தனது இரட்டை சகோதரனை தனியாளாக காப்பாற்றிய 2 வயது குழந்தை - காணொளிப்பதிவு!

கப்போர்ட் விழுந்து கீழே மாட்டிக் கொண்டிருந்த இரட்டை சகோதரனை தனி ஆளாக காப்பாற்றிய இரண்டு வயது குழந்தையின் காணொளிப்பதிவு.

Posted By:
Subscribe to Boldsky

அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் - தம்பி தான்; தானாடா விட்டாலும் தன் தசை ஆடும்; போன்ற அண்ணன், தம்பி பற்றிய பழமொழிகள் நாம் கேள்வி பட்டிருப்போம். உண்மையிலும் அப்படி தான்.

அப்பா - அம்மா இருக்கும் போது கீரியும், பாம்புமாக சீறிக் கொள்ளும் சகோதரர்கள். அவர்கள் இல்லாத போதுதான் ஒன்றாக சேர்ந்து எல்லா திருட்டுத்தனமும் செய்வார்கள்.

இதோ, தனது இரட்டை சகோதரன் கப்போர்ட் அடியில் மாட்டிக் கொண்டு தவிப்பதை கண்டு ஒற்றை ஆளாக காப்பாற்றிய இரண்டு வயது குழந்தையின் காணொளிப்பதிவு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹீரோஸ்!

ஹீரோஸ்!

குழந்தைகள் தாங்கள் கேட்கும் கதைகளில் தங்களுக்கு பிடித்த காதாபாத்திரங்களாக மாறி ஓரிரு நாட்கள் அந்த கதாபாத்திரம் போலவே நடந்துக் கொள்வதை நாம் கண்கூட பார்க்க முடியும்.

ஏன், சிறுவயதில் நாமே இது போல நடந்துக் கொண்டிருப்போம். இது, நிஜமாகவே ஹீரோவாக மாறி தனது இரட்டை சகோதரனை காப்பாற்றி இருக்கிறார் இந்த இரண்டு வயது ஹீரோ!

Image Source

கேமராவில் பதிவு!

கேமராவில் பதிவு!

அப்பா - அம்மா வேலைக்கு போகும் பல வீடுகளில் இப்போது குழந்தைகள் இருக்கும் அறைகளில் பாதுகாப்பிற்காக கேமரா மாட்டி கண்காணிப்பு செய்வது பெருகி வருகிறது. அப்படி பொருத்திய கேமராவில் பதிவான சம்பவம் தான் இது.

Image Source

ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பெற்றோர்!

ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பெற்றோர்!

வீடு திரும்பி கண்காணிப்பு கேமராவில் இந்த பதிவை கண்ட பெற்றோர் திடுக்கிட்ட போதிலும். மற்ற பெற்றோர்கள் இதை கண்டு விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பதற்காக சமூக தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தந்தை கருத்து!

தந்தை கருத்து!

இந்த காணொளிப்பதிவை பகிர்ந்து கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இதை பகிர்வது மூலம் பல பெற்றோர் விழிப்புணர்வு கொள்வார்கள் என்பதே முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கிறேன்.

எனவே, உங்கள் குழந்தைகள் இருக்கும் அறைகளில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக தான் இருக்கிறதா என்பதை சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

காணொளிப்பதிவு!

தனது இரட்டை சகோதரனை தனியாளாக காப்பாற்றிய இரண்டு வயது குழந்தை - காணொளிப்பதிவு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Two Years Old Kid Saved His Twin Brother in Single Hand - Video!

Two Years Old Kid Saved His Twin Brother in Single Hand - Video!
Story first published: Wednesday, January 4, 2017, 15:26 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter