For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கும் வீட்டுத் தீர்வுகள்

By SATEESH KUMAR S
|

படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது குழந்தைகளுக்கும் சிறு இளைஞர்களுக்கும் இருக்கும் பொதுவான பிரச்னை. மாலை நேரங்களில் அவர்ளுக்கே அறியாமல் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவர். இப்பிரச்சனைக்கான காரணங்களில் ஒன்று சிறிய சிறுநீர் பை இருப்பது. சிறிய பையாக இருப்பதால் இரவு முழுவதும் அவர்களால் சிறுநீரை அடக்கி வைக்க இயலாது. இது மரபு வழி பிரச்சனையாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

இந்த உணர்வு காலப்போக்கில் குறையக்கூடியது. இதை மக்கள் அவமானமாக கருதுவதாலும் குழந்தைகள் பயம் கொள்வதாலும் மக்கள் இந்த பிரச்னைக்கு மருந்துகளை தேடுகின்றனர். சில எளிய, நேரடியான சிகிச்சைகள் மூலம் உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெல்லம்

வெல்லம்

வெல்லம் உடலை சூட்டை அதிகரிப்பதால் சாதாரண இளம் பிராயத்தவர்களுக்கு இதை கொடுக்கலாம். உடல் சூட்டை அதிகரிப்பதால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை குறைகிறது. தினமும் காலை சிறிதளவு வெல்லத்தை குழந்தைக்கு அளியுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வெடித்த சிவரிக்கீரையின் விதைகளையும் பொரித்த எள்ளையும் சம பங்கு எடுத்து சிறிது இந்துப்பு கலந்து குழந்தைக்கு கொடுக்கவும்.இவ்வாறு இரண்டு மாதங்கள் செய்யவும்.

கடுகு தூள்

கடுகு தூள்

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு ஒரு விதிவிலக்கான தீர்வு கடுகு தூள் ஆகும். உலர்ந்த கடுகுத்தூளை ஒரு குவளை சூடான நீரில் கலக்கவும். படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதை குழந்தைக்கு குடிக்கக் கொடுக்கவும் சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளுக்கு எள் அருமருந்தாகும்.ஒரு கைப்பிடி எள்ளை பகல் பொழுதில் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கலாம். இது படுக்கையில் சிறு நீர் கழிப்பதை தடுக்க உதவும்.

குருதிநெல்லி பழச்சாறு

குருதிநெல்லி பழச்சாறு

குருதிநெல்லி பழச்சாறு சிறுநீரகங்கள், நீர்ப்பை, மற்றும் சிறுநீர் பாதைக்கு உகந்தது எனவே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னைக்கும் உகந்தது. பொதுவாக படுக்கைக்கு செல்லும்முன் பருக எந்த வகையான பழச்சாறும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் குருதிநெல்லி பழச்சாறு பருக பரிந்துரைக்கப்படுகிறார்கள். படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குருதிநெல்லி பழச்சாற்றை குடிக்க கொடுங்கள். இது படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த அடிப்படையான, வெற்றிகரமான கை மருந்து. இந்த முறையை தினந்தோறும் இரு மாதங்களுக்கு கடைபிடிக்கவும்.

இந்திய நெல்லிக்காய்

இந்திய நெல்லிக்காய்

இந்திய நெல்லிக்காய் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்துவது போல படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தொந்தரவிற்கும் தீர்வு தரும். கூழாக்கிய இந்திய நெல்லிக்காய் உடன் மிளகுத் தூள் சேர்த்து படுக்கைக்கு செல்லும்முன் குழந்தைகளுக்கு தரவும். இது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையில் துணை புரியும். இந்திய நெல்லிக்காய் பொடியை சீரகத் தூள், சர்க்கரை சேர்த்து குழந்தைக்கு தினம் இரு முறை கொடுத்து வரவும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைக்கு தினம் ஒரு இலவங்கப்பட்டையை கடிக்கக் கொடுக்கவும். இப்பிரச்சனைக்கு பரிந்துரைக்கப்படும் வீட்டுத் தீர்வுகளில் இது மிகவும் குறைவு. இலவங்கப்பட்டைத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து சிற்றுண்டியில் தூவி காலை உணவாக கொடுக்கலாம்.

வாழை

வாழை

வாழை வயிற்று கோளாறுகளுக்கு உகந்தது, அதன் விளைவாக மாலைப் பொழுதில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும் உதவுகிறது.தினசரி இரண்டு அல்லது மூன்று வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை குறைக்க முடியும். காலை உணவுடனுடன் மாலை உணவுடனும் கொடுக்கலாம். நன்கு பழுத்த வாழைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தடுக்கலாம்.

அக்ரூட் பருப்பு மற்றும் உலர் திராட்சை,

அக்ரூட் பருப்பு மற்றும் உலர் திராட்சை,

அக்ரூட் பருப்பு மற்றும் உலர் திராட்சை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும். இரண்டு தேக்கரண்டி அக்ரூட் பருப்பும் ஒரு தேக்கரண்டி உலர் திராட்சையும் படுக்கைக்கு செல்லும் முன் கொடுக்கவும். படுக்கைக்கு செல்லும்முன் இந்த சுவையான பொருளை கொறிப்பதற்கு குழந்தைகள் விரும்புவர். இதை இரு மாதங்களுக்கு பின்பற்றவும்.

தேன்

தேன்

படுக்கையில் ஈரம் செய்வதை தடுக்க தேன் பயன்படுத்தப்படுகிறது. படுக்கைக்கு செல்லும்முன் ஒரு தேக்கரண்டி தேன் குடிப்பது நம்பமுடியாத மாற்றத்தைக் கொடுக்கும். காலை உணவில் ஒரு குவளை பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொடுக்கலாம். தேன் சுவையாக இருப்பதால் குழந்தைகள் பிரியத்துடன் பருகிக் கொள்வர்.

பழச்சாறு வினிகர்

பழச்சாறு வினிகர்

பழச்சாறு வினிகர் படுக்கையில் சிறுநீர் கழித்தலை தடுக்க உதவும். இரண்டு தேக்கரண்டி பழச்சாறு வினிகரை ஒரு குவளை நீருடன் கலந்து ஒவ்வொரு வேலை உணவுடனும் கொடுக்கவும். இது வயிற்றில் அரிக்கும் தன்மையை குறைத்து சிறுநீர் கழிக்கும் உணர்வையும் குறைக்கும். இதற்கிடையில் பழச்சாறு வினிகர் தேக்கிவைக்கபட்ட கால்சியத்தை உடைக்க வல்லது.

வீட்டில் தாயாரிக்கப்படும் தேநீர்

வீட்டில் தாயாரிக்கப்படும் தேநீர்

அதிமதுரம், பியர்பெர்ரி(BEARBERRY), ஓக் பட்டை ஆகியவற்றை கொண்டு செய்த தேநீரால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும். அனைத்து பொருட்களையும் கணிசமான அளவு எடுத்து கொதிக்கும் நீரில் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.இதை காலையிலும் மாலை படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் குழந்தைக்கு கொடுக்கவும். வீட்டில் தயாரிக்கப்படும் இந்த வழக்கமான இந்தத் தேநீர் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Stop Wetting Bed

this article is about the home remedies that helps to stop bedwetting
Desktop Bottom Promotion