For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான 20 அடிப்படை உணவு பழக்கவழக்கங்கள்!!!

By Super
|

குழந்தைகளை வளர்க்கும் போது, பெற்றோர்களும் அவர்களுடன் சேர்ந்து வளர்கிறார்கள். குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் தினம் தினம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. அதிலும் குழந்தை இந்த பூமியில் கால் பதித்தவுடனே பெற்றோர்களின் புதிய பொறுப்பு தொடங்கிவிடுகிறது. குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான கட்டமாகும்.

குழந்தைகளை வளர்ப்பது எளிதான காரியம் கிடையாது. தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படி பெற்றோர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை தான் குழந்தைகளை உண்ண வைப்பது. அவ்வாறு சாப்பிட வைக்கும் போது, குழந்தைகள் நிறைய அடம் பிடிப்பார்கள். எனவே குழந்தைகளுக்கான ஆரோக்கியமான அடிப்படை உணவுப் பழக்கவழங்கங்கள் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி வந்தால், குழந்தை நல்ல உணவுப் பழக்கத்துடன், நன்கு ஆரோக்கியமாக வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிடித்த உணவுகளை சமைக்கவும்

பிடித்த உணவுகளை சமைக்கவும்

வீட்டில் அனைவரும் விரும்பும் உணவை தேர்ந்தெடுங்கள். அவற்றில் குழந்தைகளுக்கு விரும்பாத ஓரிரு உணவையும் சேர்த்து விடுங்கள். இதனால் அவர்களால் அதனை கண்டு பிடிக்க முடியாது.

உணவை அளவாக கொடுக்கவும்

உணவை அளவாக கொடுக்கவும்

பொதுவாக குழந்தைகளுக்கு சாதம் கொடுக்கும் போது, அவர்களுக்கு முதலில் அளவாக உணவைப் பரிமாறவும். இதனால் உணவு வீணாவதைத் தடுக்கலாம்.

குழந்தையின் நண்பர்களை அழைக்கவும்

குழந்தையின் நண்பர்களை அழைக்கவும்

சில குழந்தைகள் உணவு உண்ணும் போது அடம்பிடிப்பார்கள். அவ்வாறு குழந்தைகள் அடம் பிடிக்காமல் இருக்க வேண்டுமெனில், குழந்தை உண்ணும் போது, குழந்தையின் நண்பனை அழைத்து உடன் இருக்க வையுங்கள். அப்படி அவர்கள் கூட இருக்கும் போது, குழந்தைகளும் சமத்தாக அவர்களுடன் உணவை உண்ண வாய்ப்பு உள்ளது.

குழந்தைக்கு பிடித்தவரை அருகில் இருக்க வைக்கவும்

குழந்தைக்கு பிடித்தவரை அருகில் இருக்க வைக்கவும்

குழந்தைக்கு பிடித்த ஒரு நபரை உண்ணும் போது அருகில் இருக்கச் சொல்லுங்கள். அது குழந்தையின் மாமா, நண்பன் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு சில நேரம் பிடித்தமான நபர் உடனிருக்கும் போது, குழந்தைகள் அடம் பிடிக்காமல் உணவை உண்ணுவார்கள்.

பிடிக்காததை வற்புறுத்த வேண்டாம்

பிடிக்காததை வற்புறுத்த வேண்டாம்

குழந்தைகளுக்கு பிடிக்காத உணவை சாப்பிடுமாறு வற்புறுத்தாதீர்கள்.

விளையாடும் போது தட்டை எடுத்துவிடவும்

விளையாடும் போது தட்டை எடுத்துவிடவும்

குழந்தைகள் உணவுடன் விளையாட ஆரம்பித்தால், சத்தம் போடாமல் தட்டை எடுத்து விடுங்கள்.

குழந்தையிடம் பேசவும்

குழந்தையிடம் பேசவும்

உணவு உண்ணும் நேரத்தை கலகலப்பாக வைத்திருக்க குழந்தையிடம் பேச்சுக் கொடுங்கள்.

ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்

ஸ்நாக்ஸ்களை தவிர்க்கவும்

உணவு நேரத்தை ஒட்டி நொறுக்குத் தீனிகள் மற்றும் பானங்கள் கொடுப்பதை தவிர்க்கவும். அதனால் குழந்தைக்கு பசி ஏற்பட்டு நன்றாக உண்ணக் கூடும்.

தண்ணீர் மற்றும் ஜூஸ் கொடுக்கவும்

தண்ணீர் மற்றும் ஜூஸ் கொடுக்கவும்

குழந்தை உணவு உண்ட பிறகு தண்ணீர் அல்லது பழச்சாறை கொடுங்கள். இது அவர்களின் பசியை பாதிக்காமல் இருக்கும்.

புதிய உணவுகளை முயற்சிக்கவும்

புதிய உணவுகளை முயற்சிக்கவும்

குழந்தை பசியுடன் இருக்கும் போது புது வகை உணவுகளை அவர்களுக்கு கொடுங்கள். இதனால் பல புதிய சுவைகள் அவர்களுக்கு பழக்கமாகும்.

பிடித்த உணவுகளை அதிகம் கொடுக்கவும்.

பிடித்த உணவுகளை அதிகம் கொடுக்கவும்.

குழந்தைக்கு பிடித்த உணவு வகைகளில் குறைந்தது ஒரு வகையையாவது குழந்தையின் உணவில் சேருங்கள். ஒரு புதிய சட்டம் ஒன்றை போடுங்கள். உணவு மேஜை மேல் இருக்கும் அனைத்து உணவையும் சிறிதளவு ருசித்துப் பார்க்க வேண்டும் என்பது தான் அந்த சட்டமாக இருக்க வேண்டும். இதனால்குழந்தை அனைத்தையும் ருசித்து பார்க்கும். ஆனால் அது உண்ணும் அளவை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

பால் கொடுக்கவும்

பால் கொடுக்கவும்

உணவுக்கு பதிலாக பால் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். ஏனெனில் இது நல்ல உணவு பழக்கம் இல்லை. அதனால் அதை தவிர்க்க வேண்டும்.

ஒன்றாக உணவை சமைக்கவும்

ஒன்றாக உணவை சமைக்கவும்

ஒட்டு மொத்த குடும்பத்தையும் உணவு தயாரிப்பதில் ஈடுபடுத்துங்கள்.

பிபி குழந்தைகளின் உணவில் கவனமாக இருக்கவும்

பிபி குழந்தைகளின் உணவில் கவனமாக இருக்கவும்

இரத்தக் கொதிப்பு இல்லாத குழந்தைகளுக்கு சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டியதில்லை. அதற்கு பதில் சாஸ், பேக்ட் உணவுகள் மற்றும் மோனோசோடியம் க்ளுடோமேட் சேர்த்துள்ள உணவுகளை தவிர்க்கவும்.

ஆரோக்கியமான தீனிகள்

ஆரோக்கியமான தீனிகள்

ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளான பழங்கள், ஆக்கத்திறனை உண்டாக்கும் சாலட்கள் மற்றும் உப்பு சேர்க்காத கடலை பருப்புகள் போன்றவைகளை மட்டுமே வீட்டில் வைத்திருக்கவும். இதனால் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பழங்களை அதிகம் கொடுக்கவும்

பழங்களை அதிகம் கொடுக்கவும்

உணவு நேரத்திற்கு முன் குழந்தைகளுக்கு பசி எடுத்தால், ஜங்க் உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக, பழங்கள் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை கொடுக்கவும்

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை கொடுக்கவும்

அவித்த சோளம், பாப் கார்ன், காய்கறிகள் சேர்த்த பன்னீர் சாண்ட்விச், கொண்டைக்கடலை, தயிர் மற்றும் மோர் போன்ற குறைவான கலோரிகள் நிறைந்த உணவு வகைகளை கையோடு வைத்திருங்கள்.

முன்பே உணவை யோசித்துக் கொள்ளவும்

முன்பே உணவை யோசித்துக் கொள்ளவும்

உங்கள் குழந்தைக்கு தயார்படுத்த வேண்டிய உணவை முன் கூட்டியே யோசித்து கொள்ளுங்கள். இது கடைசி நிமிட டென்ஷனை குறைக்கும்.

பெற்றோர்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கவும்

பெற்றோர்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கவும்

உண்ணுவதை ஒரு சந்தோஷமான செயலாக மாற்றுங்கள். ஆரோக்கியமான உணவை உண்டு, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல எடுத்துக்காட்டாக விளங்குங்கள். தங்களுடைய ரோல் மாடல்களை தான் குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

விளையாட்டுக்களில் ஈடுபடவும்

விளையாட்டுக்களில் ஈடுபடவும்

வீட்டு உறுப்பினர்களோடு நடை போன்ற செயல்களில் ஈடுபடுங்கள். இது தொலைக்காட்சி பார்ப்பதையும், கணிப்பொறியில் விளையாடுவதையும் வெகுவாக குறைக்கும். அதிலும் மொத்த குடும்பமும் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வந்தால், உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கப் போவது உறுதி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The 20 basic healthy eating guidelines for kids

Parenthood is a learning process right from the moment you first hold your precious bundle. Here are few best guidelines for parents.
Desktop Bottom Promotion