For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் கணவனுடன் உங்கள் உறவு மேம்படுவதற்கான 7 காரணங்கள்!!!

By Super
|

கர்ப்பம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான பருவமாகும். தான் தாய் ஆகா போவது, ஒரு அழகிய பிஞ்சு குழந்தையை பெறப் போவது என பெண்களுக்கு பல சந்தோஷங்கள் காத்திருந்தாலும், ஒரு மிகப் பெரிய கவலையும் உண்டு. அது தான் கணவன் மனைவிக்கு நடுவே ஏற்படும் இடைவெளி. கர்ப்பம் என்பது உங்கள் கணவனுக்கும், உங்களுக்கும் இருக்கும் உறவை ஸ்தம்பிக்க செய்துவிடும் என்று தான் பல பெண்கள் நினைக்கின்றனர்.

அப்படிப்பட்ட நேரத்தில் கணவனிடம் செலவிடும் நேரமும் குறைந்துவிடும். வெறுமனே ஷாப்பிங் செல்ல, தொட்டில் வாங்க போன்றவைகளுக்கு மட்டும் தான் நேரம் இருக்கும் என்றும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. முதலில் உங்கள் மன நிலையை மாற்றுங்கள். நீங்களும் உங்கள் கணவனும் அடுத்த 9 மாதங்களை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹார்மோன்களுக்கு வேலை கொடுங்கள்

ஹார்மோன்களுக்கு வேலை கொடுங்கள்

கர்ப்பம் தரித்த நேரத்தில் குமட்டல், வாந்தி மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது இயல்பே. ஆனால் பல பெண்களுக்கு காம பசியை ஊக்குவிக்கவும் செய்யும். 40% பெண்களுக்கு சாதாரண காலத்தை விட, கர்ப்ப காலத்தில் தான் கூடுதலாக உடலுறுவு கொள்ள விருப்பம் உள்ளது என்று சமீபத்தில் ஜர்னல் ஆப் செக்ஷுவல் மெடிசின் என்ற பத்திரிகை ஒரு சர்வே நடத்தி அதனை வெளியிட்டுள்ளது. ஆனால் அது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அதிக இரத்த ஓட்டம் என்றால் அதிக குஷி

அதிக இரத்த ஓட்டம் என்றால் அதிக குஷி

கர்ப்ப காலத்தில் இதயத் துடிப்பு அதிகரித்து இரத்த ஓட்டம் கூடுவதால், அது காம ஆசையை அதிகரிக்க செய்யும். அதனால் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகரிக்கும். மேலும் இந்நேரத்தில் கருத்தடை என்பதற்கு அவசியம் இல்லாததால் கூடுதல் இன்பத்தை அடையலாம்.

கர்ப்ப காலம் உங்கள் கவர்ச்சியை கூட்டும்

கர்ப்ப காலம் உங்கள் கவர்ச்சியை கூட்டும்

ஆண்களுக்கு பெண்களின் வளைவு, சதை போட்ட இடுப்பு, பின்புறம், கீழ்ப்பகுதி மற்றும் மார்பகங்கள் என்றால் ஒரு மயக்கம் உண்டு. கர்ப்ப காலத்தில் இவையாவும் கூடுதல் ஈர்ப்புடன் இருப்பதால், ஆண்களை சுண்டி இழுக்கும்.

உடலுறவு குறைவு என்றால் கட்டி தழுவுங்கள்

உடலுறவு குறைவு என்றால் கட்டி தழுவுங்கள்

சில தம்பதிகளுக்கு கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபட உடன்பாடு இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் மிகவும் நெருக்கமாக கட்டி தழுவிக் கொள்ளுங்கள். இது உறவின் ஆழத்தை அதிகரிக்கும் என்று இண்டியானா பல்கலைகழகம் நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

காதல் உணர்வை பெறுவீர்கள்

காதல் உணர்வை பெறுவீர்கள்

ஆக்ஸிடோசின் (பால் சுரப்பு இயக்குநீர்) என்ற ஹார்மோன், காதல் உணர்வை தூண்டும் ஹார்மோன் என்று சொல்ல முடியாது. இந்த ஹார்மோன் மார்பகங்களில் பால் சுரக்க தூண்டும். அதனுடன் உடலுறவு கொள்ளும் போதும், கட்டி தழுவிக் கொள்ளும் போதும், இந்த ஹார்மோன் வெளியேறும். இது உங்களுக்கு அமைதியை அளித்து, காதல் உணர்வை தூண்டிவிடும்.

ஆரோக்கியமான உங்களின் புதிய தோற்றம்

ஆரோக்கியமான உங்களின் புதிய தோற்றம்

நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் ஆரோக்கியத்தை காத்திடும் பெரிய பொறுப்பு உங்களை வந்து சேரும். இந்நேரத்தில் நன்றாக சாப்பிட்டு, மதுபானங்கள் பருகுவதை குறைத்து கொண்டு, குழந்தை நன்றாக வளர பாடுபடுவீர்கள். இந்த பொறுப்பு உங்களுக்கு மட்டும் கிடையாது. அனைத்து தந்தைமார்களுக்கும் உண்டு.

ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் மார்பக புற்றுநோய் மற்றும் இதர இதய நோய்களின் இடர்பாட்டை குறைக்கும் என்று சமீபத்தில் பிரிட்டனில் நடத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இப்போது நீங்கள் ஒரு குடும்பம்

இப்போது நீங்கள் ஒரு குடும்பம்

குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு தம்பதிக்கு மத்தியில் பெரிய திருப்தியை அளிக்கும். குழந்தைகள் கூட கூட, உங்களின் சந்தோஷமும் கூடும் என்று க்ளாஸ்கோ பல்கலைகழகம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் 90,000 பிரிட்டிஷ் தந்தைமார்களும், தாய்மார்களும் கலந்து கொண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 reasons why pregnancy could improve your relationship with your partner

You might be thinking that pregnancy means a stagnant spell for your relationship with the only special couple time you'll spend together being shopping for a pram, but it's time to change that mind-set! Here's what you need to know to make sure you and your man enjoy the next nine months.
Desktop Bottom Promotion