எந்த வயதில் குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம்?

By: Hemalatha V
Subscribe to Boldsky

பொதுவாக பாதாம் எல்லார்க்கும் மிக நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ஏ, பி நிறைந்தது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 33 % கால்சியம் கொண்டுள்ளது.

Is Almond Milk Good for Children

பாதாமை அப்படியே சாப்பிடுவதால் அதன் முழுமையான பலன்களை பெறலாம். ஆனால் பாதாம் பாலாக செய்து குடிக்கும் போது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல், நீர்த்துவிடுகிறது.

Is Almond Milk Good for Children

சிலர் ஒரு வயதிற்கு முதலேயே பாதாம் பாலை குழந்தைகளுக்கு தருவார்கள். அது தவறு. ஏனெனில் சில குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி உண்டாகலாம்.

நட்ஸ் அலர்ஜி உண்டானால் வாந்தி, வயிற்று வலி, மூச்சு திணறல், வயிறு இழுத்து பிடிப்பதுபோலுணர்வு, இருமல், சரும தடிப்பு ஆகியவை உண்டாகலாம். இதனால் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்துவிட்டு நீங்கள் கொடுக்கலாம்.

Is Almond Milk Good for Children

பாதாம் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். அதோடு பாதாமிலுள்ள சில பண்புகள் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. ஆகவே குழந்தைகளுக்கு கொழுப்பை வரவிடாமால் தடுக்கும். ஆனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமாகும்.

Is Almond Milk Good for Children

பொதுவாக 2 வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நட்ஸ் ஆகும். அதிலுள்ள நார்சத்து இதயத்தை வலுவாக்கும். எலும்புகள் வலுவாகும்.

Is Almond Milk Good for Children

நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நீண்ட ஆயுளை தரும். பாதாமை பாலாக விட அப்படியே கொடுப்பது சிறந்தது. இரவில் ஊற வைத்து மறு நாள் தினமும் இரு பாதாமை சாப்பிட சொல்லுங்கள். புத்திக் கூர்மை, ஆயுள் ஆரோக்கியம் மேம்படும்.

English summary

Is Almond Milk Good for Children

Is Almond Milk Good for Children
Story first published: Saturday, August 13, 2016, 15:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter