For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு தகப்பனாக நீங்கள் கைவிட வேண்டிய 10 பழக்கங்கள்!!!

By Ashok CR
|

குழந்தை வளர்ப்பு என்பது யாருக்குமே சுலபமாக இருந்ததில்லை. இதற்கு எங்கேயும் வழிமுறைகளை கொடுக்கப்பட்டதில்லை. அதே போல் அதனை சரியாக செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதையும் செய்ய கூடாததையும் கூட யாரும் வரையறுத்தியதில்லை. ஓய்வு வயதே இல்லாத முழு நேர பணியாகும் இது. ஆரம்ப காலங்கள் சற்று கடினமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். பொதுவாக ஆண்கள் என்பவர்கள் பழக்க வழக்கங்களால் நிறைந்தவர்கள். அவர்கள் அன்றாட பழக்கவழக்கங்களில் இருந்து சற்று மாற்றி நடந்தாலும் கூட அது அவர்களுக்கு அசௌகரியத்தை அளிக்கும். இருப்பினும் ஒரு தந்தையாக மாறிய பிறகு உங்களுக்கு இந்த வசதி கிடைக்காது.

ஒரு ஆண் தந்தையாக மாறும் போது அவனுடைய பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கிறது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேறுபாட்டை உங்கள் குழந்தைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பாகும். யாருமே நூறு சதவீதம் ஒழுங்கு கிடையாது; நம் அனைவரிடமும் ஏதாவது குறை இருக்கவே செய்யும். ஆனாலும் கூட நாம் நம் குழந்தைகள் சிறந்தவற்றை கற்க முயற்சி செய்கிறோம். நம்முடைய சரியற்ற பழக்க வழக்கங்கள் குழந்தைகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்போம். முதலில் இது கஷ்டமான வேலையாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது தரும் பலனை நீங்கள் உணர்வீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வபோது தகப்பனாக உங்களின் குணாதிசயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதனால் தீய பழக்கங்களை கை விட்டு, சிறந்தவற்றை கடைப்பிடிக்கலாம். அப்படிப்பட்ட 10 சரியில்லாத பழக்க வழக்கங்களை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். இவற்றை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக நீங்கள் நிறுத்த வேண்டும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Bad Fathering Habits You Need To Get Rid Off In Tamil

Take a look at the ten bad fathering habits you need to get rid off.These are the signs of being a bad father and you need to stop beingso.
Desktop Bottom Promotion