For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க சில டிப்ஸ்...

By Maha
|

குழந்தைகள் வளர வளர அவர்களது விளையாட்டுத்தனத்தால், எதிலும் ஒருவித சரியான ஈடுபாடு மற்றும் கவனம் இருக்காது. ஆனால் இப்படி அவர்களது கவனக்குறைவால், அவர்கள் பள்ளி செல்லும் போது மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளி செல்லும் முன்பிருந்தே அவர்களின் கவனத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தால், பள்ளி செல்லும் போது படிப்பில் அதிகம் கவனத்தை செலுத்துவார்கள்.

இல்லாவிட்டால், படிப்பு என்றாலே எரிச்சலுக்கு தான் உள்ளாவார்கள். ஆகவே சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் மற்றும் புதியதை கற்றுக் கொள்ளும் எண்ணத்தை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். இப்படி ஆரம்பத்திலேயே கஷ்டப்பட்டால், பிற்காலத்தில் கஷ்டப்பட வேண்டிய அவஸ்தை இருக்காது.

சரி, இப்போது குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் சில வழிகளைப் பார்ப்போம்.

Help Your Toddler Concentrate

* சிறு வயதிலிருக்கும் போதே குழந்தைகளுக்கு புத்தகங்களை படித்து காண்பித்தால், குழந்தைகளின் கவனம் அதிகரிக்கும் என்பது தெரியுமா! மேலும் நிபுணர்களும் குழந்தைகளுக்கு புத்தகத்தை படித்து காண்பிப்பதால், அவர்களது கற்பனைத் திறன் அதிகரிப்பதோடு, அவர்களது கவனமும் அதிகரிக்கும் என்று கூறுகின்றார்கள்.

* உள்ளரங்க விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்தினாலும் கவனம் அதிகரிக்கும். ஏனெனில் அவர்களின் மூளைக்கு அதிக செயல்பாடு கொடுப்பதால், அவர்களுக்கு யோசிக்கும் திறன் வளரும். குறிப்பாக செஸ், கேரம், பாம்பு போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடுத்த வேண்டும்.

* குழந்தைகளை ஒரு இடத்தில் உட்கார வைத்து, அவர்களுக்கு முன் மெழுகுவர்த்தியை வைத்து, அதனை 3 நிமிடம் அசையாமல் உற்று கவனிக்குமாறு சொல்ல வேண்டும். அவ்வாறு உட்காராவிட்டால், அவர்களிடம் இப்படி செய்தால், உனக்கு சாக்லெட் கொடுப்பேன் என்று சொல்லுங்கள்.

* மெழுகுவர்த்தி முறையைப் போன்றே, குழந்தைகளின் முன் நாணயத்தை வைத்து, அதனை தொடர்ச்சியாக 5 நிமிடம் பார்க்குமாறு சொல்லலாம். இதனாலும் கவனம் அதிகரிக்கும்.

* குழந்தைகளுக்கு பாட்டு கேட்க பிடித்தால், அவர்களுக்கு பிடித்த பாடலை கேட்க விடுங்கள். ஏனெனில் இது கூட பெரிதும் உதவியாக இருக்கும்.

* குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைக் கொடுக்க வேண்டாம். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, எதிலும் ஈடுபாடு இல்லாதவாறு செய்துவிடும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களையோ அல்லது சர்க்கரையையோ அதிகம் சாப்பிடக் கொடுக்காதீர்கள். இதனால் அவர்களது பற்கள் சொத்தை ஆவதோடு, அவர்களை சோர்வடையச் செய்துவிடும்.

* குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க, அவர்களுக்கு நல்ல கதைகளைச் சொல்லி, அவர்களின் மனதில் நல்ல எண்ணத்தை பதிய வையுங்கள்.

முக்கியமாக குழந்தைகளை எக்காரணம் கொண்டும் வற்புறுத்தாதீர்கள். இது அவர்களின் மனதில் கோபம், எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

English summary

Help Your Toddler Concentrate

Parents, take a look at some of the ways in which you can improve your toddlers concentration. These are some of the best and easy ways to help your little one concentrate.
Story first published: Friday, November 8, 2013, 18:19 [IST]
Desktop Bottom Promotion