For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவதற்கான அருமையான சிகிச்சைகள்!!!

By Ashok CR
|

குழந்தைகளிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களைப் பட்டியலிட்டு பார்த்தோமானால், அதில் கண்டிப்பாக கை சூப்பும் பழக்கம் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்கும் பழக்கம் தான் கை சூப்புவது. இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிட்டால், இந்த பழக்கத்தை எளிதில் மறக்கடிக்க செய்து விடலாம்.

ஆனால் இந்த பழக்கத்தோடு குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டால், அதன் பின் இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது லேசுபட்ட காரியமல்ல. வருடக்கணக்கில் வளர்ந்து வரும் பழக்கம் இது. அதனால் அதனை நினைத்த மட்டில் உடனடியாக மறக்கடிக்க முடியாது. ஆனாலும் உங்களுக்கு உதவிட சில சிகிச்சைகள் இருக்கத் தான் செய்கிறது. அவைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

குழந்தையின் கவனத்தை சிதறடிப்பது

Wonderful Remedies To Stop Thumb Sucking Habits In Children

கை சூப்பும் பழக்கத்தை நிறுத்த வைப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். உங்கள் குழந்தை வாயில் விரலை வைத்து சூப்பும் பொழுதெல்லாம், இரண்டு கைகளும் ஈடுபடும் படியான ஏதாவது ஒரு நடவடிக்கையில் உங்கள் குழந்தையை ஈடுபட வையுங்கள். கரடி போன்ற மெதுவான பொம்மைகளை கட்டிப்பிடிக்க வைப்பது அல்லது PSP-ல் தங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாட வைப்பது போன்றவைகளில் ஈடுபட வைக்கலாம்.

கட்டை விரலை மூடுங்கள்

பேன்ட்-ஏட், டேப் அல்லது கையுறையை பயன்படுத்தி கடை விரலை மூடி விடுங்கள். இப்படி மூடிய கட்டை விரலை சூப்பும் போது கண்டிப்பாக வெறும் விரலை சூப்பும் போது கிடைக்கும் சுவை கிடைப்பதில்லை. படுக்கும் போது விரல் சூப்புவதை தடுக்க சாக்ஸ் கூட பயன்படுத்தலாம்.

கை சூப்பும் நேரத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள்

உங்கள் குழந்தையிடம் எடுத்துக் கூறி, இரவில் மட்டும் கை சூப்பிக் கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள். இப்படி செய்வதால் பகல் நேரத்தில் சூப்புவதை நிறுத்துவார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இந்த பழக்கத்தை நிறுத்தி விடலாம்.

கட்டை விரலில் எலுமிச்சை ஜூஸை தடவுங்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு எலுமிச்சை ஜூஸின் சுவை பிடிப்பதில்லை. அதனால் எலுமிச்சை ஜூஸை உங்கள் குழந்தையின் விரலில் அதிகமாக தடவி விட்டால், அது கண்டிப்பாக பலனை அளிக்கும். உங்கள் குழந்தைக்கு பிடிக்காத பிற உணவுகளையும் இதற்காக பயன்படுத்தலாம். நெயில் பாலிஷ் போன்ற ரசாயன பொருட்களுக்கு பதிலாக இவைகளை பயன்படுத்துவதால் பாதுகாப்பான வழியாகிவிட்டது அல்லவா?

கட்டை விரல் பாதுகாப்பானை பயன்படுத்துதல்

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட விரல் அச்சை உங்கள் குழந்தையின் கட்டை விரலில் பொருத்தினால், விரல் சூப்பும் பழக்கத்தை அது சிறந்த முறையில் தடுக்கும். ஆனால் இதனை வலுக்கட்டாயமாக பயன்படுத்த வைத்தால், உங்கள் குழந்தையின் மனநிலை பாதிக்கக்கூடும். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்.

English summary

Wonderful Remedies To Stop Thumb Sucking Habits In Children

For grown up kids and grown-ups, leaving thumb sucking instantly may not be possible. But, here are some remedies that may be of help to you:
Desktop Bottom Promotion