For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஆபத்து உங்கள் வீட்டில் தான்.!

|

1- 3 வயதுள்ள குழந்தைகளை மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். எமர்ஜென்ஸி வார்டுகளில் வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆபத்து வீட்டில்தான் நேரிடுகிறது என ஜான் ஹாப்கின் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ஸ்டெர்லிங் ஹேரிங் கூறுகிறார்.

How to protect your babies from harmful injuries

குழந்தைகளுக்கு இந்த 1- 3 வயதுகளில் ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும் என தோன்றும். அவர்களுக்கு இது ஆபத்து, இது நல்லது எனவும் தெரியாது. பெரும்பாலான பெற்றோர்கள் ஆபத்து நிறைந்த ஆசிட், ஸ்ப்ரே, மற்றும் தரை துடைக்கும் க்ளீனர் ஆகியவற்றை அவர்களின் கைக் கெட்டும் தூரத்தில் வைக்கிறார்கள்.

எல்லாவற்றையும் வாயில் வைக்கும் அந்த பருவத்தில் அவர்கள் விளைவுகளை தெரியாமல், ஸ்ப்ரே, க்ளீனர் ஆகியவற்றை விழுங்க அல்லது கண்ணில் பட நேரிடுகிறது. கண்களை இழக்கும் அபாயங்களும் உண்டாகிறது. பெரும்பாலான குழந்தைகள் இதனால் கண்பார்வை இழக்க நேரிடுகிறது.

ஹேரிங்க் மற்றும் அவரது உதவி ஆராய்ச்சியாளர்களும் கடந்த 4 வருடங்களாக சுமார் 900 மருத்துவமனைகளில் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள். இதில் வரும் எல்லா குழந்தைகள் நல எமர்ஜென்சி வார்டுகளிலுருந்தும் கணக்கெடுப்பு நடத்தி இந்த ஆய்வை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

இதில் தெரிய வந்தது என்னவென்றால், பெரும்பாலான கீழ் மற்றும் மத்திய வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு எட்டும் தூரத்திலேயே ஆபத்து நிறைந்த பொருட்களை வைக்கிறார்கள். இதனால் அவற்றை குடித்து, அல்லது கண்களில் பட்டு ஆபத்து நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த மாதிரியான நேரங்களில் கட்டாயம் முதலுதவி செய்து மருத்துவ மனைகளில் கூட்டி வந்தால் ஆபத்தை தடுக்கலாம். கண்களில் ஆசிட் அல்லது ஸ்ப்ரே பட்டால் உடனடியாக கண்களை கழுவிடவேண்டும் என்பதே பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இதனால் விஷத்தின் வீரியத்தை குறைக்கலாம்.

English summary

How to protect your babies from harmful injuries

How to protect your babies from harmful injuries
Story first published: Tuesday, August 9, 2016, 12:11 [IST]
Desktop Bottom Promotion