சரும பராமரிப்புப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த சரும பராமரிப்புப் பற்றிய தீர்வுகளினால் கர்ப்பத்தை பாதிக்கும் காரணிகளை அறிந்துக் கொள்ளவும், சரியான சரும பராமரிப்பு தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டியும் ஐந்து பிரத்யேக குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூரிய வெப்பத்தைத் தவிர்க்கவும்

சூரிய வெப்பத்தைத் தவிர்க்கவும்

கர்ப்பிணி பெண்கள் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, சருமத்தின் உணர்திறன் அதிகமாவதற்கு ஆளாவார்கள். இதன் விளைவாக, அவர்களது சருமம் கருமை அடைதல் மற்றும் நிறமூட்டல் ஆகிறது. ஹார்மோன் சமநிலையின்மையை தவிர்த்தல் நடைமுறையில் இல்லை. ஆனால் நிச்சயமாக சூரிய ஒளியில் வெளியே செல்வதை தவிர்க்க முடியும். அதற்கு வீட்டின் உள்ளேயே இருக்க முயற்சிக்கவும். ஒருவேளை வெளியே செல்ல நேர்ந்தால், எப்பொழுதெல்லாம் வெளியில் செல்கிறீர்களோ, அப்பொழுது உடலில் சூரிய ஒளிப்படுமிடம் மூடி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறிப்பாக முகத்தில் விழும் சூரிய கதிர்களைத் தடுக்க ஒரு தொப்பி அணிந்து செல்வது நல்ல முறை ஆகும்.

சன் பிளாக் பயன்படுத்தவும்

சன் பிளாக் பயன்படுத்தவும்

உடலில் சூரிய ஒளி முற்றிலும் படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் கார் மற்றும் வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியை, கண்ணாடி மூலம் தடுத்தாலும், அதிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, தோல் மருத்துவர்கள் குறைந்தது SPF30++ உள்ள ஒரு சன் பிளாக் க்ரீமை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். சூரிய ஒளியின் கடுமையை தணிக்க, இந்த சன் பிளாக் க்ரீம் 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்வதால், சூரிய ஒளி கடுமையாவதற்கு முன்பு காலையிலேயே இதனை பூசிக் கொள்ள வேண்டும். மேலும் அதன் பின்னரும் சன் பிளாக் க்ரீமின் விளைவு நீடித்திருக்க வேண்டுமெனில், ஒவ்வொரு 3-4 மணிக்கு ஒரு முறை பூச வேண்டும்.

இரசாயன பொருட்களிலிருந்து விலகியிருக்கவும்

இரசாயன பொருட்களிலிருந்து விலகியிருக்கவும்

கர்ப்பிணி பெண்கள், அவர்களுக்கும் மற்றும் பிறக்காத குழந்தையின் உடல்நிலைக்கு துன்பம் விளைவிக்க காரணமாக இருக்கும் ஒவ்வாமை பொருட்களிலிருந்து கட்டாயம் விலகி இருக்க வேண்டும். எப்போதும் பயன்படுத்தும் பொருட்கள் பாதுகாப்பான பொருட்களாக உள்ளனவா என்றும் மற்றும் அது குழந்தைக்கு எந்த எதிர்வினையும் உண்டாக்காது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஹைட்ரோகுவினோனை, ஸ்டீராய்டுகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் ப்ளிச்சிங் பொருட்களை தவிர்த்தல் சிறந்ததாகும்.

ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் பயன்படுத்தவும்

ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் பயன்படுத்தவும்

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சரும நிற மாற்றங்களின் சிகிச்சைக்கு ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் பாதுகாப்பான பொருளாக கருதப்படுகிறது. ஏனெனில் அவைகளில் இயற்கையில் கிடைக்க வேண்டிய தேவையான பொருட்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக க்ளைகோலிக் அமிலம் மற்றும் லாக்டிக் அமிலம் இருக்கும். க்ளைகோலிக் அமிலம் கரும்பிலிருந்தும் மற்றும் லாக்டிக் அமிலம் பாலிலிருந்தும் பெறப்படுகிறது. இதிலிருக்கும் வினைப்பொருட்கள் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனினும், சன் பிளாக் க்ரீமையும் அதே நேரத்தில் சேர்த்து பயன்படுத்தப் பட வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை க்ளைகோலிக் அமிலமும், சரும வறட்சியை லாக்டிக் அமிலமும் சரிசெய்யும்.

தோல் நோய் நிபுணரை பார்க்கவும்

தோல் நோய் நிபுணரை பார்க்கவும்

தாயாகப் போகும் எல்லா பெண்களுக்கும் எப்பொழுதும் சரும தடிப்புகள், சரும அரிப்பு அல்லது பிற சரும பிரச்சனைகளை கூர்மையாக கவனிக்க வேண்டும். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் ஒரு சரியான தோல் நோய் நிபுணரை பார்த்து, தகுந்த ஆலோசனையைப் பெற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Skin Care Tips For Pregnant Women

Not all cosmetic products are compatible during pregnancy and there are several ingredients that may harm you as a mother-to-be or the baby inside your womb. Therefore, you must be careful about your skin care regime. This Skin Solutions helps you get acquainted with the factors that may affect your pregnancy and lists five exclusive tips to select the right skin care product.
Desktop Bottom Promotion