For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்!!!

By Super
|

மகப்பேறு என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவாகும். ஆனால் போதிய குழந்தைகளை பெற்றெடுத்த பின் கர்ப்பமாவதை தடுக்க பெண்கள் பல வழிகளை தேர்ந்தெடுப்பார்கள். ஆண்களும் கூட சில நேரம் கருத்தடையில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் அதிகமாக ஈடுபடுவது பெண்களே. அப்படி ஈடுபடும் வழிகள் தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம். அப்படி நிரந்தமாக செய்யக்கூடிய வழிகளில் ஒன்று தான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை எனப்படும் ட்யூபெக்டோமி.

ட்யூபெக்டோமி என்பது கரு உண்டாவதை தடுக்கவும், மலடாக்கவும் ஒரு நிரந்தர வழியாகும். இந்த முறையில் கருமுட்டைச் செல்லும் குழாய் அடைக்கப்படும். அதனால் கருப்பைக்கு கருமுட்டைகள் செல்வது தடுக்கப்படும். ஆகவே சினைப்பை கருவுராது. சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சைக்கான வெட்டுக்கீறல், கருமுட்டை செல்லும் குழாய்களை வேகமாகவும் சுலபமாகவும் அடைத்தல் மற்றும் வேகமான நிவாரணம் என்று இந்த அறுவை சிகிச்சையில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் இதனால் ஏற்படும் சில பக்க விளைவுகளை நாம் ஒதுக்கி விடமுடியாது. குழந்தை பிறப்பை தடுக்க இந்த வழிமுறையை நீங்கள் தேர்ந்தெடுத்தால், அதன் பக்க விளைவுகளைப் பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

கருமுட்டை செல்லும் குழாய் அடைக்கப்பட்டதால், கரு உண்டாகும் வாய்ப்பு மிகவும் குறைவே. ஆனால் இந்த அறுவை சிகிச்சையினால் ஏற்படும் சில பக்க விளைவுகள், உங்கள் நிலைமையை மோசமடையச் செய்யலாம். ஆகவே அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் ரீதியாக பக்க விளைவுகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகவும். சீக்கிரமே மருத்துவரிடம் சென்று பிரச்சனையை கண்டுபிடித்தால் தான், விரைவில் அதற்கு ஒரு தீர்வும் கிடைக்கும். சரி, அப்படி என்ன தான் பக்க விளைவுகள் ஏற்படும் என்று பார்க்கலாமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of A Tubectomy

If you notice any difficulties after the surgical procedure, seek medical advice at the earliest. Early diagnosis will help resolve the problem easily and quickly. Here are some common side effects of a tubectomy.
Desktop Bottom Promotion