For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பாலின் சுரப்பை நிறுத்துவதற்கான சில இயற்கை வழிகள்!!!

By Maha
|

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது தான் தாய்ப்பால். ஏனெனில் இதிலிருந்து தான் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் அவர்களுக்கு வேண்டிய நோயெதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும். இத்தகைய தாய்ப்பாலை குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரைக் கொடுப்போம்.

ஏனெனில் எந்த அளவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றியமையாததோ, அதேப் போல் அவர்கள் வளர வளர மற்ற உணவுகளும் மிகவும் முக்கியமானது. எனவே பல தாய்மார்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். அதனால் நாளடைவில் குழந்தைகளும் தாய்ப்பாலை மறந்துவிடுவார்கள். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினாலும், ஒரு கட்டத்தில் மார்பகங்களில் இருந்து தாய்ப்பால் தானாக வெளியேறும்.

இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை பின்பற்றினால், நிச்சயம் தாய்ப்பால் வெளியேறுவதை நிறுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைகோஸ்

முட்டைகோஸ்

தாய்ப்பால் வடிவதை தடுக்க ஒரு சிறந்த வழியென்றால், குளிர்ச்சியான முட்டைகோஸ் இலைகளை மார்பகங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு செய்தால், தாய்ப்பால் வற்றிவிடும்.

சேஜ் டீ

சேஜ் டீ

ஒருவேளை முட்டைகோஸின் இலைகள் வேலை செய்யாவிட்டால், சேஜ் இலையால் செய்யப்பட்ட டீயை, தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தி குறைந்துவிடும்.

தண்ணீர்

தண்ணீர்

தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தியைத் தடுக்கலாம். ஒருவேளை உடலில் வறட்சி ஏற்பட்டால், அது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரித்துவிடும்.

புதினா

புதினா

புதினாவின் சுவையுள்ள எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும், தாய்ப்பால் வற்றிவிடும். எனவே தினமும் புதினா டீ அல்லது புதினாவின் சுவைக் கொண்ட உணவுப் பொருளை உட்கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஐஸ் பேக்

ஐஸ் பேக்

இயற்கை வழியில் தாய்ப்பாலின் சுரப்பைத் தடுக்க வேண்டுமானால், தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Dry N Stop Breast Milk?

When you stop breastfeeding your baby, you will come across one of the biggest problems which is leaking breasts. There are a number of ways to dry your breast milk and to stop the production. Here is a list of natural ways for you to stop milk production and to dry up your breast milk supply.
Story first published: Tuesday, September 24, 2013, 19:17 [IST]
Desktop Bottom Promotion