For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் குழந்தைகள் குண்டாகின்றனர் என்று தெரியுமா?

By Super
|

'மழலை சிரிப்பு கொள்ளை அழகு' என்பது போல குழந்தைகள் கன்னத்தில் குழி விழ சிரிப்பதும், கொழு கொழுவென வயதிற்கு மீறிய வளர்ச்சியும் அழகென கொண்டாடப்படுகிறது. இதனாலேயே ஒல்லியாக இருக்கும் குழந்தையை கொழுகொழுவென ஆக்கிவிட வேண்டும் என்று எதையாவது சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இதனால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கொழு கொழு குழந்தைகளின் அதிகப்படியான எடையை கவனிக்காமல் விடுவதால், அவர்கள் சிறு வயதிலேயே பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

உலகளவில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் 30 கோடி குழந்தைகள் உடல் பருமனால் (Obesity) பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெற்றோரின் உணவு வடிவமைப்பே குழந்தைகளை பாதிக்கிறது. எனவே பெற்றோர்கள் உடல் பருமன் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை இங்கே காண்போம்.

சிறு வயதிலேயே குழந்தைகள் பருமனாக இருப்பது கவலைப்படக்கூடிய விஷயம் தான். பொதுவாக பள்ளிக்கு சென்றால் பல குழந்தைகள் பருமனாகவும் உடல் எடை அதிகமாகவும் இருப்பது கண்டால் ஆச்சரியமாக தான் இருக்கும். பல பெற்றோரும் தத்தம் குழந்தைகளின் உடல் பருமன் கொண்டு வருத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.

இப்போது ஏன் சிறு வயதிலே குழந்தைகள் பருமன் ஆகின்றனர் என்கிற காரணங்களையும், அவர்களின் உடல் பருமனைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றிப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுகள் மற்றும் உடற்பயிற்யின்மை

உணவுகள் மற்றும் உடற்பயிற்யின்மை

உடல் பருமன் ஆவதற்கு மிக முக்கியமான காரணம் அதிக கலோரி உட்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல் ஆகும். இந்த நவீன காலத்து குழந்தைகள் உடற்பயிற்சி செய்வதில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு காரணம் தொலைகாட்சி மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகும். அவை அவர்களை நகர விடாமல், ஒரே இடத்திலேயே முடக்கி விடுகிறது. இது போன்ற முடக்கும் விஷயங்களில் மனதை செலுத்தும் குழந்தைகள் எங்கேயும் நகராமல் இருப்பதால் உண்ண, உறங்க என்று பழகிவிடுகின்றனர். எனவே உடலில் எடை அதிகம் கூடி விடுகிறது.

கோபம் மற்றும் உணர்ச்சிவசப்படுதல்...

கோபம் மற்றும் உணர்ச்சிவசப்படுதல்...

சில குழந்தைகள் உணர்ச்சிவசப்பட்டால் அதிகம் உண்பதை கவனித்து இருப்போம். அதிலும் கோபம் கொண்டால் சில குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளும் அதிகம் சாப்பிடுவார்கள்.

கடுமையான டயட்

கடுமையான டயட்

எடுத்தவுடன் தீவிரமான உணவுக் கட்டுப்பாடு மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள் உண்பது என்று ஆக்கி விட கூடாது. ஏனெனில் அது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி விடும். எனவே படிப்படியாக உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

தின்பண்டங்கள்

தின்பண்டங்கள்

முதலில் உடல் எடைக்கு காரணமான தின்பண்டங்களை கண்டுபிடிக்க வேண்டும். பரவலாக உடல் எடையை அதிகரிக்கக்கூடிய உணவுகளான குளிர்பானங்கள், மில்க்ஷேக் வகைகள் மற்றும் வறுத்த உணவுகளான பிரஞ்சு ப்ரை, அதிகப்படியான வெண்ணெய், பாலாடை மற்றும் ரொட்டி வகைகள், பிஸ்கட், ஐஸ் க்ரீம்கள், சாக்லெட், பிட்சா, பர்கர், பாவ் பாஜி போன்ற பண்டங்கள் ஆகும். இந்த உணவுகளையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை ஏதும் ஊட்டச்சத்து சேர்ப்பதில்லை, மாறாக உடலில் தேவையற்ற கலோரிகளையே சேர்க்கின்றன.

காலை உணவை தவிர்த்தல்

காலை உணவை தவிர்த்தல்

சில குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள் மற்றும் அழுவார்கள். அதற்காக காலை உணவை தவிர்ப்பதும் தவறான காரியம். ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு தேவையான சக்தியில் பெரும் பகுதியை அளிக்கும். ஆகவே காலை உணவை தவிர்த்தல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுப்பதையும் தடுத்துவிடும். இந்த நிலை குழந்தைகளின் ஆற்றலை குறைத்து, அவர்களது செயல்பாடுகளை மந்தப்படுத்தி, உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.

இட்லி, தோசை கொடுக்கவும்

இட்லி, தோசை கொடுக்கவும்

குழந்தைகள் தினமும் காலை உணவு எடுத்து கொள்கின்றனரா என்று கவனிக்க வேண்டும். மேலும் வீட்டில் செய்யும் உணவுகளான இட்லி, தோசை போன்ற உணவுகளே அவர்கள் எடுத்து கொள்ளும் உணவில் அதிகம் இருக்க வேண்டும். அதிக அளவில் சர்க்கரை உள்ள கார்ன் ப்ளாக்ஸ் (Corn Flakes) போன்ற உணவுகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான தின்பண்டங்கள்

ஆரோக்கியமான தின்பண்டங்கள்

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் மூன்று வேளை ஆரோக்கியமான தின்பண்டங்களான முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள், சாலட் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்

வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்

பேக்கரி பொருட்கள் மற்றும் வறுத்த உணவுகள் மூலம் உடலில் உருவாகும் கொழுப்புகளை காட்டிலும், ஆரோக்கியமான தின்பண்டங்கள் மூலம் உருவாகும் கொழுப்புகளே உடலுக்கு நல்லது.

இனிப்புக்களை தவிர்க்கவும்

இனிப்புக்களை தவிர்க்கவும்

இனிப்புகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் பிரியப்பட்ட உணவை, 'இந்த காரியம் செய்து முடித்தால் வாங்கி தருவேன்' என்று கூறி அதனை லஞ்சமாக செய்யக்கூடாது.

நிறைய தண்ணீர் பருக கொடுக்கவும்

நிறைய தண்ணீர் பருக கொடுக்கவும்

குழந்தைகள் நிறைய தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் எந்த அளவு தண்ணீர் பருகுகின்றனர் என்பதை அவர்கள் சிறுநீர் கழிக்க எத்தனை முறை டாய்லெட் செல்கிறார்கள் என்பதை கொண்டு கணித்து விடலாம்.

குடும்பத்தினர் சகஜமாக பழக வேண்டும்

குடும்பத்தினர் சகஜமாக பழக வேண்டும்

உடல் பருமனுள்ள குழந்தைகள், பெற்றோர்கள் தங்களை வேறுபடுத்தி பார்ப்பதாக உணர்ந்து விட கூடாது. அந்த அளவிற்கு குடும்பத்தினர் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள்

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள்

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளை பற்றி அறிவுறுத்த வேண்டும். அவர்களை பள்ளியில் விளையாட்டு அணிகளில் சேர ஊக்குவிக்க வேண்டும்.

தொலைக்காட்சியை தவிர்க்கவும்

தொலைக்காட்சியை தவிர்க்கவும்

தொலைக்காட்சி பார்ப்பதை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் இம்மாதிரியான பழக்கங்களுக்கு குறைவான மற்றும் நிலையான நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கூறப்பட்ட குறிப்புகளை ஒவ்வொன்றாக குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அவர்கள் குண்டாக இருக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருக்கக்கூடாது. அது அவர்கள் மனதில் இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். மாறாக நல்ல உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is your child growing fat?

Obesity in children is the main cause for worry now. When I go to address children in schools, it is unbelievable to see the large number of children who are obese or just overweight. Several parents are very concerned about their child growing fat. Let us have a look why kids are getting fatter?
Desktop Bottom Promotion