For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...

By Maha
|

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் மன அழுத்தம். கர்ப்பத்தின் போது மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டால், அது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே கர்ப்பிணிகள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அதிலிருந்து வெளியே வர முயல வேண்டும். இல்லாவிட்டால், அந்த மன அழுத்தத்தினால், குழந்தை பிறக்கும் போது குறைகளுடன் பிறக்க நேரிடும்.

எனவே தான் கர்ப்பமாக இருக்கும் போது சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். மேலும் நிபுணர்களும், பெண்கள் கர்ப்பத்தின் போது மன அழுத்தத்தில் இருந்தால், இரத்த அழுத்தமானது அதிகரித்து, இதயத் துடிப்பின் அளவு அதிகரித்து, வயிற்றில் வளரும் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணற ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று தமிழ் போல்ட் ஸ்கை ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளது. அது என்னவென்று படித்து, அதன்படி நடந்து, அழகான குழந்தையை சந்தோஷமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிரிக்கவும்

சிரிக்கவும்

தனிமையை தவிர்த்து, எப்போதும் குடும்பத்தாருடன் பேசி அரட்டை அடித்து, சிரித்துக் கொண்டு இருக்க வேண்டும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

யோகா செய்யவும்

யோகா செய்யவும்

மன அழுத்தத்தைக் குறைப்பதில் யோகாவை விட சிறந்த முறை எதுவும் இருக்காது. ஆகவே யோகாவை தினமும் தவறாமல் செய்து வர வேண்டும். இதனால் மனம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தோழிகளுடன் நேரத்தை செலவழிக்கலாம்

தோழிகளுடன் நேரத்தை செலவழிக்கலாம்

கர்ப்பமாக இருக்கும் போது தோழிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் மனம் விட்டு பேசினால், அவர்களை மீறி மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

புத்தகங்களை படிக்கலாம்

புத்தகங்களை படிக்கலாம்

கர்ப்பமாக இருக்கும் போது அழுப்புத் தட்டும் புத்தகங்கள் படிப்பதை தவிர்த்து, ஆர்வத்தை அதிகரிக்கும், மனதை அமைதிப்படுத்தும் மற்றும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் படியான புத்தகங்களை படிக்க வேண்டும்.

வெளியே செல்லவும்

வெளியே செல்லவும்

எப்போதும் வீட்டிலேயே அடைந்து இருந்தால், மன அழுத்தம் தான் இன்னும் அதிகரிக்கும். ஆகவே தினமும் கணவருடனோ அல்லது தோழிகளுடனோ வெளியே சிறிது தூரம் நடைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

ஷாப்பிங் செல்லலாம்

ஷாப்பிங் செல்லலாம்

கர்ப்பமாக இருக்கும் போது நிறைய பெருட்களின் மீது ஆசை எழும். ஆகவே அந்த பொருட்களை வாங்குவதற்கோ அல்லது வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்கு ஷாப்பிங் சென்றால், மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம்.

பிடித்ததை சாப்பிடுங்கள்

பிடித்ததை சாப்பிடுங்கள்

கர்ப்பத்தின் போது கர்ப்பிணிகளுக்கு ஒருசில உணவுப் பொருட்களின் மீது ஆசை அதிகம் எழும். அப்படி ஆசை எழும் பொருட்களை அளவாக சாப்பிட்டு வந்தாலே, அந்த சந்தோஷத்தின் மன அழுத்தம் வருவதை தடுக்கலாம்.

மசாஜ்

மசாஜ்

கர்ப்பிணிகளுக்கு கால் வலி, உடல் வலி, சோர்வு ஆகியவற்றால் அதிகம் டென்சன் ஆவார்கள். ஆகவே தினமும் கணவரை மசாஜ் செய்துவிடுமாறு கூறுங்கள். இதனால் வலி குறைந்து, மனம் ரிலாக்ஸ் ஆகும்.

நீச்சல்

நீச்சல்

உடலின் எடை அதிகரிக்கும் போது சிலருக்கு உடல் சோர்வு அடைந்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே தினமும் நீச்சல் மேற்கொண்டால், மன அழுத்தம் குறைவதோடு, உடலுக்கு இதமாகவும் இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினமும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.

குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்

குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்

கர்ப்பிணிகளுக்கு நிச்சயம் குழந்தைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். ஆகவே குழந்தைகளைப் பற்றிய புத்தகங்களைப் படிக்கலாம் அல்லது உங்கள் பெற்றோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டை அலங்கரிக்கலாம்

வீட்டை அலங்கரிக்கலாம்

பிறக்கப்போகும் குழந்தையை வரவேற்கும் வகையில், குழந்தைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வீட்டில் வைக்கலாம். மேலும் குழந்தைக்கு ஏற்றவாறு வீட்டை அலங்கரிக்கலாம்.

குழந்தையுடன் பேசலாம்

குழந்தையுடன் பேசலாம்

வீட்டில் யாரும் இல்லாவிட்டால், தனியாக இருக்கும் போது குழந்தையுடன் பேசலாம். இதனால் வயிற்றில் வளரும் குழந்தையுடன் நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.

படங்களைப் பார்க்கலாம்

படங்களைப் பார்க்கலாம்

கணவருடன் சேர்ந்து நல்ல ரொமான்டிக்கான படங்களைப் பார்த்து ரசிக்கலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படுவது நீங்கி, கணவருடனான அன்பு, பாசம், நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.

கணவருடன் நேரம் செலவழிக்கவும்

கணவருடன் நேரம் செலவழிக்கவும்

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் கணவன் மீது அன்பு அதிகரிக்கும். எனவே கணவருடன் முடிந்த அளவில் அதிக நேரம் செலவழிக்கவும்.

கணவர்களுக்கான முக்கிய குறிப்பு

கணவர்களுக்கான முக்கிய குறிப்பு

உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு கணவர்களின் கடமையாகும். எனவே உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து நடக்க வேண்டும். இதனால் உங்கள் மனைவி மட்டுமின்றி, உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு ஒவ்வொரு கணவரும் மனைவிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Control Stress During Pregnancy: Tips

In order to help you get rid and control stress during pregnancy, Boldsky has shared with you some ways in which you can adapt to your lifestyle. These ways which have been mentioned below will help you to have a healthy pregnancy. Take a look at how you can control stress during pregnancy:
Story first published: Wednesday, December 11, 2013, 15:41 [IST]
Desktop Bottom Promotion