For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் குழந்தையிடம் சிறந்த நண்பனாக இருப்பது எப்படி?

By Ashok CR
|

ஒவ்வொரு மனிதனும் பெரிதாக கருதப்படும் சொத்தே தன் பிள்ளைச் செல்வங்களை தான். குழந்தைகள் இல்லாமல் வாழ்க்கை முழுமை அடைவதே இல்லை. பின்னாட்களில் நாம் பெருமை கொள்வதும் நம் பிள்ளைகளாலே. அக்காலத்தில் எல்லாம் பெற்றோர்கள் என்றாலே பிள்ளைகளுக்கு பயம் தான். அதுவும் குறிப்பாக தந்தை என்றால் பயமோ பயம். கண்டிப்புடன் இருப்பவர் தான் தந்தை. ஆனால் அப்படி இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நண்பனாக இருக்க வேண்டும் என பலர் கூறியுள்ளனர். இன்றைய கால கட்டத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

குழந்தைகள் என்பவர்கள் கடவுளின் பரிசு. தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்பதை பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் பல கனவுகள் இருக்கும். அப்படி உங்கள் கனவு நிறைவேற வேண்டும் என்றால், உங்களுக்கு உங்கள் பிள்ளை பெருமை சேர்க்க வேண்டும் ஏற்னால், முதலில் அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல நண்பனாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் நம்பிக்கையை வெல்வது எப்படி? குழந்தையின் மனதில் இடம் பிடிப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்ல. குழந்தைகள் எல்லாம் புத்திசாலிகளாக இருக்கின்றனர். நீங்கள் நடிக்கிறீர்களா அல்லது உண்மையான பாசத்தை பொழிகிறீர்களா என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்.

இப்போது தான் மிகவும் சவாலான விஷயம் வருகிறது. நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Be A Friend With Your Child

You must first know how to be a friend with your child. Only then, you can become a good parent.
Story first published: Monday, December 29, 2014, 18:44 [IST]
Desktop Bottom Promotion