For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தைக்கு தினமும் போதிய அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க சில டிப்ஸ்...

By Super
|

இன்றைய காலத்தில் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை, முக்கியமாக சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதில்லை என்ற கருத்து பெற்றோர்களிடையே உள்ளது. இதற்கு காரணம் ஜங்க் உணவுகளின் சுவை குழந்தைகளுக்கு பிடித்திருப்பது மற்றும் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அவர்களுக்கு பிடித்தவாறு தராமல் இருப்பது தான்.

எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி புரிந்து கொண்டால், அவர்களை எளிதில் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வைக்கலாம். சரி, குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

How To Provide Complete Nutrition To Your Child

இதற்கு ஒரே வரியில் பதிலளிக்க முடியாது. முதலில் பெற்றோராகிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சத்துக்கள் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு கார்போஹைட்ரேட்டுக்கள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சரியான அளவில் கிடைக்க வைக்க வேண்டும்.

இன்னும் சில குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். அந்த மாதிரியான பெற்றோர்கள் குழந்தைகளின் உணவு மீது அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். இதுப்போன்று ஏராளமாக உள்ளன.

இங்கு உங்கள் குழந்தைக்கு தினமும் போதிய அளவிலான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

* வேடிக்கையான அட்டவணை ஒன்றை தயார் செய்யுங்கள்

வேடிக்கையான அட்டவணையை தயார் செய்து கொள்ளுங்கள். அந்த அட்டவணையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த பல்வேறு உணவுகளைப் பட்டியலிட்டு, அந்த உணவுகளை சரிவிகித அளவில் தினமும் கொடுத்து வாருங்கள். முக்கியமாக இந்த பட்டியலில் பால் சேர்க்க மறக்காதீர்கள். ஏனெனில் இதில் அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன.

* இந்த திட்டத்தில் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள்

இக்கால குழந்தைகளை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். அதற்கு இந்த திட்டம் குறித்து உங்கள் குழந்தைகளிடம் சொல்லி, இத்திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கூறி, அவர்களை ஈடுபடுத்துங்கள். இதனால் அவர்களும் தங்கள் உணவுகளின் மீது அக்கறைக் கொள்வார்கள்.

* வார அட்டவணையைத் தயார் செய்யுங்கள்

ஆரம்பத்தின் 3 நாள் திட்டத்தை தயார் செய்து, பின்பற்ற ஆரம்பியுங்கள். அது வெற்றிகரமானதும், பின் வார அட்டவணை, அடுத்து மாத அட்டவணையை தயார் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் குழந்தைக்கு தினமும் போதிய அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, குழந்தைகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.

* பரிசுகளை வழங்குங்கள்

ஒவ்வொருவரையும் பாராட்டுக்களும், பரிசுகளும் தான் ஊக்கப்படுத்தும். எனவே உங்கள் குழந்தைக்கு பிடித்தது என்னவென்று தெரிந்து கொண்டு, அதை செய்வதாகக் கூறுங்கள். உதாரணமாக, 10 வரை எண்ணுவதற்குள் ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் கலந்த பாலைக் குடித்துவிட்டால், 1 மணிநேரம் அதிகமாக டிவி பார்க்கலாம் என்று கூறுங்கள். இதனால் அது அவர்களுக்கு ஓர் விளையாட்டாக இருப்பதோடு, செய்யும் செயலையும் மகிழ்ச்சியுடன் மேற்கொள்வார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் நீங்களே மறந்தாலும் அவர்களே உங்களை அழைத்து உங்களுக்கு நினைவூட்டுவார்கள்.

* வழங்கும் முறையே முக்கியமானது

என்ன தான் பால் ஊட்டச்சத்து மிக்கதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு தினமும் பால் குடித்து போர் அடித்திருக்கும். எனவே அவர்களுக்கு தினமும் வெறும் பாலைக் கொடுக்காமல், ஊட்டச்சத்து மற்றும் சுவைமிக்க ஹார்லிக்ஸ் கலந்து கொடுங்கள்.

* உங்கள் குழந்தையை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தை ஹார்லிக்ஸ் கலந்த பாலை இன்னொரு டம்ளர் கேட்டால் மறுக்காமல் கொடுங்கள். ஏனெனில் ஹார்லிக்ஸ் மற்றும் பாலில் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.

* ஜங்க் உணவுகள் போன்று சமைத்து கொடுங்கள்

ஆம், குழந்தைகளுக்கு கொடுக்கும் ஆரோக்கியமான உணவுகளை அவர்கள் விரும்பும் பிட்சா, பர்கர், பாஸ்தா, நூடுல்ஸ் போன்று சுவைமிக்கதாக சமைத்து அலங்கரித்துக் கொடுங்கள். உதாரணமாக, ஆம்லெட் செய்வதாக இருந்தால், அதனுடன் காய்கறிகளை சேர்த்து சமைத்துக் கொடுங்கள். இதுப்போன்று சற்று வித்தியாசமாக யோசித்து சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

* அழகாக அலங்கரியுங்கள்

குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுக்கும் ஆரோக்கியமான உணவுகளை சற்று வித்தியாசமாகவும், அழகாகவும், அவர்களது கண்களைக் கவரும் வண்ணம் அலங்கரித்து பரிமாறுங்கள். இதனால் அவர்கள் மறுக்காமல் சாப்பிடுவார்கள்.

* வற்புறுத்தாதீர்கள்

உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட காய்கறியோ, பால் அல்லது முட்டையோ பிடிக்காவிட்டால், அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைக்காதீர்கள். மாறாக அவர்களுக்கு பிடித்த வகையில் வித்தியாசமாக சமைத்துக் கொடுங்கள். உதாரணமாக, பால் பிடிக்காவிட்டால், அந்த பாலில் ஹார்லிக்ஸ் கலந்து கொடுங்கள். இதுப்போன்று அவர்களுக்கு பிடிக்காத உணவுகளை அவர்களுக்கு தெரியாமல் வித்தியாசமாக சமைத்துக் கொடுங்கள்.

English summary

How To Provide Complete Nutrition To Your Child

Any parent would want to provide the best nutrition for kids. But do kids fall in love with healthy foods? No, this is why you need a strategy. Read on to know more.
Desktop Bottom Promotion