For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவு வகைகள்!!!

By Super
|

கர்ப்பக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக அனைத்து சத்தான உணவுகளையும் சாப்பிடக் கூடாது. ஏனெனில் எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், கர்ப்பத்தின் போது அது கூட கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே நம்முள் மற்றொரு உயிர் வளர்கின்றது என்பதை மனதில் கொண்டு, உணவுகளில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் கர்ப்பிணிகள் சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்வதால், ஆரோக்கியத்தை குழந்தைக்கு கருவில் இருக்கும் பொழுதே கொடுக்க முடியும். பிரசவம் என்பது பெண்கள் எதிர்நோக்கும் அற்புதமான தருணம். இதை அனுபவிக்கும் பெண்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்போது கர்ப்பமாக இருக்கும் போது, கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் உணவுகள்

கடல் உணவுகள்

கடல் உணவுகளில், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருப்பதால், அதை உட்கொள்வது நல்லது என்றாலும், மெர்குரி அடங்கிய உணவை தவிர்ப்பது நல்லது. அதிலும் நண்டு, சால்மன் மீன், சுறா போன்ற கடல் உணவுகளில் மெர்குரி அதிகம் இருப்பதால், அவற்றை பிரசவக் காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சமைக்காத உணவுகள்

சமைக்காத உணவுகள்

சமைக்காத உணவை பிரசவக் காலத்தில் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. இதில் பாக்டீரியாவும், வைரஸும் அதிகம் இருப்பதால், அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றை உட்கொள்வதால் குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களை சாப்பிடும் போது, கர்ப்பம் தரித்த பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் அவை தூய்மை செய்யப்படாததாக இருந்தால், கண்டிப்பாக குழந்தைக்கு ஆபத்து ஏற்படும். வேண்டுமெனில் மொஷெரெல்லா எனப்படும் இத்தாலியன் சீஸையோ அல்லது கொழுப்பு நீக்கிய பாலையோ உட்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பருகும் பால், மோர், தயிர் போன்றவை நல்ல முறையில் தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து, பின்னரே சாப்பிட வேண்டும். ஆனால் பன்னீர், சீஸ் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

கழுவாத பழங்கள் மற்றும் காய்கறிகள்

கழுவாத பழங்கள் மற்றும் காய்கறிகள்

சமைக்காத காய்கறிகளை எப்படி சாப்பிடக்கூடாதோ, அதுப்போல கழுவாத எதையும் சாப்பிடக் கூடாது. அதிலும் காய்கறி மற்றும் பழங்களை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.

காபி, டீ மற்றும் மது

காபி, டீ மற்றும் மது

இவை மூன்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிட்டால், அது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை கூட பாதிக்கும். அதிலும் இவற்றை அதிகம் சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

முட்டை

முட்டை

முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், முட்டையில் உள்ள பாக்டீரியாவானது கருவில் உள்ள சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid these 6 foods when pregnant

During pregnancy, the mother must be very advisable to eat foods that are nutritious. But in addition to eating a healthy diet, expectant mothers should also avoid some certain foods.
Desktop Bottom Promotion