For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய தலைமுறை தாய்மார்களுக்கான குழந்தை வளர்ப்பு டிப்ஸ்...

By Super
|

திருமணத்திற்கு பிறகு ஓர் ஆண்டு காலம் வரை தம்பதிகளுக்கு நடுவில் அன்னியோநியமும், காதலும் அளவுக்கு அதிகமாக இருக்கும். அவர்கள் வசிக்கும் வீடே அன்பால் காதலால் நிறைந்திருக்கும். ஆனால் உங்கள் வீடு குழந்தைகளால் நிறைந்திருக்கிறது என்றால், வீட்டின் ஒட்டு மொத்த சூழலும் மாறிவிடும். அப்போது வீட்டில் இருந்த சந்தோஷம் மேன்மேலும் அதிகரித்து ஆனந்தம் பெருகும்.

குழந்தைகள் துருதுருவென செய்யும் சேட்டைகளால் தான் நம் வீட்டிற்கே வெளிச்சம் உண்டாகிறது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், மன நிறைவையும் மன நிம்மதியையும் அளிக்க தவறாது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வளர்க்கவும் தங்களின் பெற்றோர்களின் உதவியை நாடியது எல்லாம் அந்தக் காலம். பேரக் குழந்தைகளை நல்ல படியாக பார்த்துக் கொண்டு, அவர்களிடம் அதீத அன்பை பொழிவதே தாத்தா பாட்டிமார்களின் தலையாய கடமையாக இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. இன்றைய தாய்மார்களோ, தங்கள் வேலைகளில் எப்போதும் மூழ்கி போய்விடுவதால், தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

அதனால் இந்த பிரச்சனையை போக்க, இன்றைய தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு பற்றிய சில டிப்ஸ்களை நாங்கள் அளிக்க உள்ளோம். அவைகளை பார்த்து பின்பற்றி, உங்கள் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக நீங்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

Parenting Tips For New Generation Mums

குழந்தைக்காக இருங்கள்

இன்றைய உலகம் ஒரு சுயநலம் மிக்க உலகமாகவே மாறிவிட்டது. பெரும்பாலானோர் அவர்களை பற்றி மட்டும் தான் எண்ணுகிறார்கள். 'தான்' என்று வரும் போது, தங்களுக்கு பிடித்தவர்களை பற்றி கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் குழந்தை என்று வந்துவிட்டால், அவர்களை தவிர இந்த உலகத்தில் முக்கியமானது என்று வேறு எதுவுமே இல்லை. அவர்கள் நலனுக்காக தான் இப்படி வேலை செய்கிறேன் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல. உங்கள் குழந்தைக்கென எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும். இது அவர்களுக்கும் உங்களுக்குமான இறுக்கத்தை அவர்களின் மழலை பருவத்தில் இருந்தே அதிகரித்துவிடும்.

பணத்தின் முக்கியத்துவம்

பணத்தின் அருமை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நாணயம் மற்றும் ரூபாயின் மதிப்பைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வயதை அடைந்ததும் தான் உண்ணும் சாக்லெட்டின் விலையை பற்றி கண்டிப்பாக குழந்தை தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதே இதை பற்றி உங்கள் குழந்தை கேட்கிறதா?

குடும்பத்திற்கான நேரம்

ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் குறைந்தது 3 மணிநேரமாவது ஒன்றாக செலவிட வேண்டும். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கூட, இதனை செய்ய தவறக் கூடாது. இன்றைய தாய்மார்களும் தந்தைமார்களும் தங்கள் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் அடிப்படையை பற்றி குழந்தைக்கு சொல்லி கொடுக்க தாய் மற்றும் தந்தை என இருவருமே தேவை.

சமுதாயத்தோடு ஒன்றி இருத்தல்

இன்றைய தலைமுறை தாய்மார்கள் பார்ட்டிகளுக்கு செல்லவும், நண்பர்களுடன் பொழுதை கழிக்கவும் அதிகமாக விரும்புகின்றனர். இருப்பினும் பார்ட்டிக்கு செல்லும் போது, குழந்தைகள் நிறைந்துள்ள பார்ட்டிகளுக்கே செல்ல வேண்டும். அதனால் மற்ற குழந்தைகளுடன் எப்படி பழகி நண்பர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

பெரிய கனவாக காணுங்கள்

பெரிதாக ஆன பின்பு என்னவாக ஆகப்போகிறாய் என்று உங்கள் 3 வயது குழந்தையை கேட்கும் போது, அதற்கு அவர்கள் அளிக்கும் பதில் கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகையை உண்டாக்கும். இன்றைய தலைமுறை தாய்மார்களுக்கு குழந்தை வளரப்பதர்கான முக்கிய டிப்ஸ் இது - உங்கள் குழந்தையை பெரிதாக கனவு காண விடுங்கள். அந்த கனவு நிறைவேற அவர்களுக்கு அனைத்து விதத்திலும் பக்கபலமாக இருங்கள்.

குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்

குழந்தைகளை ஊக்கப்படுத்துவது நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான குழந்தை வளர்ப்பு டிப்ஸாகும். இன்றைய தாய்மார்கள் தங்கள் குழந்தையை அதன் சின்ன வயதிலுருந்தே ஊக்கப்படுத்த தொடங்க வேண்டும். இந்த ஊக்கம் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களின் சுய மதிப்பை வளர்த்துவிடும்.

இவ்வளவு தான் குழந்தை வளர்ப்பு என்றில்லை. இன்னமும் கூட தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்கள் இருக்கத் தான் செய்கிறது. மேற்கூறிய டிப்ஸ்களை பின்பற்றினால், உங்கள் குழந்தை ஒரு ஆரோக்கியமான மனநிலையுடன் வளரும்.

English summary

Parenting Tips For New Generation Mums

We have some of the best parenting tips for the new generation mum. Take a look, follow these parenting tips and see your problems slowly dissolve away.
Desktop Bottom Promotion