உங்கள் மகளை இந்த 5 விஷயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்!

பெண் குழந்தைகளுக்கு நீங்கள் கற்பிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

பள்ளி பாடங்களை சரியாக கற்பிக்காவிட்டால் தேர்வில் தோல்வி அடைவார்கள். வாழ்வியல் பாடத்தை சரியாக கற்பிக்காவிட்டால் வாழ்க்கையிலேயே தோல்வி அடைந்துவிடுவார்கள்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தொழில்நுட்பத்தை கற்பிக்கும் அளவிற்கு, உளவியல், உறவுகள், வாழ்வியல் சார்ந்த அறிவை கற்பிப்பது இல்லை.

முக்கியமாக பெண் குழந்தை பெற்றவர்கள் இந்த ஐந்து விஷயங்களில் இருந்து மகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உடல் ரீதியான தொடர்பு!

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் பெரிய தவறு இதுதான். உடல் ரீதியான தொடர்பு பற்றி யாரும் கற்பிப்பதும் இல்லை, அதை பற்றி தெளிவுப் படுத்துவதும் இல்லை. புத்தகத்தில் பாடமாக சேர்த்தாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் மேம்போக்காக கூறி அதை முழுமையாக் கற்பிப்பது இல்லை.

இதன் காரணமாக தான் குழந்தைகளுக்கு உடல் ரீதியான தவறான தீண்டுதல் பற்றிய அறியாமை காரணத்தால், தவறான உறவுகளில் இணைந்து வாழ்க்கையை இழக்கின்றனர்.

வழிதல்!

இன்றைய குழந்தைகள் மத்தியில் 18+ ஜோக்ஸ் என்பது சமூக நாகரீகம் போன்ற பின்பத்தை உண்டாக்கியுள்ளதை நாம் மறுக்க முடியாது. முகநூல், ட்விட்டர் போன்றவற்றில் சர்வ சாதாரணமாக கேவலமான 18+ தகவல்கள் பகிரப்படுவது இதன் காரணத்தால் தான். ஒருவர் வழிந்து பேசுகிறார், ஒருவர் ஏமாற்றும் எண்ணத்துடன் பழகுகிறார் என்பதை எப்படி அறிவது என பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கற்பிக்க வேண்டும்.

சமூக தளங்கள்!

சமூக தளங்களில் படங்கள் பகிர்வது குற்றம் அல்ல. ஆனால், தெரியாத நபர்களை நட்பு வட்டத்தில் சேர்ப்பது, மோசமான படங்களை பதிவு செய்வது, தெரியாத நபர்களுடன் பாதுகாப்பின்றி பழக்கத்தை மேம்படுத்தி கொள்வது போன்றவற்றை பற்றி நல்லறிவு புகட்டி வளர்க்க வேண்டும்.

இரகசியங்கள்!

இயற்கையான எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் குழந்தைகளிடம் இருந்து மறைக்க வேண்டாம். அந்தந்த வயதில் அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியதை இரகசியமாக பாதுகாக்க வேண்டாம். இவற்றை அவர்களாக தேடி செல்லும் போது தான் தவறுகள் நிகழ்கின்றன.

நிகழ்சிகள்!

இன்று பெரும்பாலான நிகழ்சிகள் பருவமடைந்த குழந்தைகளின் மனதை உளவியல் ரீதியாக தவறான தாக்கத்தை, காதல் சார்ந்த தவறான புரிதல்களை எடுத்துரைப்பவையாக தான் இருக்கின்றன. இவற்றின் பிடியில் இருந்து காக்க வேண்டும்.

மேலும், காதல் என்பது எல்லா உறவுகளுக்கும் பொதுவானவை. பருவ வயதில் வரும் காதல் எதுபோன்றது. உண்மையில் காதல் என்றால் என்ன? என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Did Not Know You Should Protect Your Daughter From

Things You Did Not Know You Should Protect Your Daughter From
Story first published: Tuesday, December 13, 2016, 16:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter