For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிய தாய்மார்களுக்கான சில எளிய பாலூட்டும் டிப்ஸ்...

By Ashok CR
|

தாயாக இருப்பதை விட சிறந்த உணர்வு இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் அந்த உணர்வுக்கு தான் ஆசைப்படுவாள். இருப்பினும் புதிதாக தாயான உங்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்று கூறுவது மிகைப்படுத்தலாகாது. ஆரம்ப கட்டத்தில் இந்த வேலைகள் எல்லாம் பெரிய சுமையாகத் தான் தோன்றும்.

தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் குழப்ப நிலை நிலவத்தான் செய்யும். ஆனால் காலப்போக்கில் அதனுடன் ஒன்றிப் போவீர்கள். அதற்கு தேவையெல்லாம் உங்கள் நேரமும் பொறுமையும் தான். ஒவ்வொரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இந்த செவிலிப் பணி ஒவ்வொரு அனுபவங்களை ஏற்படுத்தும். ஆகவே உங்களுக்கு தோதாக இருக்கும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு எது சரி என கண்டறிவதற்கு சில நாட்கள் அல்லது ஒரு வாரமாவதில் கூட ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தாய்மை என்ற அந்தஸ்து சுவையூட்டுகிறதா? மேலும் அதற்கு தேவையான டிப்ஸ்களையும் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் என்ற அமுதம்

தண்ணீர் என்ற அமுதம்

தண்ணீர் என்ற முக்கியமான தனிமத்தை நம்மால் தவிர்க்கவே முடியாது. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியமானது. ஆனால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்திலும் கூட தண்ணீர் அதன் முக்கியத்துவத்தை இழப்பதில்லை. பால் வரத்தை அதிகரிப்பதற்காக அதிகளவில் தண்ணீரை பருக வேண்டும். அதனால் உங்களுக்கு தேவையான அளவில் தண்ணீரை நிரப்பி பாட்டில்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக தாயான பெண்களுக்கான தாய்ப்பால் கொடுக்கும் டிப்ஸ்களில் இதுவும் ஒன்று.

பால் நாளங்கள் அடைத்துள்ளவர்களுக்கு...

பால் நாளங்கள் அடைத்துள்ளவர்களுக்கு...

பால் நாளங்கள் அடைபடுவது என்பது பல பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனையே. உங்கள் பால் நாளங்கள் அடைபட்டிருந்தால், சூடான ஒத்தன பையை பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் போதும் அதனை பயன்படுத்தலாம். இரண்டு அல்லது மூன்று முறை பால் கொடுத்த பின் இது சரியாகி விடும். புதிதாக தாயான பெண்களுக்கான தாய்ப்பால் கொடுக்கும் டிப்ஸ்களில் இதுவும் கூட ஒன்றே.

தாய்ப்பால் கொடுப்பது காயப்படுத்தும் போது...

தாய்ப்பால் கொடுப்பது காயப்படுத்தும் போது...

தாய்ப்பால் கொடுக்கும் போது, முதல் சில நாட்களுக்கு வலி எடுக்கும். அதற்கு பால் கொடுக்கும் நேரத்தில் குளிர்ந்த நீரை பருக வேண்டும். அல்லது பால் கொடுக்கும் நேரத்தில் உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள். இதுவும் கூட புதிதாக தாயான பெண்களுக்கான தாய்ப்பால் கொடுக்கும் டிப்சாகும்.

புண்ணான காம்புகளுக்கு...

புண்ணான காம்புகளுக்கு...

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் மார்பக காம்புகள் புண்ணாகலாம். புண்ணான காம்புகளுக்கு களிம்புகளை பயன்படுத்தலாம். இருப்பினும் சிறிதளவு தாய்ப்பாலை மார்பக காம்புகளில் ஒழுக்க விடுவது தாய்ப்பால் கொடுப்பதில் சிறந்த டிப்ஸாக விளங்குகிறது. இதனால் வறட்சி மற்றும் வெடிப்புகளில் இருந்து காம்புகள் பாதுகாப்பாக இருக்கும். இவ்வகையான பல சூழ்நிலைகளில் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமால் விழிப்பதால், இவ்வகையான டிப்ஸ்களும் அவசியம் தேவைப்படுகிறது.

புண்ணான காம்புகளுக்கு...

புண்ணான காம்புகளுக்கு...

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் மார்பக காம்புகள் புண்ணாகலாம். புண்ணான காம்புகளுக்கு களிம்புகளை பயன்படுத்தலாம். இருப்பினும் சிறிதளவு தாய்ப்பாலை மார்பக காம்புகளில் ஒழுக்க விடுவது தாய்ப்பால் கொடுப்பதில் சிறந்த டிப்ஸாக விளங்குகிறது. இதனால் வறட்சி மற்றும் வெடிப்புகளில் இருந்து காம்புகள் பாதுகாப்பாக இருக்கும். இவ்வகையான பல சூழ்நிலைகளில் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமால் விழிப்பதால், இவ்வகையான டிப்ஸ்களும் அவசியம் தேவைப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்க பயன்படும் தலையணை...

தாய்ப்பால் கொடுக்க பயன்படும் தலையணை...

ஆரம்ப நாட்களில், குழந்தையை சரியாக வாய் வைத்து பால் குடிக்கச் செய்வது கஷ்டமாகத் தான் இருக்கும். இருப்பினும் தாய்ப்பால் கொடுக்க பயன்படும் தலையணை ஒன்றை வாங்கி விட்டீர்கள் என்றால், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். இவ்வகையான தாய்ப்பால் கொடுக்கும் டிப்ஸ் கண்டிப்பாக நல்லபடியாக வேலை செய்யும். தாய்ப்பால் கொடுக்க உதவும் தலையணை உங்கள் குழந்தையை சரியான அமைப்பு நிலையில் வைத்திருக்கும். அதனால் வாயையும் சரியாக மார்பகங்களில் வைக்கும்.

கைப்பெட்டி ஒன்றை தயார் செய்யுங்கள்

கைப்பெட்டி ஒன்றை தயார் செய்யுங்கள்

இது ஒரு மிகவும் முக்கியமான தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான டிப்ஸாகும். உங்கள் கைப்பெட்டியில் தண்ணீர் நிரப்பக் கூடிய பாட்டில், படிக்க புத்தகம், ஆற்றல் அளிக்கும் சாக்லேட், ஒரு துணி மற்றும் இதர பொருட்கள் என அனைத்தும் இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Nursing Tips For New Mums

Nursing tips for new moms will come in handy for all new parents. The best breastfeeding tips for new moms are given below. Nursing a baby will have its hurdles, but follow these breastfeeding tips for new mothers to make your experience pleasant and rewarding.
Desktop Bottom Promotion