For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாத வறட்சியை தடுக்க சில டிப்ஸ்...

By Maha
|

வறட்சியான மற்றும் அரிப்புள்ள பாதம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது சாதாரணம். பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது தான் குதிகால் வெடிப்புகள் ஏற்படும். பொதுவாக கர்ப்பத்திற்கு முன்னர் இருந்த சுறுசுறுப்பு, கர்ப்பமாக இருக்கும் போது இல்லாததால், பாதங்கள் வறட்சியடைந்து வெடிப்புக்களை உண்டாக்கிவிடுகிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும், சிறிது நேரம் ஒதுக்கி, பாதங்களை முறையாக பராமரித்து வந்தால், பாதங்களை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, ஹார்மோன்களின் மாற்றத்தினால், சருமத்தில் இருந்து எண்ணெயானது எளிதில் வெளியேறிவிடுவதால், அது பாதங்களில் அதிகப்படியான வறட்சியை உண்டாக்கிவிடுகின்றன. அதிலும் கர்ப்பத்தின் போது வறட்சியை தடுக்க வேண்டுமானால், தினமும் அதிக அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் குடிக்கும் நீர் அனைத்தும், வளரும் குழந்தைக்கு தேவைப்படுவதால், பாதங்களுக்கு நீர்ச்சத்து கிடைப்பது கஷ்டம். எனவே கர்ப்பமாக இருக்கும் போது, பாதங்களுக்கு சற்று அதிக அளவில் பராமரிப்பு வழங்க வேண்டும்.

சரி, இப்போது அந்த பாத வறட்சியை தடுக்க கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டுமென்று ஒருசில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

பாதங்கள் வறட்சியின்றி மென்மையாக இருக்க வேண்டுமானால், பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசர் தடவி, நல்ல காட்டன் சாக்ஸ் போட்டுக் கொள்ளுங்கள். ஒருவேளை மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியும் வறட்சி போகவில்லை என்றால், மருத்துவரை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம் அல்லது லோசனை பயன்படுத்துங்கள்.

நல்ல பாக்டீரியல் சோப்பு

நல்ல பாக்டீரியல் சோப்பு

தோல் நிபுணர்களை ஆலோசித்து, அவர்கள் சொல்லும் ஆன்டி-பாக்டீரியல் சோப்பு கொண்டு பாதங்களை கழுவுங்கள். இதனால் பாதங்களில் வெடிப்புகள் இருக்கும் போது, எந்த ஒரு தொற்றுகளும் இல்லாமல் இருக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சை சாற்றில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவி, பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசர் தடவினால், பாத வறட்சி மற்றும் குதிகால் வெடிப்புகளை தடுக்கலாம்.

குளியல் எண்ணெய்

குளியல் எண்ணெய்

குளிக்கும் முன், அந்த நீரில் சிறிது எண்ணெய் ஊற்றி, பின் அதில் குளித்தால், சரும வறட்சியை தடுக்கலாம். அதிலும் ஆலிவ் ஆயில், கிரேப் சீடு ஆயில் மற்றும் ஜிஜோபா ஆயில் போன்றவற்றை பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

மெருகேற்ற உதவும் கற்களைக் கொண்டு, பாதங்களை நன்கு கழுவிய பின்னர், பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு பாதங்களை மசாஜ் செய்து, ஒரு பிளாஸ்டிக் கவர் கொண்டு கால்களை கட்டி, 1 மணிநேரம் கழித்து கவரை கழிற்றினால், பாதங்கள் நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.

சன் ஸ்க்ரீன்

சன் ஸ்க்ரீன்

கர்ப்பமாக இருக்கும் போது SPF 15 கொண்ட சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்தினால், பாதங்களில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies For Dry Feet During Pregnancy

There is the chance of skin getting dry more quickly at the time of pregnancy as extreme body fluids are needed to maintain the growing baby. Here are some of tips to treat dry feet during pregnancy.
Story first published: Thursday, October 3, 2013, 18:28 [IST]
Desktop Bottom Promotion