For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்குத் தாமதமாகத் தென்படும் நான்கு அறிகுறிகள்!!!

By Super
|

ஒரு பெண்ணுக்கு தான் கருவுற்றிருக்கிறோம் என்று அறிந்தால், அதை விட பெரிய ஆனந்தம் ஏதுமில்லை. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மிகச்சிறப்பான நிகழ்வுகளில் தாய்மையும் ஒன்று. தாய்மை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி, ஆனந்தத்திற்கு இடையில், அவர்கள் தங்களை முறையாகக் கவனித்துக் கொண்டு, தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளவும் மறக்கக்கூடாது.

கருவுற்றிருக்கும் ஒன்பது மாத காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். இக்காலத்தில் அவர்களது உடல் ஏகப்பட்ட மாறுபாடுகளுக்கு உள்ளாகும். பெண்கள் தாம் கருவுற்றிருக்கிறோமா, இல்லையா என்பதை ஒரு சிறு சோதனை செய்து பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். ஒரு பெண் கருவுற்றிருப்பதைக் கண்டுபிடிக்க ஏராளமான அறிகுறிகள் உள்ளன. ஒருசில அறிகுறிகள் சீக்கிரம் தென்படும். சில தாமதமாகத் தென்படும்.

இப்போது அவ்வாறு தாமதமாகத் தென்படும் நான்கு அறிகுறிகளைப் பற்றி சற்றுத் தெரிந்து கொள்வோம்.

Four Late Symptoms Of Pregnancy

1. உடல் வலி

ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் ஒன்பது மாதங்கள். இவை, மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் முறையே முதலாம் மும்மாதம்/முப்பருவம் (Trimester), இரண்டாம் மும்மாதம்/முப்பருவம், மூன்றாம் மும்மாதம்/முப்பருவம் என அழைக்கப்படுகின்றன.

கர்ப்ப காலத்தின் இரண்டாம் மும்மாதத்தின் இறுதியில், முதுகு வலி தோன்றத் தொடங்கும். தாய்மையடைந்துள்ள பெண்ணின் வயிற்றினுள் குழந்தை வளரத் தொடங்கும் பொழுது, கருப்பையைச் சுற்றிலுமுள்ள தசைகள், விரிவடையும். வளரும் குழந்தையைக் கருப்பை அடக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே பின்புலமாக இருந்து உடலைத் தாங்கிக் கொண்டிருந்த முதுகுத்தண்டின் ஆதரவு, கீழ்முதுகுக்குக் கிடைக்காமல் போகிறது. இதனால் கீழ் முதுகு அதிகமான எடையைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு, வலி உண்டாகிறது. இவ்வலியைக் குறைக்க தாய்மையடைந்த பெண்கள், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படுத்துக் கொள்வது நல்லது.

2. தூக்கமின்மை

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சரியான தூக்கமே இருக்காது அல்லது அவர்களால், சரியாகத் தூங்கவே முடியாது. இப்படி சரியான தூக்கம் இல்லாததற்கு நிறைய காரணங்கள் உண்டு. சில நேரங்களில் கருவுற்றிருக்கும் பெண்கள் உடல் சக்தியை இழந்து மிகவும் களைப்படைந்துவிடுவார்கள். அம்மாதிரி நேரங்களில் அவர்களால் தூங்க முடியாது. அவர்கள் தூங்க விரும்பினாலும் தூங்க முடியாது. இம்மாதிரியான நிலை மிகவும் எரிச்சலைத் தரும். கருவுற்றிருக்கும் பெண்கள் தமது களைப்பைப் போக்கவோ அல்லது வழக்கமாகவோ, மாலை வேளைகளில் டீ அல்லது காபி போன்ற பானங்களைப் பருகுவதைத் தவிர்த்து விட வேண்டும். படுக்கைக்குப் போகும் முன், அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கண்களை மூடிக்கொண்டு, சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்ய முயல வேண்டும்.

3. களைப்பு

கருவுற்றிருக்கும் பெண்கள் மிக விரைவாக களைப்படைந்து விடுவார்கள். அவர்களது உடல் சக்தியை விரைவில் இழந்து ஆயாசம் என்னும் நிலையை அடைந்து விடுவார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள், தமது விருப்பத்தின் படி, தமது வசதிப்படி வேலைகளைச் செய்ய வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தை ஏராளமான சக்தியை உறிஞ்சிக்கொள்ளும். இம்மாதிரியான காலங்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் செய்ய வேண்டிய சிறப்பான காரியம் ஒன்று உண்டென்றால், அது நன்கு தூங்க வேண்டியது அல்லது ஒரு குட்டித்தூக்கமாவது போட வேண்டியது தான்.

4. வீக்கம்

மூன்றாம் முப்பருவத்தின் இறுதியில், கருவுற்றுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பொதுவான அறிகுறி வீக்கம் ஆகும். விரல்கள், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் ஆகியவை வீங்கத் தொடங்கும். இவை கருவுற்றுள்ள பெண்கள் மிகச் சாதாரணமாக எதிர்கொள்ளும் அறிகுறிகள் ஆகும். உடலிலுள்ள திரவங்கள் உடலிலேயே தங்கிவிடுவதால், இது ஏற்படுகிறது. பெண்களுக்கு அதிகமாக வீக்கம் ஏற்படும் இடங்களில் ஒன்றான கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டால், கருவுற்றுள்ள பெண்கள் அதிக நேரம் நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்து விட்டு, அவ்வப்போது உட்கார்ந்து கொள்ளவோ அல்லது படுத்துக் கொள்ளவோ வேண்டும்.

English summary

Four late symptoms of pregnancy | கர்ப்பிணிகளுக்குத் தாமதமாகத் தென்படும் நான்கு அறிகுறிகள்!!!

There are many difficulties that she has to face in the nine months of her pregnancy and many changes that her body undergoes. Women can come to know whether they are pregnant or not just by conducting a test. There are many symptoms also which help a woman in knowing whether she is pregnant or not. Some of these symptoms are early while some are late.
Desktop Bottom Promotion