For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தையை படிப்பில் சிறந்தவராக திகழ உதவும் உணவுகள்!

|

குழந்தைகள் வளர அவர்களின் மூளையும் வளர்ச்சியடையும். ஆகவே அப்படி வளர்ச்சி அடையும் மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் தான் அது மூளையின் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் அன்றாட உணவுகளில் மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை தவறாமல் சேர்த்து வர வேண்டியது அவசியம். அப்படி சேர்த்து வந்தால், அவர்கள் படிப்பில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

எனவே உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க நினைத்தால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளைக் கொடுத்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை

முட்டை

ஆய்வுகளில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் முட்டையைக் கொடுத்து வந்தால், முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களும், புரோட்டீன்களும், அவர்களின் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்து, படிப்பில் நன்கு கவனம் செலுத்த உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்கள் குழந்தைக்கு தினம் ஒரு முட்டைக் கொடுத்து வாருங்கள்.

கீரைகள்

கீரைகள்

கீரைகளான கேல் மற்றும் பசலைக் கீரைகளில் ஃபோலேட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இந்த உணகள் மூளைச் செல்களின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாதவை. ஆகவே தவறாமல் வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த கீரைகளை அவர்களது உணவில் சேர்த்து வாருங்கள்.

தயிர்

தயிர்

தயிரில் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்ஸ் மட்டுமின்றி, புரோட்டீன்களும் உள்ளன. இதில் உள்ள புரோட்டீன்கள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. எனவே தினமும் தயிரை உங்கள் குழந்தைக்கு கொடுத்து, அவர்களை புத்திசாலியாக்குங்கள்.

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகளில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. இவை நரம்பு மண்டலத்திற்கு நல்லது மற்றும் மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

மீன்

மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இந்த சத்துக்கள் ஞாபக சக்திக்கும், மூளையின் சிறப்பான செயல்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாதவை. எனவே உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி மீனை சமைத்துக் கொடுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள்களில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், அறிவுத்திறன் வீழ்ச்சியடைவதைத் தடுக்கும். எனவே உங்கள் குழந்தை ஸ்மார்ட்டாக செயல்பட நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளைக் கொடுங்கள்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது. பல ஆய்வுகளும் ஓட்ஸ் சாப்பிடும் குழந்தைகள் சிறப்பாக செயலாற்றுவதாக கூறுகின்றன. எனவே உங்கள் குழந்தைக்கு அவ்வப்போது ஓட்ஸை சமைத்து கொடுத்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Brain Foods For Your Kid

The brain of a child is constantly growing and therefore, you may need to provide enough nutrients to aid the development of the brain.
Story first published: Thursday, July 28, 2016, 15:48 [IST]
Desktop Bottom Promotion