For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பாலை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள்!!!

By Super
|

தாய்ப்பாலுக்கு சிறந்த பால் இந்த உலகத்தில் ஏது? பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஆரோக்கியத்துடனும், திடமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வளரும். அதனால் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கவே விரும்புவார்கள். அவ்வாறு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பெரும் எரிச்சலே, போதுமான அளவு பால் சுரக்காமல் இருப்பது தான். பசியில் குழந்தை அழுது துடிக்கும் போது, போதிய அளவு பால் சுரக்காமல் போனால் என்ன செய்யப்போகிறீர்கள்? போனால் போகட்டும் என விட்டு விட போகிறீர்களா?

கண்டிப்பாக கூடாது. எல்லோருக்கும் பால் சீராக சுரப்பதில்லை. சிலருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் சிலருக்கோ சரியான வழி முறையை பின்பற்றாததனால், பால் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். ஆனால் பால் சுரப்பதை கண்டிப்பாக அதிகரிக்கலாம். அதற்காக மருந்து மாத்திரைகள் என நாட தேவையில்லை. பாதுகாப்பான சில இயற்கை வழியின் மூலமாகவே பால் சுரப்பதை எளிதில் அதிகரிக்கலாம். அதற்கு கீழ்கூறிய இயற்கை வழிகளை இன்றிலிருந்து பின்பற்ற தொடங்கினாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பம்ப்

பம்ப்

குழந்தைக்கு பால் கொடுக்கும் இடைவேளையில் பம்ப் செய்யும் கருவியை வைத்து மார்பகங்களை அவ்வப்போது பம்ப் செய்ய வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதிலும் குழந்தைக்கு பால் கொடுத்த பின்னர், குறைந்தது 5 நிமிடங்களுக்காவது பம்ப் செய்வதில் ஈடுபட வேண்டும். மார்பகங்களுக்கு இவ்வகை அழுத்தங்கள் கொடுக்கும் போது, அதற்கு அதிக அளவில் பால் தேவைப்படுகிறது என்று உடலுக்கு சொல்லப்படும்.

இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறி பால் கொடுக்கவும்

இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறி பால் கொடுக்கவும்

இரண்டு மார்பகங்களிலும் மாறி மாறி பால் கொடுத்தால், அது மார்பகங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அதிக அளவில் பால் தேவைப்படுகிறது என்று உடலுக்கு சொல்லப்படும். மேலும் அது குழந்தைக்கும் பாலை உறிஞ்சுவதற்கு வசதியாக இருக்கும். ஒரே பக்கத்தில் அதிக அளவில் பாலை குடித்துவிட்டால், அந்த மார்பகம் பால் இல்லாமல் வற்றி போகும். அதனால் அந்த பகுதியில் மீண்டும் பால் சுரப்பதற்கு, ஒரு முறை பால் கொடுக்கும் போது, இரண்டு அல்லது மூன்று முறை பால் கொடுக்கும் பக்கத்தை மாற்ற வேண்டும்.

பால் கொடுக்கும் போது மார்பகங்களை அழுத்துங்கள்

பால் கொடுக்கும் போது மார்பகங்களை அழுத்துங்கள்

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது மார்பகங்களை நன்றாக அழுத்த வேண்டும். இது பால் வெளிவர சுலபமாக இருக்கும். அதனால் ஒரு முறை பால் கொடுக்கும் போது, மார்பகங்கள் முழுமையாக காலியாகும்.

வெந்தயம்

வெந்தயம்

குழந்தை பிறப்புக்கு உதவியாக இருக்கும் வெந்தயத்தை உண்டால், அது பால் சுரப்பதற்கும் பயன்படும். ஆனால் அது வாயுவை ஏற்படுத்துவதால், சற்று கவனமாக அளவாக சாப்பிட வேண்டும்.

தாய்ப்பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர்

தாய்ப்பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர்

வெந்தயத்தை போலவே தாய்ப்பாலில் தயாரிக்கப்பட்ட பாலை பருகினால், அது பால் சுரப்பதை அதிகரிக்கும். ஆனால் சிலருக்கு இந்த தேநீரை பருகினால், வயிற்று போக்கு ஏற்படும். அந்த நேரத்தில் உங்கள் மேல் துர்நாற்றம் வீசும். அதனால் கவனமாக இருக்கவும்.

பால் சுரக்க உதவும் பிஸ்கட்டுகள்

பால் சுரக்க உதவும் பிஸ்கட்டுகள்

பால் சுரப்பதற்கு சில பிஸ்கட்களும் உதவும். இதனை கடையில் வாங்கலாம் அல்லது வீட்டிலேயே கூட தயாரிக்கலாம் அல்லது இந்த குணங்கள் அடங்கிய ஓட்ஸை சாப்பிட்டால், தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க உதவியாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்

ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்

அப்படி ஒன்னும் விசேஷ உணவுகள் என எதுவும் தேவையில்லை. பொதுவாக குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் மீதே தாய் தன் கவனத்தை செலுத்துவதால், நல்ல உணவை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஆகவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொண்டால் தான், அது பால் சுரக்க எரிபொருளாக செயல்படும்.

பீர் குடிக்கலாம்

பீர் குடிக்கலாம்

பீர் குடிப்பதற்கு முன்பு முதலில் மருத்துவரிடம் கலந்தாலோசனை பெற வேண்டும். பொதுவாகவே பீர் என்பது பால் சுரக்க உதவும் ஒரு பானம் என்று பலராலும் கூறப்படுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கவும்

மன அழுத்தத்தை குறைக்கவும்

சொல்வதை விட, செய்வது தான் கஷ்டம். முக்கியமாக பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும் போது தான் அதிக அழுத்தம் ஏற்படும். இவ்வகை அழுத்தம் ஏற்படும் போது, உடலில் ஆக்ஸிடாக்சின் சுரக்கும். இது பால் சுரப்பதை குறைக்கும். எனவே மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.

குழந்தையுடன் படுக்கையில் படுக்கவும்

குழந்தையுடன் படுக்கையில் படுக்கவும்

குழந்தையுடன் சேர்ந்து படுக்கும் போது, கண்டிப்பாக பால் கொடுக்க தூண்டும். இவ்வாறு அதிகமாக பால் கொடுக்க கொடுக்க அதிகமாக சுரக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

பால் சுரப்பு நிபுணர்கள், தாய்மார்களை கண்டிப்பாக ஓட்ஸை சாப்பிடுமாறு பரிந்துரைக்கிறார்கள். இதற்கு அதன் இரும்பு சத்தோ அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் அதை உண்ணும் அனைத்து தாய்மார்களும் பால் சுரப்பு அதிகரித்திருப்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways to Increase Your Breast Milk Supply

Breastfeeding For a breastfeeding mom, there's nothing quite as frustrating as feeling like you're not producing enough milk. You've got a hungry baby here, what the heck do you do!? Give up? No way! Increasing your milk production is possible, and you don't have to use some quasi-safe pills to do it. Here's a start on some safe, natural ways to boost your milk supply.
Desktop Bottom Promotion