For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க...

By Maha
|

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய உணர்வுகள் தான். சிலருக்கு உணவுகளை சாப்பிடவே தோன்றாது. ஆனால் ஒருசில உணவுகளைப் பார்த்தால், அதன் மீது ஆசை அதிகரிக்கும். அப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுவார்கள். உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள் இனிப்புகள், காரமான உணவுகள் அல்லது ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட விரும்புவார்கள்.

அதிலும் குறிப்பாக ஜங்க் உணவுகளை தான் பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவர். ஆனால் அவற்றை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்கக வேண்டும். ஏனெனில் அவை உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அவை சாதாரணமாகவே ஆரோக்கியமற்றது, கர்ப்பிணிகளுக்கு சொல்லவா வேண்டும்.

எனவே கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை பட்டிலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோடா

சோடா

கர்ப்பமாக இருக்கும் போது கார்போனேட்டட் பானங்களான சோடா அல்லது கூல்டிரிங்ஸ் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிப்பதோடு, அதில் கலோரிகள் அதிகம் உள்ளன.

தயிர்

தயிர்

பால் பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கும். எனவே கர்ப்பிணிகள் பால் பொருட்கள், குறிப்பான தயிரை அதிகம் சாப்பிட்டால், எலும்புகள் வலுவடையும்.

ஜூஸ்

ஜூஸ்

ஜூஸ் வகைகளில் கேரட், பீட்ரூட் மற்றும் இதர பழச்சாறுகள் மிகவும் ஆரோக்கியமானவை. முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பாக்டீரியா அதிகம் இருக்கும். ஜங்க் உணவுகளில் உள்ள இறைச்சிகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவையே. எனவே நிச்சயம் இதனை தவிர்க்க வேண்டும்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும். மேலும் தானியங்களில் கலோரிகள் மிகவும் குறைவு.

நூடுல்ஸ்

நூடுல்ஸ்

இந்த உணவுகளை மிகவும் வேகமாக சமைத்துவிடலாம். ஆனால் அந்த உணவுகளை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உப்பு, கலோரிகள் அதிகம் இருப்பதோடு, செரிமானமடைவது கடினமாகிவிடும்.

சீஸ்

சீஸ்

கொழுப்பு குறைவான சீஸில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம் அதிகமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி இதில் பாக்டீரியா இருக்காது. எனவே இது கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவாகும்.

உறைந்த உணவுகள்

உறைந்த உணவுகள்

உறைந்திருக்கும் உணவுகளில் உப்புகள் அதிகம் இருக்கும். அத்தகைய உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமற்றவை.

கேரட்

கேரட்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்தது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும்ட பொலிவோடு அழகாக இருக்க கேரட்டை அதிகம் சாப்பிடலாம்.

சாலட்

சாலட்

மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்றால் சாலட் என்று சொல்லலாம். ஏனெனில் சாலட்டானது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றால் செய்யப்படுவதால், இதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிடுவதால், வயிறு நிறைவதோடு, கலோரிகளும் குறைவாக இருக்கும்.

பழங்கள்

பழங்கள்

பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிக்கய் மற்றும் மற்ற பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அதிலும் அவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கருவில் இருக்கும் சிசுவிற்கும் நல்லது. எனவே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் பப்பாளி மற்றும் அன்னாசியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fast Foods To Eat And Avoid During Pregnancy | கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க...

If you have food cravings for junk or fast food during pregnancy, here is a list of foods that you can eat and also some foods must avoid during pregnancy.
Desktop Bottom Promotion