For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரியவில்லையா?

By Maha
|

பிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால். மேலும் தாய்ப்பால் தான் குழந்தையின் முக்கிய உணவும் கூட. தாய்ப்பாலின் மூலம் தான் குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமானதாக வைப்பதும் தாய்ப்பாலே.

தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

அத்தகைய தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் மிகவும் நல்லது. தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களின் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போதைய பெண்கள் அழகு கெட்டுவிடும் என்று தாய்ப்பால் கொடுப்பதில்லை. தாயான பெண்ணுக்கு அழகு முக்கியமா அல்லது குழந்தையின் ஆரோக்கியம் முக்கியமா? எனவே தாய்ப்பால் கொடுப்பதை எந்த ஒரு பெண்ணும் தவிர்க்கக்கூடாது.

வெளியே சொல்ல முடியாத தாய்ப்பால் கொடுப்பது பற்றிய சில உண்மைகள்!

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு எழும் ஓர் கேள்வி, எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான். எனவே இங்கு தமிழ் போல்ட்ஸ்கை எப்போது தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தெளிவாக கொடுத்துள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசி பிரச்சனைகள்

பசி பிரச்சனைகள்

பொதுவாக குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின், குழந்தைக்கு வெறும் தாய்ப்பால் மட்டும் போதாது. அவர்களுக்கு இக்காலத்தில் பசி அதிகம் இருக்கும். எனவே உங்கள் குழந்தை அடிக்கடி பசியால் அழுதால், அவர்களுக்கு தாய்ப்பாலின் அளவைக் குறைத்து, ஓரளவு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம்.

பணி

பணி

தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால், மகப்பேறு விடுப்பானது 6-9 மாதம் வரை தான் இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் வேலைக்கு செல்லும் முன், குழந்தைக்கு மற்ற உணவுகளையும் கொடுத்துப் பழக்குங்கள். அதிலும் 6 மாதத்திற்கு பின் குழந்தைக்கு மற்ற உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். இதனால் குழந்தை தாய்ப்பாலை எதிர்பார்த்து இருக்காது.

பல் முளைத்தல்

பல் முளைத்தல்

குழந்தைக்கு பற்கள் முளைக்க ஆரம்பித்து விட்டால், அவர்கள் எதிர்பாராதவிதமாக தாய்ப்பால் கொடுக்கும் போது கடிக்க ஆரம்பிப்பார்கள். அப்படி உங்கள் குழந்தை கடிக்க ஆரம்பித்தால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

வயது

வயது

குழந்தைக்கு 6 மாதத்திலேயே திட உணவுகளை கொடுக்க ஆரம்பித்துவிடுவதோடு, 1 1/2 வயதிற்குள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அசௌகரியம்

அசௌகரியம்

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் ஒருவித வெறுப்புணர்வு ஏற்படும். அப்படி நீங்கள் திடீரென்று உணர ஆரம்பித்தால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

ஆரோக்கிய பிரச்சனைகள்

ஆரோக்கிய பிரச்சனைகள்

தாய்மார்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டியிருந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When Should You Stop Breastfeeding?: International Breastfeeding Day

Are you wondering when to stop breast feeding your baby? Relax, we tell you when to stop breast feeding your baby and how to stop breastfeeding.
Desktop Bottom Promotion