For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை பிறந்த பின் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள்!!!

By Maha
|

குழந்தை பிறந்த பின்னர் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதோடு, சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதில் ஒருசிலப் பிரச்சனைகளைப் பற்றி பல பெண்களுக்கு தெரியாது. ஏனெனில் அதனை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அது தான் மலச்சிக்கல். ஆம், மலச்சிக்கல் பிரச்சனை, பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்களின் செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும்.

அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தையின் உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதற்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டியது சரியான டயட் தான்.

முறையான டயட்டை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மேற்கொள்ளாவிட்டால், அது உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமாக மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே பெண்கள் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் செரிமானமானது சீராக செயல்பட்டு, கழிகளானது எளிதில் வெளியேற்றப்படும். இப்போது பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து உணவில் சேர்த்த மலச்சிக்கலில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டில் கீரை (Dill Leaves)

டில் கீரை (Dill Leaves)

சூப் மற்றும் குழம்பில் சேர்க்கப்படும் டில் கீரையை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட்டால், அது தாய்ப்பாலை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பசலைக் கீரையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த பசலைக் கீரையில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களால், உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் குணப்படுத்தலாம். அதிலும் பிரசவத்திற்கு பின் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.

சீரகம்

சீரகம்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு ஒரு சிறந்த இயற்கை நிவாரணி என்றால், 2 டீஸ்பூன் சீரகத்தை நெய்யில் போட்டு வறுத்து, பொடி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.

பழங்கள்

பழங்கள்

வாழைப்பழம் மற்றும் பெர்ரிப் பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வேறு எதிலும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதிலும் இத்தகைய பழங்களை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ்

தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால், குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையானது நிச்சயம் குணமாகிவிடும்.

நவதானியங்கள்

நவதானியங்கள்

நவதானியங்களால் ஆன உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகமாவதை தவிர்ப்பதோடு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தவிர்க்கலாம்.

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்

ஸ்நாக்ஸ்களில் உலர் திராட்சைகள், பேரிச்சம் பழம், உலர் ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

தண்ணீர்

தண்ணீர்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதால் அடிக்கடி தாகம் எடுக்கும். எனவே தினமும் குறைந்தது 3-4 டம்ளர் தண்ணீர் குடிப்பதுடன், 2 டம்ளர் இளநீர் குடித்தால், உடல் வறட்சி தடைபடுவதோடு, குடலியக்கமும் நன்கு செயல்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வேக வைத்த ஓட்ஸ்

வேக வைத்த ஓட்ஸ்

ஓட்ஸில் நார்ச்சத்தானது அதிகமான அளவில் உள்ளது. எனவே அதனை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், அவை மென்மையாகி, எளிதில் செரிமானமடைந்துவிடும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.

தயிர்

தயிர்

தயிரை அதிகம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாவதோடு, சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளையும் குணமாக்கும். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தயிரை சாப்பிடும் போது, மிகவும் குளிர்ச்சியாக சாப்பிடாமல், அறை வெப்பநிலையில் வைத்து சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Prevent Postnatal Constipation

Breastfeeding mothers need to follow a healthy postnatal diet to stay healthy and get the essential daily nutrients. Having something unhealthy can lead to several health problems including constipation. Here are a few foods that women in postnatal stage can eat to promote digestion and prevent constipation-
Desktop Bottom Promotion