For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் கை வைத்தியங்கள்!!!

By Maha
|

குழந்தைகளுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். ஏனெனில் அவர்கள் கண்ட கண்ட உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுவதால், அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுக்கிறோம். அவ்வாறு வாங்கிக் கொடுக்கும் உணவுப் பொருட்களால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும், மலச்சிக்கல் ஏற்படும்.

இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது, குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு, அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும். மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன.

இப்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் சில கைவைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த கைவைத்தியங்களை படித்து, உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதன் படி செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

ஒரு டம்ளர் பாலில் 1-2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் உள்ள குழந்தைக்கு கொடுத்தால், மலச்சிக்கல் குணமாகும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவை மலச்சிக்கலை சரிசெய்யும் குணம் கொண்டவை. குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். ஆகவே முட்டைக்கோஸ், பீட்ரூட், பூசணிக்காய், பசலைக் கீரை, கேரட் போன்றவற்றை குழந்தைகளின் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதோடு, மலச்சிக்கல் இருந்தால், அது சரியாகிவிடும்.

ஆளிவிதை

ஆளிவிதை

குழந்தைகளுக்கு உள்ள மலச்சிக்கலை ஆளிவிதை சரிசெய்துவிடும். அதற்கு ஆளிவிதையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

பெரிய குழந்தையாக இருந்தால், அவர்களுக்கு ஒரு டம்ளர் பாலில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குடிக்க கொத்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.

தண்ணீர்

தண்ணீர்

சில சமயங்களில் குழந்தைகளுக்கு உடல் வறட்சி இருந்தாலும், மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலும் ஒரு சிறந்த நிவாரணியாக இருப்பது தான் வாழைப்பழம். அதிலும் வாழைப்பழத்தை, ஒரு டம்ளர் சூடான பாலுடன் கொடுக்க வேண்டும்.

ஓமம்

ஓமம்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து, மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால், இந்த பிரச்சனை உடனே குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Treat Constipation In Kids: Remedies

Parents should not get too worried if their kid suffers from constipation. Giving the right foods and following the perfect kids diet is the best remedy to treat constipation. This condition can be treated with the help of some home remedies. Here are some other home remedies that can treat constipation among kids.
Desktop Bottom Promotion