For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டலைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

By Maha
|

கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் குமட்டல் ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் இத்தகைய குமட்டல் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். எப்படியெனில் சில பெண்களுக்கு ஆறாவது வாரத்திலிருந்து 12-14 ஆவது வாரம் வரை இருக்கும். இது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும், அவை குமட்டலை உண்டாக்கி, வாந்தியை ஏற்படுத்தும். மேலும் சில பெண்களுக்கு உணவுகளை பார்த்தாலே குமட்டல் உண்டாகும்.

எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு, ஒருசில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றை குமட்டல் ஏற்படும் போது செய்தால், குமட்டல் பிரச்சனையானது விரைவில் நின்றுவிடும். சரி, இப்போது அந்த இயற்கை வைத்தியங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

Natural Home Remedies for Pregnancy Nausea
* குமட்டல் வராமல் இருப்பதற்கு, இரவில் தூங்கும் முன், சிறிது பிஸ்கட் அல்லது பிரட் போன்றவற்றை சாப்பிட்டு தூங்கினால், காலையில் ஏற்படும் சோர்வு மற்றும் மயக்க நிலை நீங்குவதோடு, குமட்டலும் வராமல் இருக்கும். மேலும் ஒவ்வொரு 2-3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஏதாவது சாப்பிட்டு வந்தாலும், குமட்டலைத் தடுக்கலாம்.

* இஞ்சி டீ, எலுமிச்சை டீ, சாமந்தி டீ, புதினா டீ, துளசி டீ போன்றவற்றை பருகினாலும், காலையில் ஏற்படும் சோர்வு மட்டுமின்றி, குமட்டலும் வராமல் இருக்கும்.

* குமட்டல் ஏற்படும் போது புதினா, ஆரஞ்சு அல்லது எலுமிச்சை அல்லது இஞ்சி போன்றவற்றை வாயில் போட்டுக் கொண்டால், உடனே குமட்டலானது நின்றுவிடும்.

* புதினா அல்லது லாவெண்டர் எண்ணெயை வைத்து, உடலில் மசாஜ் செய்வதன் மூலமும் அதிலிருந்து வரும் நறுமணமுள்ள வாசனையால், குமட்டலானது தடைபடும்.

* பிரசவத்திற்கு முன் செய்யக்கூடிய யோகா, தியானம், அரோமாதெராபி அல்லது அக்குபஞ்சர் போன்றவற்றை செய்வதன் மூலமும் குமட்டலை தடுக்கலாம்.

* தினமும் லேசான உடற்பயிற்சி மற்றும் நல்ல காற்றை சுவாசிப்பதன் மூலம் குமட்டல் உணர்வைத் தவிர்க்கலாம்.

இவையே கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டலைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள். வேறு ஏதாவது வழி தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Natural Home Remedies for Pregnancy Nausea | கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டலைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள்!!!

As the name itself indicates, Pregnancy Nausea is a condition in which pregnant women experience nausea and uneasiness, usually during the first trimester of pregnancy. Here are some of the home remedies given.
Story first published: Monday, April 8, 2013, 18:28 [IST]
Desktop Bottom Promotion