For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகம் வெட்கப்படும் குழந்தையை வளர்ப்பதற்கான சில பயனுள்ள டிப்ஸ்..!

By Boopathi Lakshmanan
|

குழந்தைகள் பெற்றோருக்கு கிடைக்கும் செல்வங்கள். அந்த குழந்தை அனைவரையும் கவரக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும், எத்தனை பேர் இருந்தாலும் பயமின்றி அவர்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிசசயம் அனைவருக்கும் இருக்கும். இந்த நிலையில் அனைத்து குழந்தைகளும் இவ்வாறு இருப்பது கிடையாது.

ஒருசில குழந்தைகள் மிகுந்த வெட்கத்துடன் காணப்படுகின்றனர். அக்குழந்தைகள் தமக்கு தெரிந்த நபர்களை சந்திக்கக் கூட பயப்படுகின்றனர். இவர்கள் கூட்டத்தில் ஒருவராக இருக்க விரும்புவார்கள். மற்ற குழந்தைகளுடனும் மற்றும் இதர மக்களிடமும் நட்பு கொள்ள விரும்ப மாட்டர்கள். இத்தகைய குழந்தைகளுக்காக நாம் சில குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. இத்தகைய குணத்தை இளம் வயதிலேயே பெறும் பிள்ளைகளின் பின் வரும் காலத்தில் அவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கும் வகையிலும் அமையலாம்.

Tips For Nurturing A Shy Child

வெட்கப்படும் குணம் குழந்தையின் கல்விச் செயல்திறனை பாதிக்கும். இந்த குணம் சக மாணவர்களுடன் அவர்கள் பழக விடாமல் தடுக்கும். அது மட்டுமில்லாமல் வளரும் பருவத்தில் குடும்பத்துடன் இருக்கும் தொடர்பையும் இவர்கள் குறைத்துக் கொள்வார்கள் மற்றும் உறவினர்களை அறவே மறுக்கும் சூழ்நிலையும் ஏற்படும். இவ்வாறு சமூகத்திலிருந்து அவர்கள் விலகி இருப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தையும், சோர்வையும் அதிகம் உண்டாக்கும்.

மேல்கூறிய படி இவைகளெல்லாம் ஒரு சராசரி வெட்கப்படும் அல்லது பயப்படும் குழந்தைக்கு காணப்படும் அறிகுறிகளாகும். ஆகையால் நமது பிள்ளையை இத்தகைய சூழல்களிலிருந்து மாற்றி நல்வழிப்படுத்த நாம் முயற்சி செய்வது மிகவும் அவசியமானதாகும். ஒரு வேளை உங்கள் பிள்ளை இத்தகைய குணங்களை கொண்டிருந்தால் அதை நீங்கள் மாற்ற முயன்றால், இந்த கட்டுரை உங்களுக்கான விடையாக அமைகின்றது. பின்வரும் பகுதியில் இத்தகைய குழந்தைகளை வளர்க்கும் முறைக்கான சில குறிப்புகளை நாம் பார்ப்போம்.

திட்டாதீர்கள்: உறவினர்கள் மற்றும் நன்பர்களிடம் அறிமுகம் செய்யும் போது வெட்கப்பட்டு ஒதுங்கும் குழந்தையை திட்டாதீர்கள். அவர்கள் மிகவும் வெட்கப்படும் குணம் உள்ளவர்கள் என்றும் பிறரிடம் கூறுவது தவறு. மாறாக குழந்தைகள் மகிழும் வண்ணம் ஏதேனும் ஒரு காரியத்தை செய்து அவர்களை வரும் விருந்தினருடன் சகஜமாக பழகச் செய்ய வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு பிடித்த ஒரு பொருள் நீங்கள் அறிமுகப்படுத்தும் நபரிடம் இருக்கிறது என்று சொன்னால் குழந்தைகள் அதை நிமித்தம் கவரப்பட்டு அவர்களிடம் பேசக் கூடும். இது போன்ற ஊக்குவிக்கும் செயல்களை செய்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

சமூகத்துடன் பழகச் சொல்லிக் கொடுப்பது: வீட்டில் இருக்கும் போதும், பள்ளியில் இருக்கும் போதும் அண்டை வீட்டாருடனும், மற்ற மாணவர்களுடனும் பழக மற்றும் விளையாட ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் நண்பர்களை வரவழைத்து விளையாட விடுங்கள். அவர்கள் செய்யும் சேட்டைத்தனங்களையும் வீட்டை அலங்கோலப்படுத்துவதையும் நாம் சகித்துக் கொண்டு சுத்தம் செய்யத்தான் வேண்டும். ஏனெனில் நமது குழந்தையின் வளர்ச்சியே நமக்கு மிகவும் முக்கியமாக அமைகிறது. அவர்கள் வயதில் இருக்கும் குழந்தைகளுடன் நேரம் கழிக்கும் போது அடிப்படை பேசும் திறன், பகிர்தல் மற்றும் உறவு முறைகள் ஆகியவற்றை எளிதில் கற்றுக் கொள்வார்கள்.

வெட்கப்படுபவர் என்ற பட்டம் சூட்டாதீர்கள்: உங்கள் குழந்தைகளை எப்போதும் வெட்கப்படும் பிள்ளை என்று அவனிடமோ அல்லது மற்றவர்களிடமோ கூறுவது அவர்களை பாதிக்கும். இது அவர்களின் நடத்தை பற்றிய கவலையை அவர்களுக்கு தரும். மற்றவர்களிடம் அப்படி கூறுவதால், அவர்களை மேலும் அவமானப்படுத்துவதாக எண்ணுவார்கள். இவ்வாறு நாம் அவர்களை வர்ணிக்கும் போது இது அவர்களின் குணங்களில் ஒன்றாகவும், அதை மாற்றவே முடியாது எனவும் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

சமூக கூட்டத்திற்கு செல்வது: இத்தகைய குழந்தைகளை கொண்ட பெற்றோர்களுக்கான மிகவும் முக்கியமான குறிப்பு என்னவென்றால் பிள்ளைகளை பொது கூட்டங்களுக்கும், சமூக கூடங்களுக்கும் கூட்டிச் செல்வதே ஆகும். பார்த்த நபர்களை திரும்ப திரும்ப சந்தித்து பேசுவது மற்றும் பேசுவது அவர்களின் கூச்சத்தை பெருமளவு குறைக்கும். இதனால் சமூகத்தை பற்றிய அவர்களுடைய எண்ணங்கள் மாற நேரலாம். இத்தகைய முயற்சி நிச்சயம் உதவும்.

வீட்டிலேயே வேண்டும் மேடை: குடும்பத்துடன் செலவிடும் நேரமே மிகவும் உகந்த மற்றும் சிறந்த குழந்தை பராமரிப்பு முறையாக அமைகின்றது. மிகுந்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு அவர்களை ஒரு கவிதை அல்லது ஒரு சொற்பொழிவையோ செய்யுமாறு ஒரு மேடை போட்டு கொடுங்கள். இந்த செயல் அவர்கள் மற்றவர்கள் முன் தோன்றுவதற்கும், உரையாடுவதற்கும் உறுதுணையாக இருக்கும்.

ஊக்கப்படுத்துங்கள்: பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவதை குழந்தைகள் என்றென்றும் விரும்புவார்கள். மற்றவர்கள் முன் இதை செய்வதை அவர்கள் இன்னும் விரும்புவார்கள். சமூக கூட்டத்திலும் மற்றவர் முன்னிலையிலும் இத்தகைய பாராட்டுக்களை சொல்வது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் மிகவும் தனித்துவமாகவும், மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாகவும் விளங்குவதாக அவர்களுக்கு தோன்றும்.

பேசுதல்: அவர்களின் வெட்கத்திற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக் கூடும். ஒரு வேளை பயம் அல்லது முன் நடந்த அசம்பாவிதங்கள் ஆகியவை காரணமாக இருக்கலாம். இதை கண்டறிந்து குழந்தைகளுடன் பேசி இத்தகைய காரியங்களை சரி செய்தாலே போதும் உங்கள் குழந்தைகளும் சிறந்தவர்களாக, பயமில்லாதவர்களாக, வெட்கப்படாதவர்களாக விளங்குவார்கள்.

English summary

Tips For Nurturing A Shy Child

It is very important to find some parenting tips for shy children at a very early stage because shyness can even have a serious impact on the emotional health of your child. If you are looking for some effective parenting tips for shy children, you can end your search here. Here are some easy parenting tips that you can try for helping your shy child.
Story first published: Saturday, January 4, 2014, 15:19 [IST]
Desktop Bottom Promotion