For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் உற்பத்தியைக் குறைக்கும் செயல்கள்!!!

By Maha
|

குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தாய்ப்பால் தான் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்கும் உணவுப் பொருள். அத்தகைய தாய்ப்பாலானது திடீரென்று குறைய ஆரம்பித்தால், அப்போது உடனே அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து, அதனை சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தைக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

வெளியே சொல்ல முடியாத தாய்ப்பால் கொடுப்பது பற்றிய சில உண்மைகள்!

அதனால் தான் குழந்தை பெற்றெடுத்தப் பின்னர் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளச் சொல்கின்றனர். உங்களுக்கு திடீரென்று தாய்ப்பால் உற்பத்தியானது குறைகிறதா? அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லையா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை, தாய்ப்பால் உற்பத்தியை குறைக்கும் சில செயல்கள் மற்றும் விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது. அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, சரிசெய்து கொள்ளுங்கள்.

அவசியம் படிக்க வேண்டியவை: தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முறையற்ற ஊட்டச்சத்து

முறையற்ற ஊட்டச்சத்து

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் சத்துக்களான புரோட்டீன், கால்சியம் போன்றவை உடலில் இல்லாவிட்டால், அது தாய்ப்பால் உற்பத்தியைக் குறைத்துவிடும்.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளில் உள்ள ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தி, தாய்ப்பால் உற்பத்தியைக் குறைத்துவிடும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்மார்கள் பிறப்புக்கட்டுப்பாட்டு மாத்திரையை எடுத்துக் கொள்ளக்கூடாது.

கால்சியம் குறைபாடு

கால்சியம் குறைபாடு

தாய்ப்பால் உற்பத்தி குறைவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். தாய்ப்பால் உற்பத்திக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய சத்தில் குறைபாடு இருந்தால், அது தாய்ப்பாலை வறட்சியடையச் செய்துவிடும்.

சீரான இடைவேளையில் பாலூட்டாமல் இருப்பது

சீரான இடைவேளையில் பாலூட்டாமல் இருப்பது

சீரான இடைவேளையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும், தாய்ப்பால் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வர வேண்டும்.

உடல்நிலை கோளாறு

உடல்நிலை கோளாறு

உடல்நிலை சரியில்லாத காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது. அப்படி இடைவெளி ஏற்படும் போது, தாய்ப்பாலின் உற்பத்தியும் குறையும். எனவே தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மடி வீக்க நோய்/முலையழற்சி

மடி வீக்க நோய்/முலையழற்சி

மார்பகங்களில் கட்டிகளோ அல்லது அழற்சியோ ஏற்பட்டால் அதனை மடி வீக்க நோய் அல்லது முலையழற்சி என்று சொல்வார்கள். இந்த நிலையானது சீரான இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்காததால் ஏற்படும். ஒருமுறை இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உடனே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

மோசமான உணவு முறை

மோசமான உணவு முறை

சில நேரங்களில் மோசமான தாய்ப்பால் கொடுக்கும் முறையினாலும், தாய்ப்பால் உற்பத்தியானது குறையும். ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு பசிக்கவில்லை என்று எண்ணி சரியாக தாய்ப்பால் கொடுக்காமல் இருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் வயிறு நிறைய பருகுமாறு செய்யுங்கள். இல்லாவிட்டால், தாய்ப்பால் சுரப்பியினால் தாய்ப்பாலை சீராக சுரக்க முடியாது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மீண்டும் கர்ப்பம்

மீண்டும் கர்ப்பம்

கைக்குழந்தை இருக்கும் போதே, மீண்டும் கருத்தரித்தால், ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு தாய்ப்பாலின் உற்பத்தியானது குறைந்து நின்றுவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Things That Reduce Breast Milk Supply

Some factors can be responsible for breast milk supply being reduced suddenly. One of the main causes of not producing enough breast milk is improper nutrition of the nursing mother. However, there can be other factors that make things worse. Here are some of the things that can be responsible for decreasing breast milk production suddenly:
 
Desktop Bottom Promotion