For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிசேரியன் பிரசவத்திற்கு பின் மேற்கொள்ள வேண்டிய உடல்நல பராமரிப்புகள்!!!

By Ashok CR
|

பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மறுபிறப்பு போன்றதாகும். அது அறுவை சிகிச்சையோ அல்லது சுகப்பிரசவமாகவோ இருந்தாலும் அந்த தாய் அடையும் வலிக்கு ஈடு இணை கிடையாது. எந்த முறையில் பிரசவித்திருந்தாலும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளும் பிரச்சனைகளும் பல இருக்கின்றன. இவை அனைத்தையும் மறைத்து ஒரு தாய் தன் குழந்தையிடம் மலர்ந்த முகத்துடன் காட்சியளிப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

நமது வீட்டிற்கு வரும் புது நபரின் (குழந்தை) வருகை கொண்டாடப்பட வேண்டிய முக்கிய தருணமாகும். இந்த கொண்டாட்டங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் நடுவில், அந்த குழந்தையை ஈன்ற தாயின் உடல் நலத்தை பாதுகாப்பது முக்கியமான ஒன்றாகும். பிரசவத்திற்கு பின் வரும் நாட்கள் மிகவும் முக்கியமானதாகவும் சவாலாகவும் விளங்கும். அதிலும், அறுவைசிகிச்சை மூலமாக உங்களுக்கு பிரசவம் நடந்திருந்தால் கூடுதல் கவனம் தேவை. பிரசவத்திற்கு பின் ஒருதாய்க்கு காயங்கள் ஆறுவதற்கு போதுமான ஓய்வும் கவனிப்பும் தேவைப்படும். இந்த காலத்தில் வீட்டு வேலைகள் செய்வது மற்றும் மற்ற குழந்தைகளை கவனிப்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கவனிக்கப்பட வேண்டியுள்ளதால் உங்கள் கணவரிடமும் பெற்றோரிடமும் இதை பற்றி பேசுங்கள்.. எல்லா புது தாய்மார்களும் சில பிரச்சனைகளும் வரம்புகளும் ஏற்பட்டிருக்கும். அதனை புரிந்து கொண்டு அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நேரங்களில் தேவையான பராமரிப்புகளை கையாள தயாராகுங்கள். புதிதாக தாயான எந்த ஒரு பெண்ணுக்கும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தளர்ச்சி ஏற்படுவது ஒரு பொதுவான விஷயமாகும். அதனை ஒரு பெண்ணிற்குரிய வல்லமையை கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.. உங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக பேச முற்படுங்கள். உங்கள் கஷ்டங்களை எதிர்கொண்டு பயணம் செய்ய இது பெரிதும் உதவியாக இருக்கும். அறுவை சிகிச்சை மூலமாக பிரசவித்திருக்கும் தாய்மார்கள் மேற்கொள்ளவேண்டிய உடல் நல பராமரிப்புகள் சில இதோ உங்களுக்காக.

வழிமுறை 1:

குழந்தை பிறந்த பின்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் முன் நீங்கள் செய்ய வேண்டியது சில உள்ளது. உங்கள் அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின் மேற்கொள்ளும் உடல்நல பராமரிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

* அறுவை சிகிச்சை நடந்த பின், உங்கள் டாக்டர் சில மணி நேரங்களிலேயே உங்களை மெதுவாக நடக்கச் சொல்லுவார். இது உங்களை குணப்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். எனினும், கவனமாக மெதுவாக நடக்கவும்.

* அறுவை சிகிச்சை வலியில் இருந்து மீளுவதற்கு உங்கள டாக்டரிடம் டிப்ஸ் கேட்கலாம். தேவைப்பட்டால் மருந்து கூட கேட்கலாம். மேலும், அதனால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் கேட்க மறந்து விடாதீர்கள்.

* 6 வாரங்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருப்பதால் அதிகமாக உறிஞ்சும் தன்மையுடைய சானிடரி பேட்களையே உபயோகிக்க வேண்டும். உங்கள் மருத்துவமனையிலேயே அதனை வழங்குவார்கள். கொடுக்க வில்லையென்றால் கேட்டு வாங்க வேண்டும்.

* உங்களுக்கு சாய்வு நாற்காலிகளில் உட்கார விரும்பம் என்றால் கண்டிப்பாக உட்காரலாம். இது உங்களது அறுவை சிகிச்சை புண்களையும் வலிகளையும் வேகமாக குணமாக்கும்.

வழிமுறை 2:

வீட்டிற்கு வந்த பின்பு, அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின் மேற்கொள்ளும் உடல்நல பராமரிப்புகள் மிகவும் முக்கியமானவை. இதனை வீட்டிற்கு வந்த பிறகும் தொடர வேண்டும்.

* இந்த நாட்களில் உங்கள் வேலைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். 6 வாரங்களுக்கு கனமான பொருட்களை தூக்க முயற்சி செய்யக்கூடாது. உங்கள் வேலைகளை அதிகப்படுத்திக்கொள்ள உடல் நல நிபுணரின் அறிவுரையை பெற வேண்டும்.

* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உடலின் நீர்சேர்க்கை அதிகமாக இருக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

* உங்கள் குழந்தைக்கு பால் புகட்டுவதற்கும் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுக்க வெகு தூரம் நடக்க வேண்டியில்லாது எளிதாக எடுப்பதற்கு தகுந்தவாறு ஒரு அமைப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

* வீட்டின் உள்ளேயே சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் வேகமாக குணமடையும்.

* அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் அல்லது உடல் செயல்பாட்டில் ஒழுங்கின்மை போன்று ஏதாவது ஏற்பட்டால் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடனே உடல் நல நிபுணரை அணுக வேண்டும். இது அறுவை சிகிச்சைக்கு பின் மேற்கொள்ள வேண்டிய உடல் நல பராமரிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

* குளிக்கும் போது உங்கள் அறுவை சிகிச்சை தையல்களை கவனமாக கையாள வேண்டும். குளிக்கும் போது பிளாஸ்டிக் கொண்டு அதனை மூட வேண்டும். பாத் டப் மற்றும் நீச்சல் குளத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

* நீங்கள் கார் ஓட்டுவதில் விருப்பம் உடையவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு பின் கார் ஓட்டுவதில் கவனம் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் குறைந்தது 4 வாரங்களுக்கு கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* அறுவை சிகிச்சைக்கு பின் சில வாரங்களுக்கு உடலுறவில் ஈடு படக்கூடாது. உங்கள் குழந்தையோடு அதிக நேரம் செலவழித்து உங்கள் உறவை மேம்படுத்துங்கள். இது உங்களுக்கு சந்தோஷம் அளிக்கும்.

English summary

Health Care For Post-C Section

Days that follow delivery are important and can be termed as one of the most challenging times, especially if you had undergone a c-section. The post delivery period is a period when a mother needs adequate rest and care for healing. Here are a few things you need to know and follow in the health care regime after a c-section.
Story first published: Tuesday, November 26, 2013, 17:46 [IST]
Desktop Bottom Promotion