For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேமிக்கும் பழக்கத்தை குழந்தைக்கு கற்றுக் கொடுக்க சில டிப்ஸ்....

By Ashok CR
|

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை உங்கள் குழந்தைக்கு எடுத்துக் கூறுவது கஷ்டமான ஒன்றாக இருந்தாலும், இன்றைய சூழலில் சேமிக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது அவசியமாகும். சேமிப்பது மிகுந்த நல்ல பழக்கமாகும். வருங்காலத்தின் மீதான பார்வையையும். அதற்கான திட்டங்களையும் ஒருவர் எப்படி தீட்டுகிறார் என்பதை அது காட்டும்.

குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அதற்கு காரணம் அந்த வயதில் தான் அவர்களுக்கு கருத்தமைவுத்திறன் வளரத் தொடங்கும்.

சேமிப்பதைப் பற்றி குழந்தைகளுக்கு இப்படி கற்றுக் கொடுக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்டியல் ஒன்றை பரிசளியுங்கள்

உண்டியல் ஒன்றை பரிசளியுங்கள்

இந்த டிஜிட்டல் காலத்தில் உண்டியல் வைத்திருப்பதெல்லாம் பழமையாகி இருக்கும். ஆனாலும் கூட சேமிப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அது இன்னமும் பயன்படுகிறது. பணத்தை சேமித்து வைத்தால், தங்களுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கான பணம் சேரும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். ஒவ்வொரு மாதமும் அவர்களின் சேமிப்பிற்காக நீங்கள் ஒரு தொகையை அவர்களிடம் வழங்கலாம். இதுவே அவர்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் பாக்கெட் மணியில் இருந்து சேமிக்க சொல்லுங்கள்.

முன்மாதிரியாக விளங்கிடுங்கள்

முன்மாதிரியாக விளங்கிடுங்கள்

வீட்டில் உங்கள் குழந்தைகள் செய்வது எல்லாமே வீட்டில் நீங்கள் செய்வதன் பிரதிபலிப்பே. சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகள் பின்பற்ற வேண்டுமானால், நீங்கள் சேமிப்பில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு உதாரணமாக விளங்க வேண்டும். உங்கள் செயல்களின் மூலமாக, சேமித்த பணத்தை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் உதாரணமாக விளங்கிடுங்கள்.

கதை மூலமாக சொல்லிக் கொடுங்கள்

கதை மூலமாக சொல்லிக் கொடுங்கள்

"உங்கள் குழந்தைக்கு சேமித்து வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்கும் போது, கதை சொல்லும் முறை பயனை அளிக்கும். இந்திய இலக்கியத்தில் பல கதைகள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானாலும் காக்கையும், கற்களும்", என கூறுகிறார் டாக்டர் சோனார்.

சேமிப்பு கணக்கு திறப்பு

சேமிப்பு கணக்கு திறப்பு

உங்கள் குழந்தையின் டீனேஜ் பருவத்தில் அவர்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கை திறந்து கொடுப்பது சிறந்த வழியாகும். உங்கள் குழந்தையை அவர்களாகவே வங்கிக்கு போக சொல்லி அவர்களின் கணக்கில் பணத்தைக் கட்டச் சொல்லி ஊக்குவியுங்கள். அதனால் அவர்கள் உற்சாகம் அடைந்து இந்த பழக்கத்தை தொடர்வார்கள்.

சேமிப்பு வெகுமதி

சேமிப்பு வெகுமதி

சீரான சேமிப்பில் ஈடுபட்டால் உங்கள் குழந்தைக்கு வெகுமதி அளியுங்கள். எவ்வளவு சேமித்துள்ளார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, சேமிக்கும் பழக்கம் தான் இங்கு முக்கியமான ஒன்றாகும். சீரான முறையில் சிறிய தொகையை சேமிக்க குழந்தைகளுக்கு உதவினால், அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் உண்டாகும். இது அவர்களின் வாழ்க்கை முழுவதும் பயனை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Make Saving A Habit With Your Kid

Saving is a very good habit and it shows how one foresees the future and plans for it. There is no ideal age to inculcate saving habits in your child, but it can be taught slowly once the child turns five because from that age, he/she begins to understand concepts. Here's how you can teach your kid how to save...
Desktop Bottom Promotion