For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலங்களில் மனைவிக்கு ஆறுதலாக இருக்க சில யோசனைகள்!!!

By Boopathi Lakshmanan
|

ஒரு குழந்தையை சுமக்கும் போதும் அதன் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் போதும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தேவையானவற்றை அறிவது பெண்களை மட்டும் சார்ந்தது அன்று. ஒரு ஆண் துணைவனாக உங்கள் மனைவயின் கர்ப்ப காலத்தின் போது அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து அவளுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். உங்கள் துணைவி கர்ப்பத்தின் முழு சுமையை அவர்களே தாங்கவேண்டியதிருப்பதால் உங்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்பது மனரீதியான ஒத்துழைப்பையும் கவனத்தையும் தான். குறைந்த பட்சம் தங்களது மனைவியை இக்காலத்தில் தாங்கிக்கொள்வதே மிக சிறந்த உபகர்னமாகும்.

கர்ப்ப காலத்தில் மன உளைச்சலின் போது துணையாக இருப்பது, பெண்களுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். இதனால் அவர்கள் கர்ப்ப காலத்தையும் சிறிது எளிதாக கடக்க முடிகின்றது. இவ்வாறு செய்யும் போது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் பரிமாறுவது மட்டுமல்லாமல் உங்களது உறவின் பாலமும் உறுதியாகும். இந்த வகை உணர்வு உள்ளிருக்கும் குழந்தையை கூட பாதுகாப்பாக இருக்க செய்யும். பெண்ணின் உணர்வுகள் இத்தகையானதாக இருக்கும் போது குழந்தையும் தங்களது தந்தையின் பாதுகாப்பில் பத்திரமாக இருப்பதை உணரும். இவ்வாறு மனைவியுடன் அன்பையும், அக்கறையையும் காட்டுவதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.

Be An Emotional Support During Pregnancy

ஒரு குழந்தையை சுமக்கும் போது பெண்ணுக்கு அதிக அளவு மற்றும் வௌவேறு சுரப்பிகளின் அளவு மாறுபடுகின்றன. இந்த சமயத்தில் அவர்களின் எண்ணங்களையும் செயல்களையும் கட்டுபடுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு இருக்கும் போது உங்கள் துணைவியை அமைதிபடுத்தி அவர்களின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அவளையும் குழந்தையையும் பராமரிப்பதன் மூலம் உங்களது உறவையும் பலபடுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையும் உங்கள் உணர்வை உணர முடிகிறது. கர்ப்பமாய் இருக்கும் காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகின்றது. இத்தகைய மன அழுத்தம் அழத்தத்தை உண்டுபன்னும் சுரப்பிகளால் ஏற்படுகின்றன. இவை சுமக்கும் பெண்ணை மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தையையும் பிறப்பிற்கு பின் பாதிக்கின்றது.

அவளுடன் பேசுங்கள்

'உணர்வு பூர்வமான அக்கறையை வெளிப்படுத்த முதலில் அவளுடன் அடிக்கடி பேசுங்கள். முன்பை விட அதிக அளவில் உரையாடல் இருக்க வேண்டும். அவளுடன் மிகவும் அனைப்பாக இருப்பது சிறந்ததாகும். கர்ப்பத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எதை எல்லாம் அவர் மேற்கொள்கிறார்.

அவள் சுமக்கும் குழந்தையுடன் பேசுங்கள்

உங்கள் துணைவி சுமக்கும் குழந்தையிடம் பேசுங்கள். வயிற்றினுள் இருக்கும் குழந்தையிடம் பேசுவது சிறிது மூடத்தனமாக இருந்தாலும், அவ்வாறு செய்யும் போது அக்குழந்தையும் அப்பெண்ணும் பேரின்பம் கொள்வார்கள் மற்றும் இதன் மூலம் அதிக அளவு நன்மைகள் உள்ளது. உங்கள் மூவரையும் ஒன்றாய் இணைக்கும் சக்தி இதில் உள்ளது. இந்த வகை செயல்கள் குழந்தையின் மீதும் மனைவி மீதும் எவ்வளவு அன்பாய் இருக்கின்றீர்கள் என்பதை வெளிப்படுத்தும. அதுமட்டுமின்றி இதில் உங்களுக்கு எவ்வளவு ஆனந்தம என்பதையும் காட்டும்.

நம்பிக்கையூட்டுங்கள்

குழந்தை பெறுதல் என்ற எண்ணம்தாயாகப்போகும் பெண்களுக்கு அதிக சலனத்தை ஏற்படுத்துகின்றது. ஆகையால் நீங்கள் அவர்களை எப்போதும் நம்பிக்கையூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் நலமாய் இருக்கும் எனவும் நீங்கள் அவர்களுடன் இருப்பீர்கள் எனவும் செல்லிக்கொண்டே இருங்கள். இத்தகைய சொற்கள் அவர்களையும் குழந்தையையும் அமைதிப்படுத்தி நம்பிக்கையுட்டும். இத்தகைய நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அவ்வப்போது கூறுவது அவர்களுக்கு ஒரு நல்ல உணர்வை கொடுக்கும்.

ஒன்றாக அதிக நேரம் செலவிடுங்கள்

இதர காலங்களில் உங்கள் நண்பர்களுடன் நேரம் கழிப்பதும் இரவு நேரத்தில் பார்ட்டி மற்றும் சினிமாக்களுக்கு செல்வதும் வழக்கமாக இருக்கலாம். ஆனால் கர்ப்ப காலத்தில் இவற்றை செய்வது முறையன்று. நீங்கள் அவளுடன் அதிக அளவில் நேரம் செலவிட வேண்டும். அவளை மகிழ்விக்க வேண்டும். அவளுடன் டி.வி மற்றும் சினிமா ஆகியவற்றை சேர்ந்து பார்ப்பதன் மூலம் உங்களின் துணையினை அவளுக்கு கொடுக்க முடியும்.

அமைதியாகவும் அக்கறையாகவும் இருப்பது

கர்ப்ப காலத்தில் சுரக்கும் சுரப்பிகளின் செயல் எப்போது வெளிபடும் எப்போது அமைதியாக இருக்கும் என்று கணிக்க முடியாது. எப்போது அவள் கோபப்படுவாள் எப்போது அமைதியாக இருப்பாள் என்றும் செல்ல முடியாது. ஒரு வேளை உங்களுக்கு சாதாரனமாக இருக்கும் செயல்கள் அவளுக்கு எரிச்சல் மூட்டினால் நீங்கள் தான் அமைதியாகவும் அக்கறையாகவும் இருந்து அவளை அமைதிபடுத்த வேண்டும்.

English summary

Be An Emotional Support During Pregnancy

By providing emotional support during pregnancy to your partner, you would be showing her how much you care and helps in strengthening the bond between you. It even helps the child growing inside when the mother feels secured and safe with all the emotional support she gets from the father.
Story first published: Saturday, December 14, 2013, 12:44 [IST]
Desktop Bottom Promotion