For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை தடுக்க சில டிப்ஸ்...

By Maha
|

கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின்னர் உடலிலும், வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் சில சமயங்களில் சந்தோஷமாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தாலும், சில நேரங்களில் அவை கஷ்டமானதாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கும். அத்தகையவற்றில் ஒரு கஷ்டமான ஒன்று தான் உடல் துர்நாற்றம். சிலருக்கு பிரசவத்திற்கு முன்னும், பின்னும் உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும்.

இத்தகைய துர்நாற்றம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிறப்புறுப்பு மற்றும் அக்குள்களில், ஹார்மோன்களில் மாற்றங்களினால் கடுமையான துர்நாற்றமானது உடலில் இருந்து வெளிவரும். மேலும் மற்றொரு காரணம் என்றால், அதிகமாக வியர்த்தல். ஆம், தாய்ப்பால் கொடுக்கும் போதுஇ உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிப்பதால், உடலில் உள்ள வெப்பமானது அதிகரித்து, இறுதியில் வியர்வையை அதிகமாக்குகிறது.

எனவே இவ்வாறு பிரசவத்திற்கு பின் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றினால், உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். மேலும் இத்தகைய வழிகளை சாதாரணமாக அதிகமாக வியர்வை வெளியேறுபவர்களும் பின்பற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தமாக இருப்பது

சுத்தமாக இருப்பது

தினமும் தவறாமல் குளித்துவிட வேண்டும். எவ்வளவு தான் குழந்தைக்கும் ஓய்வின்றி வேலைப் பார்த்தாலும், தவறாமல் குளிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். மேலும் இறுக்கமான ஆடைகளை அணியாமல், சற்று லூசாக இருக்கும் ஆடைகளை உடுத்துவது சிறந்ததாகும். குறிப்பாக ஒருமுறை உடுத்திய உடையை துவைக்காமல் மீண்டும் உடுத்தக்கூடாது.

எலுமிச்சை

எலுமிச்சை

குளிக்கும் போது இறுதியில் தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து உடலை அலச வேண்டும். இதனால் பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அதுவும் இந்த முறையை குளித்த பின், இறுதியில் ஒரு கப் நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி செய்ய வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, உடலை அலசினால், சருமத்தில் உள்ள pH-இன் அளவு குறைவ்தோடு, குழந்தை பிறந்த பின் ஏற்படும் உடல் துர்நாற்றமும் நீங்கும்.

டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil)

டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil)

டீ ட்ரீ ஆயிலும் ஒரு நேச்சுரல் டியோடரண்ட். அதற்கு இந்த ஆயிலை ஒரு பகுதி நீரில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, உடலில் ஸ்ப்ரே செய்து கொண்டால், உடல் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

புதினா

புதினா

புதினாவும் உடல் துர்நாற்றத்தை போக்குவதில் சிறந்த ஒரு பொருள். அதற்கு புதினாவின் இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அந்த நீரைக் கொண்டு, குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால், உடல் துர்நாற்றத்தை போக்கலாம்.

தேன்

தேன்

தினமும் குளிக்கும் போது, இறுதியில் ஒரு டீஸ்பூன் தேனை, நீரில் கலந்து குளிக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருப்பதோடு, பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் துர்நாற்றத்தையும் நீக்கும்.

டயட்டில் கவனம் தேவை

டயட்டில் கவனம் தேவை

உணவுகளில் சில உடல் துர்நாற்றதைத் தரக்கூடியவை. அதில் பூண்டு, சீரகம், ஆல்கஹால், காப்ஃபைன், அதிக அளவு இறைச்சி போன்றவற்றாலும் உடல் துர்நாற்றம் ஏற்படும். ஆகவே இத்தகையவற்றை அதிகம் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reduce Body Odour After Pregnancy | பிரசவத்திற்கு பின் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை தடுக்க சில டிப்ஸ்...

Pregnancy and labour will leave many changes in your lifestyle and body. While many of these changes are exciting and enjoyable, some others will make you anxious and desperate. A change in the body odour after pregnancy is one among them. Here are some easy remedies for your body odour after pregnancy.
Story first published: Tuesday, April 30, 2013, 16:48 [IST]
Desktop Bottom Promotion