For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான முறையில் குழந்தைகளின் உடல் எடையை குறைப்பதற்கான டிப்ஸ்...

By Ashok CR
|

உடல் பருமனாக இருந்தால் அது நம் வாழ்க்கையில் பல கடுமை வாய்ந்த அனுபவங்களை ஏற்படுத்தும். அது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மன ரீதியான உளைச்சலையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் உடல் எடை அளவுக்கு அதிகமாக கூடுவதற்கு பல காரணங்கள் உள்ளது. மரபியல், அளவுக்கு அதிகமாக உணவுகளை உட்கொள்ளுதல் அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகள் என்று ஏதாவது ஒரு காரணத்தினால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கலாம். இன்றைய சூழலில் குறைவான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் கூட இதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தை ஆரோக்கியமான உடல் எடையை அடைய வைப்பது உங்களது கடமையாகும். அதனால் உங்கள் குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கான டிப்ஸ்களை இன்றிலிருந்தே பின்பற்ற தொடங்குங்கள்.

weight loss kid

குழந்தையின் வளர்ச்சியை அவர்களின் எடை மற்றும் உயரத்தை மையமாக வைத்து கவனிக்குமாறு அவர்களுக்கான உடல் எடை குறைப்பு டிப்ஸ் வலியுறுத்துகிறது. இதனை அடிப்படையாக வைத்து உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு டிப்ஸில் முடிவுகள் எடுக்க முடியும். உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பதென்பது குழந்தைகள் விஷயத்தில் நடக்காத ஒன்றாகும். அதனால் உங்கள் குழந்தைகளின் உடல் எடையை குறைக்க செய்ய வேண்டுமானால், பெரியவர்களுக்கு பின்பற்றும் முறைகளை தவிர்த்து வித்தியாசமாக யோசித்தாக வேண்டும்.

குழந்தைகளின் உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த வழி அவர்களின் வயதை பொறுத்து மாறுபடும். உங்கள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்திட உங்களுக்காக சில டிப்ஸ்களை வழங்க உள்ளோம். அவைகளை பின்பற்றினால் அதிக சிரத்தை எடுக்காமல் நல்ல பயனை அடையலாம்.

வல்லுனர்களின் அபிப்பிராயம்

வல்லுனர்களிடம் மருத்துவ ரீதியான ஆலோசனையை பெறுவது உங்கள் குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கு ஒரு முக்கியமான வழியாகும். ஏதாவது மருத்துவ சிக்கலால் தான் உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இப்படி வல்லுனர்களின் ஆலோசனையை பெறுவதால் குழந்தைகளின் சரியான எடையை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும்.

எடை பராமரிப்பு

திடீரென உடல் எடை குறைப்பில் இறங்குவதற்கு பதில், உங்கள் குழந்தை தற்போதுள்ள உடல் எடையை சிறிது காலத்திற்கு தக்க வைக்க முற்படுங்கள். இந்த இடத்தில் இருந்து உங்கள் குழந்தை மேலும் கூடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பல வழிகளை கையாண்டு உங்கள் குழந்தையின் உடல் எடையை குறைக்க வழி செய்யலாம்.

உங்கள் குழந்தையின் உணவக பட்டியலில் கவனம் தேவை

குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கு அவர்கள் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது ஒரு முக்கயமான வழக்கமாகும். சர்க்கரை கலந்த பானங்கள், ஜங்க் வகை உணவுகள், பதப்படுத்தப்பட்டு டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள உணவுகள் மற்றும் அதிக கலோரிகள் அடங்கிய நொறுக்குத் தீனிகள் போன்ற சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் குழந்தையின் உடல் எடை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

உடற்சார்ந்த செயல்களை அதிகரிக்கவும்

உங்கள் குழந்தைகளை கண்டிப்பாக பெரியவர்கள் செல்லும் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்ய வைக்க முடியாது. ஆனால் அதற்கு பதில் அவர்களை உடற்சார்ந்த செயல்களில் ஈடுபடுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே சென்று விளையாட சொல்லுங்கள். இதனால் அவர்கள் உடலில் இருந்து பல கலோரிகள் எரியும்.

உணர்வு பூர்வமான ஆதரவு

குழந்தைகளின் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்காகவே தவிர தோற்றத்துக்காக இல்லை என்பதை முதலில் அவர்களுக்கு விளங்கச் செய்யுங்கள். சரியான திட்டங்களை பின்பற்றி அதனை ஒழுங்காக செயல்படுத்தினால் குறைவான காலத்தில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது சுலபம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

சேர்ந்து செய்யுங்கள்

நீங்கள் அதிக உடல் எடையுடன் இருக்கிறீர்களோ இல்லையோ, உடற்பயிற்சி செய்வது எப்போதுமே உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதனால் உங்கள் குழந்தைகள் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் போது நீங்களும் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அவர்களுடன் சேர்ந்து விளையாடலாம், அல்லது உடற்பயிற்சி செய்யலாம் அல்லது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு நடை கூட கொடுக்கலாம். குழந்தைகள் உடல் எடை குறைப்புக்கு இந்த ஆதரவும் கூட ஒரு சிறந்த வழியாக திகழும்.

English summary

Healthy Weight Loss Tips For Kids

The best approach to encourage weight loss in kids may vary depending on the age of your kid. Here are some healthy weight loss tips for kids that will give you a satisfactory result without much effort.
Story first published: Thursday, December 26, 2013, 19:05 [IST]
Desktop Bottom Promotion