For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

By Maha
|

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, ஆரம்ப காலத்தில் உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்ப காலத்தில் சில உணவுகளால் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அப்படி அளவுக்கு அதிகமானால், ஆரோக்கியமான உணவும் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு கர்ப்பத்தின் ஆரம்பத்தில் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டுமென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு எந்த உணவுகளையெல்லாம் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டுமென்று சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து, குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளதால், இதனை அளவாக உட்கொள்வது மிகவும் நல்லது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

கர்ப்பிணிகள் அனைத்து வகையான பருப்புக்களையும் பயமின்றி சாப்பிடலாம். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் வளமாக இருப்பதால், இது திசு மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலங்கள் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கும். எனவே ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அனைத்து வகையான நட்ஸ்

அனைத்து வகையான நட்ஸ்

கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் நட்ஸ்களை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு புரோட்டீன் அதிகம் கிடைக்கும்.

பன்னீர்

பன்னீர்

பன்னீர் பிடிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். எனவே இத்தகைய பன்னீரை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டு வருவது நல்லது. இதனால் அதிலிருந்து கால்சியம் சத்து கிடைத்து, குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் இன்றியமையாத சத்தாகும். எனவே இந்த அஸ்பாரகஸை உணவில் சேர்க்க மறக்கக்கூடாது.

முட்டை

முட்டை

வயிற்றில் வளரும் குழந்தைக்கு கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாததால், கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களுக்கு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இரத்த சிவப்பணுக்கள் தேவைப்படுவதால், வைட்டமின் கே அதிகம் நிறைந்த ப்ராக்கோலியை மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பீன்ஸ்

பீன்ஸ்

கர்ப்பிணிகள் அனைத்து வகையான பீன்ஸையும் சாப்பிடலாம். ஏனெனில் பீன்ஸில் புரோட்டீன் அளவுக்கு அதிகமாக நிறைந்திருப்பதால், இதனை ஆரம்ப காலத்தில் சாப்பிட்டால், உடலுக்கு எனர்ஜியைக் கொடுப்பதோடு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.

தயிர்

தயிர்

கர்ப்பிணிகள் தினமும் தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் இதில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால், அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கும். எனவே தவறாமல் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மட்டன்

மட்டன்

அசைவ உணவு சாப்பிட ஆசைப்பட்டால், சிக்கனை தவிர்த்து, மட்டனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் சிக்கனை சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். இதனால் கருவிற்கு பாதிப்பு ஏற்படும்.

கேல்/சீமை பரட்டைக்கீரை

கேல்/சீமை பரட்டைக்கீரை

இந்த கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே இதனை கர்ப்பிணிகள் ஆரம்ப காலத்தில் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைக்கும்.

சால்மன்

சால்மன்

பொதுவாக கர்ப்பிணிகள் மீனை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் பாதரசம் இருப்பதால், அது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். ஆனால் சால்மன் மீனை மாதம் ஒரு முறை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் கால்சியத்தைப் பெறலாம். மேலும் இதில் பாதரசம் குறைவாக இருப்பதால், பயமின்றி சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Foods For First Trimester In Pregnancy

Pregnant women should indeed follow a very strict diet during pregnancy as they need every good source of food for their little one to grow. Take a look at some of the good foods a pregnant woman should consume in her first trimester.
Desktop Bottom Promotion