For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் வாய் மற்றும் பற்களை பராமரிக்க சில எளிய வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

கர்ப்ப காலத்தில் அதிக விஷயங்களில் உங்களின் கவனம் இருக்கும். ஆனால் வாய் மற்றும் பற்களின் பாதுகாப்பை எளியது என நினைத்து விட்டுவிடக் கூடாது. கர்ப்ப காலத்தில் வாயின் பாதுகாப்பை கருதும் போது, கவர்ச்சியான சிரிப்பை விட பற்களின் பராமரிப்புக்கு அதிக பங்குள்ளது. சுகாதாரமில்லாத வாயினால் ஈறுகளில் தொற்று மற்றும் விக்கம் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் சுரப்பிகளில் நிகழும் மாற்றங்களால் ஈறுகளில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகும். இக்காரணங்களால் கர்ப்ப காலத்தில் வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.

கருத்தரிக்கும் முன்னரே பல் மருத்துவரிடம் அப்பாயின்ட்மன்ட் வாங்கி விடுவது நல்லது. ஏனெனில் உங்களின் வாய் மற்றும் பற்களின் நலத்தை தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைப்பதால் பற்சிதைவு, ஈறுகளில் வீக்கம் மற்றும் துர்நாற்றம் வருவதை தவிர்க்கலாம்.

Oral Care During Pregnancy

தினமும் பல் துலக்குதல், ஃப்ளாஸிங் செய்தல், சரியான உணவு முறையை பின்பற்றுதல் மற்றும் தவறாமல் பல் மருத்துவரை அணுகுதல் போன்றவை கர்ப்ப காலத்தில் உங்களின் வாய் மற்றும் பற்களின் நலத்தை சிறக்க வைக்கும். அதோடு இன்னும் அதிக விஷயங்களை பற்களின் பாதுகாப்பிற்காக செய்யலாம். கர்ப்ப காலத்தில் நல்ல வாய் மற்றும் பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்களை இங்கே கொடுத்துள்ளோம்.

இரு முறை பல் துலக்குதல்: ஒரு நாளுக்கு இரு முறை பல் துலக்குவதை மறந்து விடக் கூடாது. உணவருந்திய பின் ஒவ்வொரு முறையும் வாயை கழுவவும். இச்செயல் எந்த ஒரு நோயும் வராமல் காக்கும். மார்னிங் சிக்னஸ் உங்களுக்கு அவஸ்தைகளை தந்தால் வேறு ஏதாவது சுவை கொண்ட பற்பசையை பயன்படுத்துவது நல்லது.

நாவை சுத்தப்படுத்துதல்: கர்ப்ப காலத்தில் நாவை சுத்தம் செய்வது பற்களை சுத்தப்படுத்துவதற்கு நிகராகும். வாயை சுத்தப்படுத்தும் போது நாக்கை மறந்து விடக் கூடாது. பல் துலக்கும் போது அதை வைத்தே நாவையும் சுத்தம் செய்ய முடியும். நாக்கை தூய்மைபடுத்தும் கருவியை பயன்படுத்தும் போது கீரல்களும் சில சமயம் இரத்தமும் வர கூடும்.

ஃப்ளோரைடு குறைவாக பயன்படுத்துதல்: எந்த ஒரு பற்பசையாயினும், வாய் கழுவும் திரவமாயினும் அதில் ஃப்ளோரைடு கண்டிப்பாக கலந்திருக்கும். இவை பற்களை திடப்படுத்தி பல்லின் மேல் உள்ள பகுதியை திடப்படுத்தி பல் சொத்தை வராமல் பார்த்துக் கொள்ளும். ஆனால் இதை அதிக அளவு பயன்படுத்த நேரிட்டால் பற்களில் வெள்ளை புள்ளிகள் வர வாய்ப்புக்கள் உள்ளது.

கால்சியம்: கர்ப்ப காலத்தில் பற்களையும் அதன் சார்ந்த உறுப்புகளையும் நாம் நன்றாக பராமரிப்பது அவசியம். இந்த சமயத்தில் பற்களை ஆரோக்கியமாக வைக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு அதிக அளவு கால்சியம் தேவைப்படுகின்றது. எனவே, நாம் அதை தேவையான அளவு உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் கருவின் வளர்ச்சிக்காக பற்களிலிருந்து கால்சியம் எடுக்க நேரிடும்

ஃப்ளாஸ்: பற்களின் சுகாதாரத்தை கர்ப்ப காலத்தில் மேம்படுத்துவது அவசியம். அதை பற்களுக்கிடையில் சுத்தம் செய்யாமல் பற்களை சுத்தப்படுத்துவது இயலாத காரியம். கர்ப்ப காலத்தில் இதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஃப்ளாஸ்களை கீழ் இருக்கும் ஈறுகளிலிருந்து மேல் நோக்கி இருக்கும் பல் வரை இழுத்து செய்வதன் மூலம் சுத்தமான பல் இடைகளை பெறமுடியும்.

சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்த்தல்: கர்ப்ப காலத்தில் இனிப்பாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க வேண்டும். கர்ப்ப கால பல் பாதுகாப்பை முன்னிட்டு சர்க்கரை ஆகாரங்களை தவிர்ப்பது நல்லது. வாயிலுள்ள பாக்டீரியாக்கள் வாயில் தங்கிய இனிப்புகளை உடைத்து அமிலங்களை சுரக்க நேரும். இவை பற்களை மாசு படுத்தும்.

சுத்தமான பழக்கங்கள்: புகைப்பிடிப்பதும், போதைக்கு பயன்படும் மருந்துகளும் கர்ப்பத்திற்கும், பற்களுக்கும் மிகவும் தீங்கானவை. கர்ப்ப காலத்தில் இந்த பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும். இவை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைக்கும் தீங்கானவை.

பல் மருத்துவரிடம் ஆலோசனை: பற்களின் ஆரோக்கியத்தை கருதி ஒரு பல் மருத்துவரை சந்தித்தல் சிறந்ததாகும். கர்ப்ப காலத்தில் எந்த வித மருத்துவ சிகிச்சைகளையும் எடுக்க முடியாதாகையால், கர்ப்பத்திற்கு முன்பே ஒரு முறை உடலை பரிசோதித்து பார்த்துவிட்டால் நன்மை தரும்.

சத்தான உணவை உண்பது: கர்ப்ப காலத்தில் வாய்ப் பகுதியை பாதுகாக்க விரும்பினால் சத்தான சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் பொருட்கள் போன்ற பாலாடை கட்டி, இனிப்பற்ற தயிர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை கலந்த பழச்சாறு மற்றும் குளிர் பானங்களை அருந்துவதை குறைத்தால் நலம் தரும்.

English summary

Oral Care During Pregnancy

Regular brushing and flossing, eating a balanced diet and visiting your dentist regularly will help you keep your oral care during pregnancy perfect. Along with that, you can do some more things for dental hygiene during pregnancy. Below are some tips to help you perform good oral care during pregnancy.
Story first published: Wednesday, December 18, 2013, 18:11 [IST]
Desktop Bottom Promotion