For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

By Maha
|

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே, இரண்டாவது மாதத்திலும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் இரண்டாம் மாதத்தில் தாயாகிவிட்டோம் என்ற சந்தோஷத்துடன், சோர்வு, மயக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசியின்மை, மனச்சோர்வு போன்ற பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது, ஒவ்வொரு மாதமும் உணவு முறையானது மாறுபடும்.

அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் போது, இரண்டாம் மாதத்திலும் உணவு முறைகள் மாறுபடும். அதிலும் இந்த மாதத்தில் கருப்பையில் உள்ள செல்கள், ஆரோக்கியமான பிரசவத்தைப் பெறுவதற்கு புரோஜெஸ்ட்டிரோன் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்யும். மேலும் இந்த காலத்தில் கர்ப்பிணிகளின் உடலில் இரத்த ஓட்டமானது சற்று வேகமாக இருப்பதால், மற்ற காலத்தை விட, இந்நாட்களில் உடலானது வெதுவெதுப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, இரண்டாம் மாதத்தில் வயிற்றானது சற்று வீங்குவதற்கு ஆரம்பிக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் கர்ப்பிணிகள், வயிற்றில் உள்ள சிசுவின் சிறு அசைவை லேசாக உணரக்கூடும்.

எனவே நல்ல ஆரோக்கியமான முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசைப்பட்டால், போதிய ஓய்வுடன், சரியான உணவுகளையும் சாப்பிட வேண்டும். இங்கு இரண்டாம் மாதத்தில் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை தவிர்த்து வந்தால், நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீஸ்

சீஸ்

கர்ப்பிணிகள் சீஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஈகோலை என்னும் மோசமான பொருள் நிறைந்துள்ளது.

ஈரல்

ஈரல்

கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் ஈரல் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஈரலில் வைட்டமின் ஏ என்னும் சத்தானது ரெட்டினோலாக இருப்பதால், அது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.

பச்சை பால்

பச்சை பால்

கர்ப்பிணிகள் பச்சை பாலை அப்படியே அருந்தக்கூடாது. ஏனெனில் அதில் சால்மோனெல்லா என்னும் கிருமியானது உள்ளது. எனவே எப்போதும் பாலை நன்கு கொதிக்க வைத்து, பின்னரே பருக வேண்டும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

நிச்சயம் இரண்டாம் மாதத்தில் ஆல்கஹாலை தொடவேக் கூடாது. அதை மீறிப் பருகினால், குழந்தை பிறப்பு குறைபாடுகளுடன் பிறக்கக்கூடும். எனவே ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பச்சை முட்டை

பச்சை முட்டை

கர்ப்பமாக இருக்கும் போது பச்சை முட்டையை சாப்பிடவேக் கூடாது. ஏனெனில் அதில் சால்மோனெல்லா என்னும் குழந்தை மற்றும் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள் நிறைந்துள்ளது. ஆகவே இந்நேரத்தில் முட்டையை நன்கு வேக வைத்து, பின்னரே சாப்பிட வேண்டும்.

குளிரூட்டப்பட்ட இறைச்சி

குளிரூட்டப்பட்ட இறைச்சி

கர்ப்பத்தின் போது குளிரூட்டப்பட்ட இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய இறைச்சியில் நைட்ரிக் ஆசிட்டானது சேர்க்கப்பட்டிருக்கும். எனவே கர்ப்பிணிகள் இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

மீன்

மீன்

கர்ப்பமாக இருக்கும் போது, கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது மீன் சுஷி மீன். அதுமட்டுமல்லாமல், கடல் உணவுகளான நண்டு, இறால், கடல் சிப்பி போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது. வேண்டுமெனில் சூரை மீனை மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம். ஏனெனில் மீனில் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியானது அதிக அளவில் உள்ளது.

பிஸ்கட் மாவு

பிஸ்கட் மாவு

பொதுவாக பெண்களுக்கு வீட்டில் சாக்லெட் பிஸ்கட் செய்யும் போது, அதன் மாவை எடுத்து சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால் அத்தகைய பிஸ்கட் மாவை, கர்ப்பத்தின் இரண்டாம் மாதத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் பச்சை முட்டையில் உள்ள சால்மோனெல்லா என்னும் மோசமான பொருள் உள்ளது.

சரியாக வேக வைக்காத இறைச்சி

சரியாக வேக வைக்காத இறைச்சி

கர்ப்பிணிகள் உண்ணும் இறைச்சியானது நன்கு வெந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதில் பச்சையான இறைச்சியில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களானது அப்படியே இருக்கும். அதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே நன்கு வேக வைத்த பின்னரே இறைச்சியை சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food To Avoid In Second Month of Pregnancy

Here is a list of food to avoid during second month of pregnancy. As not all foods are safe to eat during this period.
Story first published: Wednesday, July 3, 2013, 16:42 [IST]
Desktop Bottom Promotion