For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரில் குழந்தை பெற்றாலும், முழு பில் கட்ட வேண்டும் - மருத்துவமனை கண்டிப்பு!

காரில் குழந்தை பெற்றதற்கும் முழு பில் கட்ட சொன்ன மருத்துவமனை நிகழ்வு பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

முன்பு போல இப்போது அதிகம் சுகப் பிரசவம் ஆகாமல் இருப்பதால் தான் இன்று பல சிக்கல்களை உடல் ரீதியாக, ஆரோக்கியம் ரீதியாக, பொருளாதார ரீதியாக நாம் சந்திக்க நேரிடுகிறது. சிசேரியன் வந்த பிறகு மனிதாபிமானம் பெரியளவில் குறைந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

This Mom Gave Birth in Her Car, but the Hospital Still Charged Her Full Price

Image Courtesy

சுகப்பிரசவம் ஆகும் நிலை இருந்தாலும், சில மருத்துவமனையில், பயமுறுத்தி சிசேரியன் செய்ய வைத்திவிடுகிறார்கள். இதோ, ஃப்ளோரிடாவில் சுகப்பிரசவம் நடந்தும் கூட, அதையும் காசு பார்க்க மருத்துவமனை செய்த காரியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரில் குழந்தை பெற்ற பவுலா!

காரில் குழந்தை பெற்ற பவுலா!

பவுலா டி'அமோர் அன்று மருத்துவமனையில் குழந்தை பெற தான் ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆனால், பவுலாவின் கருவில் உதித்த குட்டி தேவதைக்குக் பொறுக்க நேரமில்லாததால், அந்த மருத்துவமனை வாசலிலேயே பவுலாவின் காரில் உதயமானார்.

ஃப்ளோரிடா!

ஃப்ளோரிடா!

ஃப்ளோரிடாவை சேர்ந்த பவுலாவிற்கு தன் மகளை பெற்றெடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும். மறுப்பக்கம் அந்த லோக்கல் மருத்துவமனை ஒரு அதிர்ச்சியான செய்தியுடன் காத்துக் கொண்டிருந்தாது.

பார்க்கிங்!

பார்க்கிங்!

பார்கிங் பகுதியிலேயே குழந்தையை பெற்றுவிட்டார் பவுலா. அந்த நேரத்தில் அருகே இருந்த நர்ஸ்களும் உடனே ஓடி வந்து குழந்தை பெற்றெடுக்க உதவினர். நர்ஸ்கள் ஓடி வரும் போது குழந்தையின் தலை பகுதி வெளிப்பட்டு, அதை பவுலாவின் கணவர் கைகளில் ஏந்திய நிலையில் இருந்தார்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

காரில் குழந்தையை பெற்றெடுத்ததை அடுத்து பவுலாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி, முழு பில்லை கட்டுங்கள் என மருத்துவமனை நீட்டியே பேப்பர். 7000 டாலர்களை நீங்கள் கட்ட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது முழு டெலிவரிக்கான கட்டணம் என அறியப்படுகிறது.

அட்ஜஸ்ட் இல்லையா?

அட்ஜஸ்ட் இல்லையா?

காரில் குழந்தை பெற்றதற்கும் முழு பில் கட்ட கூறுவது எப்படி நியாயம். அட்ஜஸ்ட் செய்து அல்லவா பில் கொடுத்திருக்க வேண்டும் என பவுலா தரப்பு கேட்கிறது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை மேலிடத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Mom Gave Birth in Her Car, but the Hospital Still Charged Her Full Price

This Mom Gave Birth in Her Car, but the Hospital Still Charged Her Full Price
Story first published: Thursday, November 24, 2016, 12:34 [IST]
Desktop Bottom Promotion