For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுட்டித்தனமான குழந்தைகளுக்கான டயட் டிப்ஸ்....

By Maha
|

குழந்தைகள் என்றால் நிச்சயம் சுட்டித்தனம் செய்வார்கள். ஆனால் அந்த சுட்டித்தனமே அளவுக்கு அதிகமானால், அவர்கள் மீது கோபம் தான் அதிகரிக்கும். சில குழந்தைகள் சிறுவயதிலிருந்தே மிகவும் சுறுசுறுப்பாகவும், சுட்டித்தனமானவர்களாகவும் இருப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு சோர்வு மற்றும் கவனம் என்பதே இருக்காது. இதற்கு காரணம், அவர்களது மூளை அளவுக்கு அதிகமாக செயல்படுவதே ஆகும். எனவே அத்தகைய குழந்தைகளின் சுட்டித்தனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, அவர்களை அடித்து கண்டிப்பதற்கு பதிலாக, அவர்களது உணவில் சற்று கவனத்தை செலுத்த வேண்டும்.

அதிலும் புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்தால், மூளையின் செயல்பாடு அளவாக இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய புரோட்ன் கிடைத்து, அவர்களின் அளவுக்கு அதிகமான சுறுசுறுப்பும் சற்று குறையும். குறிப்பாக சில புரோட்டீன் நிறைந்த உணவுகளான நட்ஸில் பாதாம் மூளைக்கு மிகவும் நல்லது. இதுப் போன்று வேறு சில உணவுகளும் உள்ளன. இப்போது மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய டயட் டிப்ஸை கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி குழந்தையின் அதிகப்படியான மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்

டயட்

சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளின் சேட்டையை குறைப்பதில் டயட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதிலும் ஆரோக்கிய உணவுகளான பீன்ஸ், இறைச்சி, முட்டை, சீஸ் மற்றும் நட்ஸ் போன்றவற்றைக் கொடுப்பது நல்லது.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

இந்த உணவுகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. எனவே ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகளான மீன்களில் சால்மல், சூரை மீன், வால்நட் போன்றவற்றை கொடுக்கவும்.

அமைதிப்படுத்தும் உணவுகள்

அமைதிப்படுத்தும் உணவுகள்

அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் மனதை அமைதிப்படுத்தும் உணவுகளை கொடுக்க வேண்டும். அதிலும் மக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் மனதை அமைதிப்படுத்தும். மேலும் இவை மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி, கவனத்தை அதிகப்படுத்தும். உதாரணமாக, அவகேடோவில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அவை இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் நிறமூட்டப்பட்ட உணவுகள் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, அட்ரீனலினில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவற்றை அறவே தவிர்த்து, அதற்கு பதிலாக பழங்களை கொடுப்பது நல்லது.

இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்தல்

இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்தல்

நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தைகள் இனிப்புக்களை விரும்பி சாப்பிடுவார்கள். இவை இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரித்துவிடுவதால், அவர்கள் மீண்டும் சுறுசுறுப்பாகின்றனர். எனவே உடலின் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைப்பதற்கு, இனிப்பு பொருட்களை தவிர்த்து பழங்களை சாப்பிட வைத்தால், அது உடல் முழுவதற்கும் நன்மை விளைவிப்பதோடு, நீரிழிவு ஏற்படுவதையும் தடுக்கும்.

ஆரோக்கிய சாலட்

ஆரோக்கிய சாலட்

அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு பீச், மாம்பழம், பெர்ரி, ஆரஞ்சு போன்ற பழங்களையும், கேரட், முட்டைகோஸ் போன்றவற்றையும் சேர்த்து ஒரு சாலட் போன்று செய்து கொடுக்கலாம்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள தானியங்களால் ஆன உணவுகளை அதிகம் கொடுப்பது நல்லது.

கால்சியம் உணவுகள்

கால்சியம் உணவுகள்

சுறுசுறுப்புடன் இருக்கும் குழந்தைகளின் உடலுக்கு போதிய கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சுறுசுறுப்புடன் தான் இருப்பார்களே தவிர, வலிமையுடன் இருக்கமாட்டார்கள். எனவே பால், முட்டை போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும். இதனால் நன்கு வலுவோடு இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Calm Hyperactive Kids

Certain foods that are rich in proteins like nuts especially almonds are good for the brain. To decrease the symptoms that hyperactive kids have, here are few diet tips that a mother should follow.
Desktop Bottom Promotion