For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய தலைமுறைக்கு ஏற்ற 'கூலான' பெற்றோராக இருப்பது எப்படி?

By Batri Krishnan
|

இன்றைய இளம் தலைமுறையின் பெற்றோர்கள் தினம் ஒரு சவால்களை சந்திக்கின்றனர். புத்தம் புதிய மாற்றங்கள் உலகில் நம்மை சுற்றி ஒவ்வொரு நாளும் நடக்கிறது. உங்களின் கைப்பிடித்து நடைப்பயின்ற உங்களுடைய செல்லக் குழந்தை விரைவாக வளர்ந்து விடுவார்கள் என்பது நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத விஷயமாகி விடுகின்றது.

இங்கே, இந்த கட்டுரையில், நாம் எப்படி இன்றைய தலைமுறைக்கேற்ற ஒரு கூலான பெற்றோராக இருப்பது என்பதைப் பற்றி சில முக்கிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளோம். இன்றைய பெற்றோர்கள், குழந்தைகள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்கின்றார்களோ, அவ்வாறே பெற்றோர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது.

நாங்கள் இங்கே தெரிவித்துள்ள குறிப்புகளைப் பின்பற்றி நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும். மேலும் இந்தக் குறிப்புகள் உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும்.

நீங்கள் எவ்வாறு இன்றைய தலைமுறைக்கேற்ற ஒரு கூலான பெற்றோராக இருக்க முடியும்? அதிலும் குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவர்களது வளர்ச்சியை ஒரு பொழுதும் துரிதப்படுத்தாதீர்கள்

அவர்களது வளர்ச்சியை ஒரு பொழுதும் துரிதப்படுத்தாதீர்கள்

குழந்தை குழந்தையாகவே இருக்க வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். அவர்களுடைய குழந்தைத்தனத்தை ரசியுங்கள். அவர்களை சீக்கிரம் பெரியவர்களாக தூண்டாதீர்கள். இழந்த இளம் பருவத்தை மீண்டும் பெற இயலாது என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையான அன்பு செலுத்துங்கள்

உண்மையான அன்பு செலுத்துங்கள்

பொதுவாக, நீங்கள் உங்கள் குழந்தையின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதே அவர்களின் மீது நீங்கள் காட்டும் அன்பை அவர்களுக்கு உணரச் செய்யும் எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்போதே நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையின் மீது உண்மையான அன்பு செழுத்துங்கள்.

நீங்கள் கற்பிக்கும் பொழுது கற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் கற்பிக்கும் பொழுது கற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் விஷயங்களை அனுபவித்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அது, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் குட்டி தேவதையைப் போன்ற ஊர்ந்து போவதாகட்டும் அல்லது ஒரு பிடித்த பாடலை பாடுவதாகட்டும். அதை எப்பொழுதும் அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளிக்கொணருங்கள்.

அவர்களின் சிறப்புரிமையை அங்கீகரியுங்கள்

அவர்களின் சிறப்புரிமையை அங்கீகரியுங்கள்

உங்களுடைய குழந்தை உங்களால் இந்த உலகிற்கு வந்தது என்னும் உண்மையை புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் நீங்கள் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் உங்கள் வழிக்கு கொண்டு வர முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் அனைத்து காரியங்களிலும் துணை புரியுங்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆதரவு உள்ளது என்பதை தெரிவியுங்கள்.

அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்

அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்

உங்களின் நிறைவேறாத கனவுகளை உங்களுடைய குழந்தையின் மீது சுமத்தி அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் விருப்பம் எது என்பதை அவர்களே முடிவு செய்யட்டும். ஆனால், குழந்தைகள் உங்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற உங்களிடம் வருவதை கண்டிப்பாக உறுதி செய்து கொள்ளுங்கள்.

செயல்களின் தீவிரத்தை அவர்களை உணரச் செய்யுங்கள்.

செயல்களின் தீவிரத்தை அவர்களை உணரச் செய்யுங்கள்.

செயல்களைப் பற்றி உங்கள் குழந்தைக்கு கற்பிக்க வேண்டும். செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகளே உண்மையில் இந்த வாழ்க்கையில் மிக முக்கியமான கொள்கைகளின் ஒன்றாகும் என்பதை உங்களின் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே பெற்றோராகிய நீங்கள் குழந்தைகளின் முன் கெட்ட வார்த்தைகள் மற்றும் அசிங்கமான சண்டை போட வேண்டாம். ஏனெனில் குழந்தையின் கிரகிப்புத் திறன் என்பது மிகவும் அபாரமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Be A Cool Parent In Today's Generation

If you are wondering how to be a cool parent in todays generation, then read on to know the best tips for parents to be cool.
Desktop Bottom Promotion