For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!!!

By Super
|

பிரசவ காலத்தில் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று மருத்துவர்கள் கூறினாலும், கவனமாக இருப்பது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு உயிரை கருவில் சுமப்பது என்பது கவனமாக மேற்கொள்ள வேண்டிய செயலாகும். கவனம் குறைந்தால் கருசிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகின்றாள். உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் இதற்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய பாரத்தை சுமக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது தமிழ் போல்டு ஸ்கை, பிரசவக் காலத்தில் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய சிலவற்றை கொடுத்திருக்கிறது. அதைப் படித்து பின்பற்றி, அழகான குழந்தையைப் பெற்றெடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர்ந்த காலணிகள் வேண்டாம்

உயர்ந்த காலணிகள் வேண்டாம்

உயரமாக காட்ட வேண்டும் என்பதற்காக பிரசவ காலத்திலும், பாதுகாப்பு இல்லாத உயர்ந்த காலணிகளை அணிந்தால், அது எந்நேரத்திலும் கருவிற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. எவ்வளவு தான் அழகு முக்கியமானதாக இருந்தாலும், கர்ப்பத்தின் போது அழகை விட பாதுகாப்பே முக்கியம் என்பதால் இதை அணிவதை அறவே தவிர்த்திட வேண்டும். இல்லையென்றால் கடுமையான முதுகு வலி வருவதோடு, எந்நேரத்திலும் விழும் நிலை நேரிடும்.

அதிகமான எடையைத் தூக்க வேண்டாம்

அதிகமான எடையைத் தூக்க வேண்டாம்

வீட்டில் உள்ள மரச் சாமான்கள் அல்லது அதிகமான எடையுள்ள சில பொருட்களை அதற்கான இடத்தில் வைத்து அழகுப்படுத்துவோம். இருப்பினும் பிரசவ காலத்தில் அந்த வேலையை செய்தால், முதுகு வலி வரும். எனவே மரச் சாமான்கள் அல்லது இதர கனமான பொருட்களை நகர்த்துவதோ, தூக்குவதோ வேண்டாம்.

குழந்தையை தூக்க வேண்டாம்

குழந்தையை தூக்க வேண்டாம்

இரண்டாவது பிரசவம் என்றால் முதல் குழந்தையை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும். அதிலும் குழந்தை ஐந்து கிலோ எடைக்கு மேல் இருந்தால், அவர்களை தூக்க வேண்டாம். அப்படி செய்வதால் முதுகு வலி ஏற்படுவதோடு, கர்ப்பப் பைக்கும் கேடு விளைவிக்கும்.

சூடுநீர் குளியல் வேண்டாம்

சூடுநீர் குளியல் வேண்டாம்

பிரசவ காலத்தில் மிகவும் சூடான நீரில் குளியலை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த குளியலை மேற்கொண்டால், இரத்தத்தின் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டு, உடம்பை குளிர செய்யும். இதனால் வயிற்றும் உள்ள குழந்தைக்கு தேவையான இரத்தம் செல்வதில் மாறுபாடு ஏற்படும் என்பதால், இதை தவிர்க்க வேண்டும்.

கடுமையான உடற்பயிற்சி வேண்டாம்

கடுமையான உடற்பயிற்சி வேண்டாம்

கடுமையான உடற்பயிற்சியை பிரசவ காலத்தில் மேற்கொண்டால், இரத்தத்தின் இயல்பில் அழுத்தம் ஏற்பட்டு, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். எனவே இதை அறவே தவிர்க்க வேண்டும்.

நோய் கிருமியில் கவனம் தேவை

நோய் கிருமியில் கவனம் தேவை

நோய் கிருமிகளானது குடும்ப நபர்களிடம் இருந்தோ, அலுவலகத்தில் இருப்பவர்களிடம் இருந்தோ பரவும். எனவே அருகில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், கவனமாக இருக்க வேண்டும்.

இந்த ஆறு டிப்ஸையும் கவனமாக பயன்படுத்தினால், ஆரோக்கியமான குழந்தையை பெற்று கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Things to avoid during pregnancy

Although doctors say that you should still try to live a normal life you are used to, there are some activities that are risky if done during pregnancy. Because if you’re not careful, you could be at risk of pregnancy miscarriage. You certainly do not want that to happen, right? Here are some things you should avoid during pregnancy, as reported Boldsky.
Story first published: Thursday, July 11, 2013, 16:26 [IST]
Desktop Bottom Promotion