For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாயு தொல்லையை சமாளிக்க சில எளிய வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

கர்ப்ப காலங்களில் வாயு பிரச்சனை வருவது என்பது கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகும். எண்ணம், சுவை, உடல் மற்றும் மன ரீதியில் என பல்வேறு மாற்றங்களை நீங்கள் கர்ப்ப காலங்களில் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் சாதரணமாக செய்யக் கூடிய விஷயங்களை கர்ப்பிணிகளால் செய்ய முடியாது மற்றும் அவர்கள் கர்ப்பத்திற்கு முன்னர் செய்த சாதாரண வேலைகள் கூட இப்பொழுது கடினமாகத் தோன்றும். கர்ப்பிணிகளுக்கு வாயு பிரச்சனை வருவதற்கு இதுதான் முதன்மையான காரணமாகும்.

கர்ப்பம் தரித்ததை தங்களுக்கு கிடைத்த வரமாக கருதி வரும் பெண்களும் கூட, இந்த வாயு பிரச்சனையால் அவதிப்பட்டு மோசமான நிலைக்கு சென்று விடுவார்கள். எனவே, தானாகவே மருந்துகளை தேர்ந்தெடுக்காமல், முறையான மருத்துவ ஆலோசனைகளை கர்ப்பிணிகள் பெற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. கர்ப்ப காலங்களில் ஆரோக்கியமான செயல்பாடுகளை செய்து வருவது, கர்ப்பத்தை சுவையான அனுபவமாக மாற்றி விடும்.

கர்ப்ப காலத்தில் வாயு பிரச்சனை வருவதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களே முதல் காரணமாக உள்ளன. ப்ரோகெஸ்டெரோனின் அளவு அதிகரிப்பதன் காரணமாக குடல் தசைகள் விரிவடைவதால், செரிமானம் செய்யும் அளவு குறைந்து விடும். மேலும், உணவு முறைகளில் மாற்றங்கள் செய்வதும் கூட வாயு பிரச்சனை வரக் காரணமாக இருக்கும். இவ்வாறு கர்ப்ப காலங்களில் வரும் வாயு பிரச்சனைகளுக்கான சில தீர்வுகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த அளவில் உணவு சாப்பிடுதல்

குறைந்த அளவில் உணவு சாப்பிடுதல்

மிகவும் அதிகமான உணவை சாப்பிடுவதற்குப் பதிலாக, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் வாயு பிரச்சனை வருவதை தவிர்க்க முடியும். ஏனெனில், உங்களால் அதிகமான உணவை அந்நேரங்களில் சரியாக செரிமானம் செய்ய முடியாது. முறையான செரிமானம் நிகழாத போது, வயிறு உப்பவும், வாயு உருவாகவும் கூடும்.

மெதுவாக சாப்பிடுங்க!

மெதுவாக சாப்பிடுங்க!

'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்ற வார்த்தைக்கு இணங்க மெதுவாக மென்று தின்று உணவை ருசி பார்ப்பதில் நன்மை உள்ளது. இவ்வாறு சாப்பிடுவதன் மூலம், வாயிலேயே உணவின் ஒரு பகுதி செரிமானம் ஆகிவிடும். வாயில் உள்ள உமிழ் நீரை உணவுடன் நன்றாக கலக்கச் செய்வதன் மூலம், முறையான செரிமாண் நிகழச் செய்ய முடியும். ப்ரோகெஸ்டெரோனின் செயல்பாடுகளால் உங்களுடைய குடலின் செயல் திறன் சற்றே குறைந்திருக்கும். எனவே உணவை நன்றாக மென்று தின்றால் வாயு பிரச்சனையை கர்ப்ப காலங்களில் தவிர்க்க முடியும்.

குடிப்பதில் கவனம் செலுத்துங்கள்

குடிப்பதில் கவனம் செலுத்துங்கள்

சாப்பிடும் போது தண்ணீர்; குடிப்பதை தவிர்க்கவோ அல்லது குறைவாக தண்ணீர்; குடிக்கவோ முயற்சி செய்யுங்கள். சாப்பிடும் போது குடிக்கும் தண்ணீர் செரிமானத்திற்கான என்ஸைம்களை நீர்த்துப் போகச் செய்து, செரிமானம் ஆகும் வேகத்தை குறைத்து விடுகிறது. இதன் காரணமாகவும் வாயு பிரச்சனை ஏற்படும். நேரடியாக டம்ளரில் தண்ணீரை எடுத்து குடிக்கவும், ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டாம்.

மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்

மலச்சிக்கலுக்கு தீர்வு காணுங்கள்

கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல் ஏற்பட்டால் வாயு உருவாகி வலி எடுக்காமல் இருக்க போதுமான கவனம் செலுத்தவும். கர்ப்பிணிகளுக்கு சாதாரணமாகவே மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகள் வரும். நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவிற்கு நார்ச்சத்துக்களை சேர்த்துக் கொள்ளவும். கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.

வாயு உருவாக்கும் உணவுகள் வேண்டாமே!

வாயு உருவாக்கும் உணவுகள் வேண்டாமே!

கர்ப்ப காலங்களில் வாயு உருவாக ஏதுவான உணவுகளை சாப்பிட வேண்டாம். உணவின் மூலம் எழும் பிரச்சனைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதால், உங்களுக்கு ஏற்ற உணவை சரியாக தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, லாக்டோஸ் சத்து ஏற்றுக் கொள்ளாத நபர்களுக்கு, பால் பொருட்கள் கர்ப்ப காலங்களில் ஒவ்வாது. ஆனால், மற்றவர்களுக்கு இது ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவாக இருக்கும்.

தேவை சுறுசுறுப்பு

தேவை சுறுசுறுப்பு

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உடற்பயிற்சிகளை செய்யவும். நீங்கள் உடற்பயிற்சியின் போது கரைக்க வேண்டிய திறன் மற்றும் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடவும். கர்ப்ப காலங்களுக்கு தகுதியான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வரவும். யோகாசனம் செய்வதன் மூலமாக உங்களுடைய செரிமான உறுப்புகளை சுறுசுறுப்பாக செயல்படச் செய்ய முடியும்.

வெந்தயம்

வெந்தயம்

ஒரு கை வெந்தயத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில், வெந்தய விதைகளை வெளியில் எடுத்து விட்டு, அந்த தண்ணீரை குடியுங்கள். வயிற்று வலியும், கேஸீம் போன இடம் தெரியாது. இந்த எளிமையான வீட்டு நிவாரணியை பயன்படுத்தி கர்ப்ப கால வாயு பிரச்சனையை சமாளிக்க முடியும்.

வயிற்றை நிரப்புங்கள்

வயிற்றை நிரப்புங்கள்

காலை நேர உடல் நலக் குறைவு மற்றும் பிற உடல் ரீதியான பிரச்சனைகளால், கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவின் அளவு சற்றே குறைந்திருக்கும். எனவே, குடல்களில் உள்ள பயன்படுத்தாத வாயுட்ரிக் சாறு வயிற்றை உப்பச் செய்து, சுகாதாக் கேட்டை ஏற்படுத்தும்.

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்கள்

உடலுக்கு நன்மை பயக்கும் விஷயங்கள் எதுவும் கார்போனேட்டட் பானங்களில் இருப்பதில்லை. எனவே, கர்ப்பிணிகள் இந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது அவசியமாகும். இது நேரடியாக வாயு உருவாக்கும் பகுதிகளை தூண்டி விட்டு, உங்களை வாயு பிரச்சனையை உடனடியாக எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Deal With Gas Problem During Pregnancy

Gas problem during pregnancy happens mainly due to the physical changes happening during pregnancy. The change in food habits can also cause gas problems during pregnancy. Here are some remedial steps which you can take to treat your gas problem during pregnancy.
Story first published: Friday, December 6, 2013, 20:20 [IST]
Desktop Bottom Promotion