For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் முன்னே பெற்றோர் செய்யக் கூடாத விஷயங்கள்!!

|

பெற்றோர் தான் குழந்தைகளின் முதல் காதல், தோழமை, ஆசிரியர், வழிகாட்டி எல்லாமே. எனவே, ஒவ்வொரு அப்பா, அம்மாவும், தங்களது குழந்தைக்கு நல்லதோர் உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர. தவறான எடுத்துக்காட்டாக இருக்க கூடாது.

குழந்தை பருவம் முதலே அவர்களுடன் 24 மணிநேரமும் நெருங்கி இருப்பவர்கள் பெற்றோர்கள் தான். பெற்றோர் குழந்தைகள் முன்னே என்ன செய்கிறார்களோ, எவ்வாறு நடந்துக் கொள்கிறார்களோ அவ்வாறு தான் குழந்தைகளும் வளர்வார்கள்.

எனவே, குழந்தைகள் முன்பு என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என பெற்றோர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மற்றவரை அடிப்பது

மற்றவரை அடிப்பது

பிஞ்சிலேயே நஞ்சை ஊட்டுவதற்கு சமம். நீங்கள் குழந்தைகள் முன்னே மற்றவரை அடிப்பது. இது, குழந்தைகளின் மனதினுள் வன்முறை எண்ணத்தை வளர்த்துவிடும்

அசிங்கமாக திட்டுவது

அசிங்கமாக திட்டுவது

குழந்தைகள் முன் அசிங்கமாக திட்டிக்கொள்ள வேண்டாம். இந்த செயல் குழந்தையின் மனதினுள் ஏதோ சாதாரண வார்த்தைகள் பதிவது போல பதிய ஆரம்பித்துவிடும். வளர வளர குழந்தைகளும் அந்த வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள்

குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள்

குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். அவர்கள் பேசுவதை வைத்து மட்டுமே அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என அறிய முடியும். இல்லையேல், அவர்கள் தாங்கள் தனிமையில் இருப்பதாய் உணர தொடங்கி, மனதளவில் பெரிதாக பாதிக்கப்படுவார்கள்.

கருத்துகளை கேளுங்கள்

கருத்துகளை கேளுங்கள்

குழந்தைகள் ஏதாவது கருத்து கூறும் போது, "பெரியமனுஷன் மாறி பேசாதே.." என்று ஒதுக்காமல் காதுக் கொடுத்து கேளுங்கள். அவர்கள் கூறும் கருத்து தவறாக இருந்தால், அது ஏன் தவறு, அதனால் பயன் ஏதுமில்லை என அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறுங்கள்.

முறைக் கேடாக நடந்துக் கொள்ள வேண்டாம்

முறைக் கேடாக நடந்துக் கொள்ள வேண்டாம்

குழந்தைகளின் முன்பு, செயல் அல்லது மொழி ரீதியாக முறைக் கேடாக நடந்துக் கொள்ள வேண்டாம். இது அவர்களது இயற்கை குணாதிசயங்களை பாதிக்கும்.

மற்றவர் மத்தியில் குறைக்கூற வேண்டாம்

மற்றவர் மத்தியில் குறைக்கூற வேண்டாம்

மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் குழந்தையை குறைக் கூறாதீர்கள். இது, அவர்களை மனதளவில் பெரியதாய் பாதிக்கும். மற்றும், அவர்களுக்குள்ளே தங்களுக்கு திறமை ஏதும் இல்லை என்ற எண்ணம் அதிகரிக்க இது பெரிய காரணமாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Parents Should Never Do In Front Of Kids

Parents Should not do these things in front of Kids. Take a look.
Story first published: Friday, September 4, 2015, 16:02 [IST]
Desktop Bottom Promotion