For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் ஒரு குழந்தைக்கு திட உணவுகள் கொடுத்த ஆரம்பித்தால், அப்போது உடனே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.

ஆனால் தற்போது குழந்தை பிறந்து 6 மாதம் கூட, நகர்புறத்தில் இருக்கும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் கொடுப்பதில்லை. அதிலும் சிலர் அழகு குறைந்துவிடுமோ என்று எண்ணி விரைவில் நிறுத்திவிடுகிறார்கள். இருப்பினும் நிபுணர்களின் கருத்துப்படி, குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர்.

ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான். அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல் குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இங்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்து நிறைந்தவை

ஊட்டச்சத்து நிறைந்தவை

தாய்ப்பாலானது குழந்தைக்கு வேண்டிய அடிப்படை ஊட்டச்சத்துக்களை கொடுப்பதால், அவற்றை குறைந்தது ஆறு மாதங்களாவது கொடுக்க வேண்டும். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் எண்ணற்ற அளவில் உள்ளது. மேலும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளது.

சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள்

சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள்

குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். குழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

சளி, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள்

சளி, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள்

முக்கியமாக ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆகவே அவர்களுக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியினால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

அழற்சி ஏற்படுவதைத் தடுக்கும்

அழற்சி ஏற்படுவதைத் தடுக்கும்

குழந்தைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, மாட்டுப்பால் அல்லது சோயா பால் கொடுக்க ஆரம்பித்து, பின் திட உணவுப் பொருட்களைக் கொடுத்தால், சில சமயங்களில் அழற்சியை ஏற்படுத்தும். ஆனால் அவர்களுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுத்து வந்தால், அவர்களின் வயிற்றில் ஒரு லேயரானது உருவாகி, அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்.

குறிப்பு

குறிப்பு

பத்து மாதம் சுமந்து ஆசையாக பெற்ற குழந்தையின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை இருந்தால், அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தாமல், அவர்களுக்கு ஆறு மாதம் என்ன ஒரு வருடம் தாய்ப்பால் கொடுத்து வாருங்கள். இதனால் அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Breastfeeding Past 6 Months

There are a handful benefits of breastfeeding past 6 months. Here are some of the advantages of breastfeeding your baby of 6 months. Take a look.
Story first published: Monday, June 9, 2014, 16:59 [IST]
Desktop Bottom Promotion