சுகப்பிரசவத்திற்கு பின் யோனியில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் அற்புத நாட்டு மருந்து!

இங்கு பிரசவத்திற்கு பின் யோனியில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

சிசேரியன் முறையில் குழந்தையைப் பெற்றெடுப்பதை விட, சுகப்பிரசவம் தான் மிகவும் சிறந்தது. ஏனெனில் சுகப்பிரசவம் என்றால் அதனால் சில நாட்கள் தான் வலியை அனுபவிக்கக்கூடும். ஆனால் சிசேரியன் என்றால் வாழ்நாள் முழுவதும் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

Best Natural Remedy To Reduce Vaginal Pain After Childbirth

சுகப்பிரசவத்தால் குழந்தைப் பெற்றெடுத்த பெண்களுக்கு சில நாட்கள் யோனிப் பகுதியில் கடுமையான வலி மற்றும் காயங்கள் இருக்கும். இதனால் சுகப்பிரசவத்திற்கு பின் பெண்கள் மிகுந்த களைப்பை உணர்வதோடு, பல உடல்நல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும்.

சுகப்பிரசவத்தின் போது குழந்தையை யோனியின் வழியே வெளியே தள்ளுவதால், யோனியின் சுவர்கள் அதிகம் விரிவடைந்து, இரத்தப்போக்கு மற்றும் காயங்களுடன், கடுமையான வலியை பெண்கள் சில நாட்கள் அனுபவிப்பார்கள். ஆனால் இந்த வலியைக் குறைக்க ஓர் அற்புத நாட்டு மருந்து உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சியுடன் பாலிஃபீனால்களும் உள்ளது. இது யோனிப் பகுதியில் உள்ள காயங்களை விரைவில் குணமடைய உதவும்.

சீரகம்

சீரகம்

சீரகத்தில் க்யூமினல்டிஹைடு என்னும் நொதிப் பொருள் உள்ளது. இது யோனியில் உள்ள காயங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைத்து, வலியைப் போக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சுடுநீர் - 1/2 கப்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

சுடுநீரில் இஞ்சி சாறு மற்றும் சீரகப் பொடி சேர்த்து நன்கு கலந்து, தினமும் காலை உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இந்த பானத்தை வலி குறையும் வரைக் குடிக்க வேண்டும்.

குறிப்பு:

குறிப்பு:

சுகப்பிரசவத்திற்கு பின் பெண்கள் நன்கு சாப்பிட வேண்டும். ஏனெனில் சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தைப் பெற்றெடுத்த பெண்களுக்கு இரத்தப் போக்கு அளவுக்கு அதிகமாக இருப்பதால், உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Natural Remedy To Reduce Vaginal Pain After Childbirth

Here is a natural remedy that can help reduce vaginal pain after childbirth.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter