For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்கான உடைகள்..சில டிப்ஸ்

By Mayura Akilan
|

5 Best Apparels During & After Pregnancy
கர்ப்பிணிகளுக்கான உடைகளைத் தேர்வு செய்வது என்பது ரொம்பவுமே சவாலான விஷயம். பிரசவ காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னரும் எதை அணியலாம்?

பொதுவாக தளர்வான, லேசான உடைகள்தான் ரொம்பவும் சரியான தேர்வாக இருக்க முடியும். வயிற்றுக்கும், மார்புக்குமானவை வசதியானதாகவும், தளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.

நீங்க இந்த மாதிரியான உடைகளில் ஆர்வம் கொண்டவரா? கொஞ்சம் டிப்ஸ் பார்க்கலாம்..

1. எலாஸ்டிக் அல்லது சைட் கட் உடைகள்: சல்வார், குர்தா, லாங் டாப்ஸ் மாதிரியான உடைகளில் "சைட் கட்" இருந்தால் ஓகே. இந்த உடைகள் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் பிரசவ காலத்துக்குப் பிறகும் கூட நீங்கள் அணியலாம்.

2. லெக்கிங்ஸ்/ ஜெக்கிங்ஸ் : இந்த வகை பேண்ட்டுகள் ரொம்ப நல்ல தேர்வாக இருக்கலாம். காட்டன் மாதிரியான லெக்கிங்ஸை தேர்வு செய்றது நல்லது. குர்தா, லாங் டாப்ஸ், சல்வார்களுக்கு ஏற்ற மாதிரி தேர்வு செய்யலாம். ஜீன்ஸ் மாதிரி தோற்றமளிக்கக் கூடிய ஜெக்கிங்ஸையும் தேர்வு செய்யலாம்.

3. லைக்ரா/ காட்டன் டி சர்ட்ஸ்: கர்ப்பிணி பெண்களுக்கு பொருந்தக் கூடிய உடைகளில் ஒன்று இவை. ரொம்பவும் மார்டனாகவும் இருக்கும். விலையும் ரொம்ப குறைவானது.

4. சேலைகள்: பெரும்பாலான இந்தியப் பெண்கள் கர்ப்பகாலத்தில் மிகவும் விரும்பி அணிவது சேலைகள்தான். நமக்கெல்லாம் இதுதான் ரொம்ப நல்ல தேர்வு. குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப வயிற்றில் ஏற்படும் மடிப்புகளுக்கு ஏற்ப ரொம்ப வசதியானதாக இருப்பவை சேலைகள்தான். குழந்தை பிறந்த பிறகும்கூட சேலைதான் பெஸ்ட் செலக்ஷன். இதுதான் தளர்வா இருக்கும்.. நாம விருப்பத்துக்கு அட்ஜஸ் செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.

5. அங்கிகள்: குளிர்காலத்தில் அங்கிகளை அணிவது ரொம்ப நல்லது. ஸ்வெட்டரை விட பெஸ்ட் இது. எல்லா வகையான அளவுகளிலும் இது கிடைக்கிறது

இது எல்லாமே கர்ப்ப காலத்துக்கு மட்டும்தான். பிரசவத்துக்குப் பிறகு நீங்கள் எப்பவும் போல உங்களுக்குப் பிடித்தமான உடைகளுக்கு மாறிக் கொள்ளலாம்

English summary

5 Best Apparels During & After Pregnancy | கர்ப்பிணிகளுக்கான உடைகள்..சில டிப்ஸ்

Shopping for pregnancy clothes is the biggest challenge that most mothers face. The apparels are quite expensive and buying them for every month can worry and waste money. Today, we will suggest a few pregnancy fashion tips that can be worn before and after pregnancy. Take a look at the ideas and get smarter with motherhood.
Story first published: Tuesday, February 28, 2012, 13:18 [IST]
Desktop Bottom Promotion