For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய செயல்கள்!!!

By Ashok CR
|

ஒரு பெண் தாயாகும் போதுதான் முழுமை அடைகின்றாள். ஒவ்வுறு பெண்ணும் கருவுற்றிருக்கும் காலம் தொடங்கி பிரசவிக்கும் காலம் வரை பல இன்னல்களை சந்திக்கின்றனர். பிரசவம் முடிந்த பிறகு குழந்தை பராமரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்குகின்றனர். தனது உடல் நலத்தை பற்றிய எண்ணத்தை தவிர்கின்றனர். இதனால், அவர்களது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆதலால், குழந்தையை பராமரிப்பதோடு அவர்களது உடல்நலத்திலும் ஈடுபாடு கொண்டு பராமரிக்கத் தொடங்கவேண்டும்.

பிரசவம் என்பது உடல்ரீதியாக ஏற்படக்கூடிய செயல்பாடு. அதனால், உங்கள் குழந்தை பிறந்த முதல் சிலநாட்களுக்கு உங்கள் உடல் மிகவும் பலகீனமாகவும் காயங்கள் குணமடைந்து வரும் காலமாகவும் இருக்கும். இந்த குணமடையும் காலத்தில் உடல்நலம், உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் தளர்ச்சி போன்றவை உங்களை பெரிதும் பாதிக்கக்கூடும்.

Hygiene Tips To Follow After Delivery

ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மற்றற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாகும். இருந்தாலும், உங்கள் உடலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு புணர்குழை எரிச்சல்கள் மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் போன்றவை உங்களை பெரிதும் பாதிக்கும். நீங்கள் கருவுற்றிருக்கும் போது உங்கள் உடலில் பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவை அனைத்தும் குழந்தை பிறந்த உடனே நின்றுவிடாது. குழந்தை பிறந்தவுடன் முதல் சில நாட்களுக்கு உங்கள் உடலில் எந்த பிரச்சனையும் இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். போதுமான ஓய்வு மற்றும் கட்டுபாடான டயட் போன்றவை மட்டுமல்லாது உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு உடல்நலத்தை பாதுகாக்கவேண்டும்.

கருவுற்றுக்கும் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களது டயட்டில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பிரசவத்திற்கு பிறகு எல்லா தாய்மார்களும் தங்களது உடல்நலத்தை புறக்கணித்து குழந்தையிடமே அதிக கவனம் செலுத்துவார்கள்.

அதனால் பிரசவத்திற்கு பிறகு நமது உடல் ஆரோக்கியத்திற்கும் குழந்தையின் நலத்திற்கும் தேவைப்படும் சில பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதனை பின்பற்றுவதால் நீங்களும் உங்கள் குழந்தையும் சிறந்த ஆரோக்கியமான உடல்நலத்தை பெறுவீர்கள். இந்த பிரசவத்திற்கு பின் பின்பற்றப்படும் உடல்நல டிப்ஸ் உங்கள் மார்பகங்களையும் அறுவைசிகிச்சையினால் ஏற்பட்ட தையல்களையும் பாதுகாக்க உதவும். தொற்றுநோய்கள் வாராமல் இருப்பதற்கு பிறப்புறுப்புகள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.

கைகளை கழுவுதல்

ஒழுங்கான முறையில் கைகளை கழுவுதல் இதுதான் புதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான பின்பற்றவேண்டிய பழக்கமாகும். இது மிகவும் எளிதான டிப்ஸ் என்றாலும் ஜுரம், ஜலதோஷம் மற்றும் வயற்று இன்பெக்ஷன் போன்றவைகள் வராமல் தடுக்கும். கைகளை கழுவதினால் வேலைகள் செய்யும் போது நமது கைகளில் வந்து சேரும் கிருமிகளை விரட்டும்.

எப்பொழுது கழுவ வேண்டும்

கைகளை கழுவ வேண்டும் என்றவுடன் நம் மனதில் எழும் இரண்டு கேள்விகள் இவைதான் "எப்பொழுது கழுவவேண்டும்" மற்றும் "எப்படி கழுவவேண்டும்". சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், காயங்களுக்கு மருந்து தடவுவதற்கு முன்னும் பின்னும்,உங்கள் குழந்தையை தூக்குவதற்கு முன்பும், டயபரை மாற்றிய பின்பும் கைகளை கழுவவேண்டும்.

எப்படி கழுவ வேண்டும்

சோப்பு தடவி நன்றாக நுரை வரும்வரை தேய்க்கவேண்டும். சுமார் 20 நொடிகளுக்கு விரல்களின் நடுவே, நகங்களில் கீழே, கைகளின் பின்புறம்,மணிக்கட்டு போன்ற இடங்களில் கழுவவேண்டும். பின்னர், தண்ணீர் விட்டு நன்றாக கைகளை கழுவவேண்டும்.

வஜினல் டியரை தணிப்பது

பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு தாய்மாரும் உடல் பரிசோதனைக்கு வழக்கமான செல்லவேண்டும். பிரசவத்திற்கு பிறகு வஜினல் டியர் ஏற்பட்டிருந்தால், முதல் இரண்டு வாரங்களுக்கு அந்த இடத்தில் புண் ஏற்பட்டு வலி எடுக்கும். அந்த புண் ஆறுவதற்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். வீக்கம் குறைவதற்கு ப்ரோசன் பாட்களை உபயோகிக்கலாம். அதனை உங்கள் மாதவிடாய் பாட்களுக்கும் புண்ணிற்கும் நடுவே வைத்து உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் படுமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

வெந்நீர்

பிரசவத்திற்கு பின் தாய்மார்களுக்கு சிறுநீர் கோளாறுகள் ஏற்படுவது என்பது பொதுவான ஒன்றாகும். உங்கள் கருப்பையானது சிறுநீர்ப்பை மீது இறங்கிவிடும் இதனால் சிறுநீரை அடக்க முடியாமல் ஆகிவும். எனினும், சில நாட்களுக்கு பிறகு சிறிதாகி சுருங்கி விடும். நீங்கள் இரும்பும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் கசிவு ஏற்படும். இதற்கு நீங்கள் பிரஸ் பாட்களை உபயோகிக்கலாம். பல வாரங்களுக்கு பிறகும் இது நீடித்தால் டாக்டரை அணுகவேண்டும்.

சிறுநீர்ப்பை இன்பெக்ஷன்

சிறுநீர்ப்பையில் உள்ள செதில்கள் வீக்கம் அடைந்ததால் சிறுநீர் கழிப்பது கடினமாக இருக்கும். பிரசவத்திற்கு பிறகு மிகவும் சிரமமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் போது தொடர்ந்து எரிச்சல் மற்றும் வலி ஏற்பட்டால் சிறுநீர்ப்பை இன்பெக்ஷன் வரும் வாய்ப்பு அதிகமாகும். இந்த இன்பெக்ஷன் குறைவதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் அதிகமாக சிறுநீர் கழித்தால் இன்பெக்ஷன் குறையத் தொடங்கும்.

இன்பெக்ஷனை குறைத்தல்

ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்த பிறகு அந்த பகுதியை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். கழுவிய பிறகு காயவிட வேண்டும். இது உங்கள் இன்பெக்ஷன் மற்றும் வலியையையும் குறைக்கச் செய்யும்.

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்தல்

சிறுநீர்கழிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுவதால் பிறப்புறுப்பில் இருந்தும் சிறுநீர்ப்பையில் இருந்தும் பரவும் இன்பெக்ஷன்கள் தடுக்கப்படும். பிரசவத்திற்கு பிறகு சில வாரங்களுக்கு வஜினல் டிஸ்சார்ஜ் இருந்து கொண்டிருக்கும். உங்கள் பிறப்புறுப்பில் காய்ந்த இரத்தக்கறை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இன்பெக்ஷன் வராமல் இருப்பதற்கு சானிடரி பாட்களை உபயோகிக்க வேண்டும்.

4 மணிநேரத்திற்கு ஒருமுறை பாட்களை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை பாட்களை மாற்றும் போதும் சிறுநீர் கழிக்கும் போதும் உங்கள் பிறப்புறுப்பை முறையாக கவனிக்கவேண்டும். கெட்ட வாடை அடித்தாலோ அல்லது சிவந்து காணப்பட்டாலோ டாக்டரை அணுகவேண்டும்.

சுத்தமாக பராமரித்தல்

அறுவைசிகிச்சை முறையில் பிரசவித்தால், தையல்களால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் தையல்களும் பிறப்புறுப்பும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் தையல்களிலும் வடுக்களிலும் இன்பெக்ஷன் வராமல் பராமரிக்க வேண்டும்.

மார்பகங்களில் ஏற்படும் இன்பெக்ஷன்களை தடுத்தல்

குழந்தைக்கு பால் புகட்டிய பின்பு உங்கள் மார்பகங்களில் படிந்திருக்கும் உமிழ்நீரை கழுவ வேண்டும். உங்கள் பாலில் சிறிது எடுத்து மார்காம்புகளில் தடவி காய விடவும். இறுக்கமான உடைகளை தவிர்க்க வேண்டும். காற்று உள்ளே புகுவதற்கு ஏதுவான தளர்ந்த உடைகளையே அணிய வேண்டும். கதர் உள்ளாடைகளை அணிவதால் காயவைப்பதற்கு எளிதாகவும் கிருமிகள் வராமலும் இருக்கும். பிரஸ்ட் பாட்களை உபயோகிக்கலாம். மேலும் அவை நனைந்த பின்பு உடனே மாற்றி விடவும். ஏனெனில் அதில் கிருமிகள் வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிளாஸ்டிக்காலான பேட்களை உபயோகிக்காதீர்கள்.

மார்பு காம்பு புண்களுக்கான லனொலின் கிரீம்

லனொலின் கிரீம்கள் மார்காம்பு புண்களுக்கான சிறந்த தீர்வு. பால் புகட்டுவதற்கு முன் இந்த கிரீமை கழுவவேண்டிய அவசியம் இல்லை.

பிரசவத்திற்கு பிறகு ஒவ்வொரு தாய்மார்களும் உடல்நலப் பராமரிப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உங்கள் உடல்நலம் சீக்கிரமாக குணமடைவதற்கு இந்த டிப்ஸ்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

English summary

Hygiene Tips To Follow After Delivery

Following postnatal hygiene care tips is important to ensure that you and your baby are in good health. Postnatal hygiene tips will help you better in taking care of your breasts and stitches if you have had a caesarean section. Also keeping the intimate areas clean at all times is of utmost importance if you want to shun away the infection.
Story first published: Saturday, November 30, 2013, 19:37 [IST]
Desktop Bottom Promotion